Friday, May 6, 2022

இறைவன் பல்லக்கு தூக்கும் அந்தணர்கள்

சுவாமி ஸ்ரீபாதம் தூக்கிகள் Dev Raj  பிராமணர் கடின உழைப்பு செய்வதில் யாவர்கும் சளைத்தவர் இல்லை 

தோளில் காயம் ஏற்பட்டுத் தழும்பாகும்வரை சப்பரம் தூக்குவான்; பெருமாள் ஆஸ்தானம் ஏளும்வரை இடையில் ஆயக்கால் substitute போட்டுச் சப்பரச் சுமையைத் தள்ளி வைக்க முடியாது; இருதோள்களிலும் மாறி மாறிச் சுமக்க வேண்டும். இடைவழியில் இல்லங்கள் தோறும் நிற்க வேண்டும்.

 எம்பெருமானுக்கான உபசாரங்கள் பூர்த்தி பெறும்வரை பொறுமை காக்க வேண்டும். பல அடியார்களுக்குத் தோள்புண் கழலைபோல் நிரந்தர அடையாளமாகிவிடும். விண்ணகரங்களில் ஸ்ரீபாதம் தாங்கிகள் குழுவாகச் சேர்ந்து செய்திருக்கும் கைங்கர்யங்கள் பல. இவர்களுக்குக் கைங்கர்யம் ஸ்வரூபம்; விளம்பரத்துக்கானதன்று.

 

தமிழர்-திராவிடர், ஆரியர் என தனியே மரபணு அமைப்பு இல்லவே இல்லை. அறிவியல் சொல்லும் ரகசியம்

தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்

திருவல்லிக்கேணி விண்ணகரத்துக்கென்றே சுமார் 60 அடியார்கள்; மேலும் பலர் வெளியூர்களில்; சந்தர்பம் வாய்க்கும்போது கலந்து கொள்வர். ஆண்டின் 365 நாள்களில் 270 உத்ஸவங்கள் சிறிதும், பெரிதுமாக. பஞ்ச பர்வம், பத்தியுலா உள்ளிட்ட அனைத்திலும், ஏறத்தாழ ஆண்டு முழுவதும் ஸ்ரீபாதம் தாங்கிகள் கைங்கர்யம் செய்ய வேண்டும். 

மெய்வருந்தப் பணி செய்யும் அம்மெய்யடியார்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மேலும் விவரிக்கலாம்; ஆனால் இந்துக்களிடையே சாதிப் பிரிவினை செய்வதில் பி ஹெச்டி வாங்கி,  அன்னியக் கைக்கூலிகளாக, பிரிவினை மூட்டுவதே முழுநேர வேலையாக அலையும் பலர் முகநூலில் உள்ளனர். அவர்கள் சாதிச்சண்டையாக ஊதிப் பெரிதாக்கி விடுவர். ஆகவே அவற்றை எழுதவில்லை.

ரதோத்ஸவத்தில் பெரிய தேர்ச்சக்கரங்களுக்கு அருகில் நின்றுகொண்டு வாகான முறையில் கனத்த சன்னக்கட்டை போடுவதிலும் இவர்கள் முன்னிற்பர். சாய்வான சன்னக் கட்டையில் வழுக்கிக் கொண்டு தேர்ச்சக்கரம் சீராக ஒரே பாதையில் செல்லும்.

(அசுல்க தாஸர்களான இவர்கள் திருவடிகளில் விழ ஆசை; அனைவரும் இளவயதினராக இருப்பர்; ஸேவிக்கவும் அனுமதிக்க மாட்டார்கள்.இதில் இடையறாமல் ஈடுபட்டிருக்கும் Thirumalai Vinjamoor Venkatesh என் இனிய நண்பர்)

ஏப்ரல் மாதக் கோடையில் ஈக்காட்டுத் தாங்கல்வரை (திருவூறல் உற்சவம்) ஓடவிடுங்க என்கிறார் ஒரு அடியார். போகவர சுமார் 30 கிமீ தூரம். இடையில் பல மண்டகப்படிகள். 

இதுபோல் காஞ்சீபுரம் பெருமாளுக்கும் பல உத்ஸவங்கள்; வைணவ அடியார்கள் மனமொன்றி ஆர்வத்துடன் உழைப்பர்; வெளி இடங்களுக்கும் அத்திகிரி வரதனை எழுந்தருளச் செய்வர்.

@Sriram Kannan

இந்த ஒரு உற்சவத்தில்தான் (பங்குனி மாத ஆதி ப்ரஹ்மோத்ஸவம்) நம்பெருமாளின் எல்லா முகங்களையும் காண முடியும்...... 

ஏன் எனக்கே எந்த வேலையிருந்தாலும் வேலையே போனாலும் பரவாயில்லை 

என்று வந்துவிடுவேன் கைகர்யம் செய்ய.....இது மற்றவர்கள் நினைப்பது போல் போட்டோக்கு போஸ் கொடுப்பதோ,விளம்பரம் தேடும் செயலோ,

சைடில் காசு பார்க்கும் வேலையோ இல்லை, பொழுபோக்கான, விளையாட்டான விஷயமும் இல்லை. 

அவனைத் தோளில் சுமப்பது ஆத்ம திருப்தியை போல் வேறெதும் இல்லை... 

அது இல்லாமல் அதற்கிடான கைங்கர்யம் என்ன செய்தாலும் மனநிறைவு கொள்ளாது.... சுமந்து சுமந்து வீங்கிய தோள்கள்தான் எங்களுக்கு பதக்கம்.....

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா