தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை TELC பிஷப் மீது ரூ.3 கோடி மோசடி புகார்.. தலைமறைவான பிஷப் மார்ட்டின் போலீசார் வலைவீச்சு
பணம் கொடுப்பதற்காக போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி பிஷப் மார்டின் ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கித்தரவில்லை என்று தெரிகிறது. NEWS18 TAMIL MAY 01, 2022,
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி: திருச்சி பிஷப்புக்கு வலைவீச்சு பதிவு: ஏப்ரல் 29, 2022 01:28 AM திருச்சி,
திருச்சியில் மூன்று கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிய லுத்தரன் சபை பிஷப் மீது நடவடிக்கை எடுக்க கூறி பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார். தலைமறைவான பிஷப்பை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கிரம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை உறுப்பினராக உள்ளார்.
இந்த திருச்சபையின் திருச்சி பிஷப்பாக உள்ளவர் மார்ட்டின். 2009 ஆம் ஆண்டு பிஷப் மார்டினை சந்தித்துள்ளார் ரமேஷ்.
திருசபையில் பலபணிகளை கவனித்த ரமேஷூடம், பிஷப் மார்டின் நட்பாக பழகியுள்ளார். லுத்தரன் சபை சம்பந்தமாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அதற்கான வழக்கு செலவிற்காக ரூ.1½ கோடி ஏற்பாடு செய்து கோரி ரமேஷுடம் பிஷப் மார்டின் கேட்டுள்ளார்.
மேலும் பெற்றுத்தரும் பணத்திற்கு லுத்தரன் சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்களை பெற்றுத் தருவதாகவும் உறுதிக் கொடுத்தார்.
இதையடுத்து ரமேஷும் பிஷப் மார்டினிடம் ரூ 1.50 கோடி பணத்தை கொடுத்துள்ளார். அத்துடன் தொடர்ச்சியாக அவ்வப்போது கொடுத்த பணம் என மொத்தமாக மூன்று கோடிவரை ரமேஷ் பிஷப் மார்டினுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பணம் கொடுப்பதற்காக போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி பிஷப் மார்டின் ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கித்தரவில்லை என்று தெரிகிறது.
அத்துடன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் அதையும் கொடுக்காமல் பிஷப் மார்டின் இழுத்தடித்தடித்து வந்துள்ளார். மேலும் சில மாதங்களாக பிஷப் மார்டின் குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக போராடியும் பணத்தை பெற முடியாததால் பாதிக்கப்பட்ட ரமேஷ் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் தான் பாதிக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள பிஷப் மார்டின் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடிவருகின்றனர்.
No comments:
Post a Comment