ரமலான் தொழுகை நடத்துவதில் முஸ்லிம் 2 பிரிவுக்குள் பயங்கர மோதல்.. காவல் நிலைய வாசலில் அடி தடி..!!
Kannyakumari Ramzan | ரமலான் தொழுகை நடத்துவதில் கன்னியாகுமரியில் இரு தரப்பினர் இடையே மோதல். காவல் நிலைய வாசலில் கைகலப்பு. சாலை மறியல், போலீசார் பேச்சுவார்த்தை. News18 Tamil | May 03, 2022
கன்னியாகுமரியில் கன்னியாகுமரி முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இங்கு இரு தரப்பினர் இடையே பல வருடங்களாக பள்ளிவாசலை நிர்வாகம் செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது .
2/ 9 இந்நிலையில் ஒரு தரப்பினர் நேற்று ( 2.5.22 திங்கள்) ரமலான் சிறப்பு தொழுகை நடத்தினர்.
3/ 9 இதையடுத்து இன்று மற்றொரு தரப்பு சார்பில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக பிரச்னை ஏற்படும் என கருதி இரு தரப்பினரையும் அழைத்து இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
4/ 9 நிர்வாகிகள் காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் வெளியே இருந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
5/ 9 காவல் நிலையம் முன்பு சாலையில் இருதரப்பினர் மோதி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
6/ 9 பின்னர் காவல் துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
8/ 9 இச்சம்பவம் தகவல் அறிந்து அப்பகுதி இஸ்லாமியர்கள் கன்னியாகுமரி நாகர்கோவில் சாலையில் மறியல் செய்தனர்
9/ 9 இச்சம்பவம் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..
இதையடுத்து அங்கு வந்த கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இச்சம்பவம் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. செய்தியாளர் - ஐ.சரவணன் , நாகர்கோவில்
No comments:
Post a Comment