Wednesday, May 4, 2022

பட்டினம்பாக்கம் விக்னேஷ் (பட்டியல் சமூகர்) போலீசாரால் கொலை?? தேசிய SC &ST கமிஷன் துணை தலைவர் சந்தேகம்

விக்னேஷ் போலீசாரால் கொல்லப்பட்டு இருக்கலாம்: தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் துணை தலைவர் சந்தேகம்

https://www.dinamalar.com/news_detail.asp?id=3022460

சென்னை:''வாலிபர் விக்னேஷ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையே போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்துள்ளனர்'' தேசிய எஸ்.சி. - எஸ்.சி. கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தர் கூறினார். 

சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே ஏப்.19ல் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் 26 திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் 28 சிக்கினர். இவர்களை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.மறுநாள் சுரேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஷ் மர்மமான முறையில் இறந்தார்.

சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மாணவி ஒருவர் சென்னை ஐ.ஐ.டி.யில் 2016 - 2020ல் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார்.இவருடன் படித்த மாநில மாணவர் கிங்சுப்தேவ் சர்மா 30 காதலிப்பதுபோல நடித்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதை 'வீடியோ' எடுத்து நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களின் 'மொபைல் போனுக்கு' அனுப்பினார். இவர்களும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதுதொடர்பாக இரண்டு பேராசிரியர்கள் உட்பட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவங்கள் குறித்து டில்லியில் உள்ள தேசிய எஸ்.டி. - எஸ்.டி. கமிஷன் விசாரித்து வருகிறது. அதன் துணை தலைவர் அருண் ஹல்தர் சென்னையில் முகாமிட்டு விசாரித்து வருகிறார்.

இவர் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் விக்னேஷ் எதற்காக கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்த இடம் விதம் அடித்து சித்ரவதை செய்யப்பட்டாரா என பல்வேறு கேள்விகள் எழுப்பினார். விக்னேஷ் உறவினர்களை திருவல்லிக்கேணி விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து விசாரித்தார்.

அதன்பின் அருண் ஹல்தர் அளித்த பேட்டி:விக்னேஷ் மரணத்தில் பல விதமான சந்தேகங்கள் எழுகின்றன. அவரை போலீசார் அடித்துக் கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். போலீசாரிடம் 'விக்னேஷை அடித்தீர்களா?' என கேள்வி கேட்டால் 'இல்லை' என்கின்றனர்.அப்படியானால் எதற்காக விக்னேஷ் சுரேஷை இரவு நேரத்தில் சோதனை செய்த எஸ்.ஐ. புகழும் பெருமாள் போலீஸ்காரர் பொன்ராஜ் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்தீர்கள் என்றால் பதில் இல்லை.

விக்னேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரே இல்லை என கூறிவிட்டனர். ஆனால் அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான சான்றிதழை டில்லியில் இருக்கும் போதே நாங்கள் சேகரித்து விட்டோம். அதை போலீசாரிடம் காண்பித்தபோது தான் எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவாக உறுதி அளிக்கின்றனர்.

இப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டால் விக்னேஷ் குடும்பத்திற்கு மாநில அரசு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டி இருக்கும். நாங்களும் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் தேசிய எஸ்.சி. - எஸ்.டி. கமிஷனுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம்.அதேபோல சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒரு பெண் தன்னை மிரட்டி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் என புகார் அளிக்கிறார்.ஆனால் போலீசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். மாணவி விவகாரத்தில் போலீசார் தங்களின் கடமையை செய்ய தவறி உள்ளனர். அதுபற்றியும் எங்கள் கமிஷனுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம்.

தமிழகத்தில் எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. அரசு அதிகாரியை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி குறித்து பேசுகிறார். அவரையே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக நியமிக்கின்றனர். தமிழகத்தில் இந்த லட்சணத்தில் தான் ஆட்சி நடக்கிறது.இவ்வாறு அருண் ஹல்தர் கூறினார்.

விளக்கம் அளித்த போலீஸ் கமிஷனர்

விக்னேஷ் மர்ம மரணம் குறித்து, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் துணை தலைவர் அருண் ஹல்தரை சந்தித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்தார்l விக்னேஷ் மர்ம மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் விசாரணை நடக்கிறது.

சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், சம்பவத்தன்று விக்னேஷ், சுரேஷ் ஆகியோர் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் பிரபு; தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகினர். இவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

l 13 இடங்களில் காயம்: விக்னேஷ் தலையில் பெரிய அளவில் காயம் இருந்தது; காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விக்னேஷ் உடலில் மொத்தம், 13 இடங்களில் காயம் இருந்தது, பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...