Friday, May 13, 2022

கிறிஸ்தவ பாதிரி ஜோசப் ராஜா போக்சோவில் கைது- மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார் .

போக்சோவில் கிறிஸ்தவ  பாதிரி ஜோசப் ராஜா கைதுமன வளர்ச்சி குன்றிய 14 வயதி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர்,



 மன வளர்ச்சி குன்றிய சிறுமியிடம்  பாலியல் வன்புணர்வு  கிறிஸ்தவ பாதிரி.ஜோசப் ராஜா போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் இருக்கிறது. இங்கு மதபோதகராக இருப்பவர் ஜோசப் செல்லையா என்பவரது மகன் ஜோசப் ராஜா. 49 வயதாகும் இவர்தான், மன வளர்ச்சி குன்றிய 14 வயதி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதாவது, எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அந்த மன வளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி இருக்கிறார். வீட்டில் தாய் இல்லாததைக் கண்ட அச்சிறுமி, சர்ச்க்குச் சென்றிருக்கலாம் என்று கருதி, தாயைத் தேடி வந்திருக்கிறார். அப்போது, கிறிஸ்தவ சர்ச் பாதிரி ஜோசப் ராஜாஅவரை நைசாகப் பேசி அழைத்துச் சென்ற, அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இரவு வீடு திரும்பிய சிறுமி, அழுது கொண்டே ஏதோ சொல்ல முற்பட்டிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் உற்று கவனிக்கவே, அச்சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதை பார்த்து  ருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அச்சிறுமியிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போது, கிறிஸ்தவ சர்ச் சென்றதையும், பாதிரியார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும் அச்சிறுமி விளக்கி இருக்கிறார். இதையடுத்து, மேற்கண்டகிறிஸ்தவ சர்ச் பாதிரி ஜோசப் ராஜா மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து ராஜபாளையம்  வடக்கு காவல்நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மன வளர்ச்சி குன்றிய அச்சிறுமியை, மத போதகர் ஜோசப் ராஜா பாலியல் வன்புணர்வு செய்தது உறுதிப் படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மத போதகர் ஜோசப் ராஜாவை போலீஸார் கைது செய்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த இச்சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3028524
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764932

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா