Friday, May 6, 2022

நாகர்கோவில் CSI மதபோதகர் குடிபோதையில் ஸ்காட் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் வழக்குப் பதிவு

 

மதுபோதையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மதபோதகர்... சினிமா பட பாணியில் விரட்டிப்பிடித்த மாணவர்கள்

NEWS18 TAMIL  : MAY 05, 2022  Kanyakumari District | கல்லூரி மாணவியிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகர் காரில் தப்ப முயன்ற போது சக மாணவர்கள் சினிமா பட பாணியில் 4 கிலோமீட்டர் தூரம் விரட்டி பிடித்து  கார் கண்ணாடியை உடைத்தெறிந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் ஹோட்டலில் கல்லூரி மாணவியிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்ட கடமலைகுண்டு லா மெமோரியல் CSI சர்ச் மதபோதகர் காரில் தப்ப முயன்ற போது சக மாணவர்கள் சினிமா பட பாணியில் 4 கிலோமீட்டர் தூரம் விரட்டி பிடித்து  கார் கண்ணாடியை உடைத்தெறிந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் CSI நிர்வாகத்தின் கீழ் தனியார்(ஸ்காட் ) கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமாக மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் ஆங்கில துறையினை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு  துறை சர்ந்த சிறப்பு வகுப்பு  நடைபெற்று உள்ளது.

 வகுப்புகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் கல்லூரியின் அருகே உள்ள உணவகத்திற்கு சென்று உள்ளனர். அங்கு குமரி மாவட்டம் (கடமலைகுண்டு லா மெமோரியல் CSI சர்ச்)  மேக்காமண்டபத்தை சேர்ந்த ஸ்பெர்ஜன் சாமுவேல் என்ற மதபோதகர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்த மாணவிகளிடம் சில்மிச செய்கையில் அவர் ஈடுப்பட்டதாகவும் மாணவிகளிடம் செல்போன் நம்பரை கேட்டதாகவும் தெரிகிறது.

மேலும் அதில் ஒரு மாணவி கை கழுவும் இடம் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்று அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், அதிர்ச்சியடைந்த மாணவி ஹோட்டலில் இருந்த சக  மாணவர்களிடம்  தெரிவித்த நிலையில் மாணவர்களுக்கும் மதபோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

742007.htmlhttps://tamil.news18.com/news/tamil-nadu/kanniyakumari-district-pastor-escaped-drunk-and-drive-student-chased-away-in-cinema-style-skv-740873.html
















உடைக்கப்பட்ட கார் கண்ணாடி

இந்நிலையில் மாணவர்களிடம் இருந்து தப்பித்து மதபோதகர் தனது காரில் செல்ல முயன்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து இருசக்கரவாகனத்தில்  கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர்.  மதபோதகர் சாலையில் வேகமாக காரை இயக்கி செல்லும் வீடியோ மாணவர்களது  செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  சுங்கான்கடை பகுதியில் மதபோதகரின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது அங்கு கூடியவர்கள் மதபோதகரின் வாகன கண்ணாடியை  அடித்து உடைத்துள்ளனர்.

மாணவர்களை கண்டித்த போலீசார்

இத்தகவல் அறிந்து வந்த போலீசார் மத போதகரை பாதுகாத்தனர். அவரது காரை பின் தொடரந்து வந்த மாணவர்களை கண்டித்ததோடு மதபோதகரை பத்திரமாக வழியனுப்பியும் வைத்தனர். மேலும் கார் கண்ணாடி உடைப்பு தொடர்பாக இரணியல் காவல்நிலையத்தில் ஸ்பர்ஷன் சாமுவேல் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து இரணியல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : ஐ.சரவணன்   

கை கழுவ சென்ற மாணவி..பின்னாலே சென்று கையை ஈரமாக்கி.. மதபோதகர் செய்த ச்சீ ச்சீ செயல்! அதிர்ந்த குமரி By Rajkumar R Updated: Friday, May 6, 2022, 18:35 [IST] கன்னியாகுமரி 

: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் ஹோட்டலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் CSI நிர்வாகத்தின் கீழ் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமாக மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த வயசுலயா? 

இந்நிலையில் ஆங்கில துறையினை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு துறை சர்ந்த சிறப்பு வகுப்பு நடைபெற்று உள்ளது. மத போதகர் சில்மிஷம் வகுப்புகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் கல்லூரியின் அருகே உள்ள உணவகத்திற்கு சென்று உள்ளனர். 

அங்கு குமரி மாவட்டம் மேக்காமண்டபத்தை சேர்ந்த ஸ்பெர்ஜன் சாமுவேல் என்ற மதபோதகர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்த மாணவிகளிடம் சில்மிச செய்கையில் அவர் ஈடுப்பட்டதாகவும் மாணவிகளிடம் செல்போன் நம்பரை கேட்டதாகவும் தெரிகிறது. 

மாணவி அதிர்ச்சி மேலும் அதில் ஒரு மாணவி கை கழுவும் இடம் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்று அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மாணவி முன்னிலையில் கைகளை ஈரமாக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஹோட்டலில் இருந்த சக மாணவர்களிடம் தெரிவித்த நிலையில் மாணவர்களுக்கும் மதபோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

கார் கண்ணாடி உடைப்பு இந்நிலையில் மாணவர்களிடம் இருந்து தப்பித்து மதபோதகர் தனது காரில் செல்ல முயன்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். மதபோதகர் சாலையில் வேகமாக காரை இயக்கி செல்லும் வீடியோ மாணவர்களது செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுங்கான்கடை பகுதியில் மதபோதகரின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது அங்கு கூடியவர்கள் மதபோதகரின் வாகன கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். போலீசார் விசாரணை இத்தகவல் அறிந்து வந்த போலீசார் மத போதகரை பாதுகாத்தனர். 

அவரது காரை பின் தொடரந்து வந்த மாணவர்களை கண்டித்ததோடு மதபோதகரை பத்திரமாக வழியனுப்பியும் வைத்தனர். இந்நிலையில் மதபோதகர் மாணவி புகார் அளித்துள்ளார். புகார் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.


Read more at: https://tamil.oneindia.com/news/kanyakumari/a-case-registered-against-a-pastor-who-was-involved-in-a-scuffle-with-a-college-student-457347.html

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...