Friday, May 6, 2022

கிறிஸ்துவ முஸ்லிம் பள்ளி ஆசிரியர்கள் டெட் தகுதித் தேர்ச்சி கட்டாயம் இல்லை

பொது மக்கள் வரிப்பணத்தில் கிறிஸ்துவ முஸ்லிம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தகுதியில்லாத‌ ஆசிரியர்கள் கீழ் படித்தால் தவறு இல்லை என நீதிபதிகள் நினைக்கிறார்களா?

தமிழக அரசு தரப்பு வக்கீல்- தகுதித் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு சரியான கல்வி தர முடியும் என வாதிட்டு இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வி தரமாக இருக்க தமிழக அரசு மேல் முறையீடு செய்யவேண்டும் எனப் பெற்றோர் எதிர்பார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்  கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://tamil.news18.com/news/tamil-nadu/teachers-eligibility-test-is-not-mandatory-for-the-minority-institution-says-chennai-high-court-sal-741346.html

 
கடந்த 2012ம் ஆண்டு, பூந்தமலையில் உள்ள ஆர்.சி.எம் சிறுபான்மை பள்ளியில் பள்ளி உதவியாசிரியராக (B.T Assistant - Maths) மனுதாரர் பணியமர்த்தப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் அவருக்கு அளிக்கப்பட்டுளளது.

இதற்கிடையே, இப்பள்ளி கடந்த 2016ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம், மனிதாரரை மீண்டும் உதவியாசிரியராக நியமித்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் அனுமதியுடன் 2013 முதல் 2016 வரை ஊதிய உயர்வும் மனுதாரர் வாங்கியுள்ளார். மேலும், 2016ம் ஆண்டு தனது இரண்டாவது  குழந்தை பிறக்கும் போது ஆறு மாத மகப்பேறு விடுமுறைக்கு பள்ளி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி ஊதிய உயர்வையும், மகப்பேறு ஊதியத்தையும் திருப்பி செலுத்துமாறு மனுதாரருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ’இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை காலிப் பணியிடத்தில் நிரப்பப்பிடவேண்டும் எனவும், சிறுபான்மை பள்ளிகளுக்கு இலவச கட்டாயக் கல்விச்சட்டம் பொருந்தாது என இராஜஸ்தான் பிரமாதி கல்வி நிறுவனம் Vs மத்திய அரசு வழக்கில் 06.05.2014 அன்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பாணை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் சிறுபான்மை பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது" என்று தெரிவித்தது.



மேலும், ஊதியத்தை திரும்ப கேட்கும் மாவட்ட கல்வி முதன்மை அதிகாரியின் உத்தரவு சட்டரீதியற்றது. செல்லாது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.  

Published by:Salanraj R
First published: 



 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா