Saturday, May 7, 2022

திமுக வாக்குறுதி பொய்கள் மக்களுக்கு வேதனை

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் - அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேரவையில் நேற்று அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் தந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பின்னர் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசியதாவது:

பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநில அரசு, புதிய ஓய்வுதிய திட்டத்துக்கு மாறிய பின், பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற இருப்பதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட நிதியை அளிக்குமாறு மத்திய அரசிடம் ராஜஸ்தான் அரசு கேட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு, அந்த நிதியை திருப்பித்தர இயலாது என ஒரு விளக்க கடிதத்தை ராஜஸ்தான் அரசுக்கு அனுப்பியுள்ளது.

2003-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்ட நிதி முழுமையாக அரசின் கணக்கில் இருந்தது. அதை அரசு எடுக்கலாம், வைக்கலாம், அனைத்து உரிமையும் அரசிடம் இருந்தது. ஆனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு மாறிய பின்னர், ஒவ்வொரு தனி நபரின் பணம், அரசு அளிக்கும் பங்களிப்பு ஆகியவை ஒவ்வொரு தனி நபரின் பெயரில் தனியாக கணக்கில் வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் 2016-ல் ஒரு ஆய்வு குழுவை அமைத்து, 2018-ல் அறிக்கையும் பெற்றுள்ளனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தனிகணக்கில் வரவு வைத்த பிறகு, அதை திரும்ப எடுத்து அரசு நிதியாக்குவதற்கு சட்டம் அனுமதிக்காது. இது சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஓய்வூதியத்துக்காக இந்த ஆண்டு ரூ.39 ஆயிரத்து 500 கோடி செலவிடப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு சார்பில் ரூ.3 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலவிடப்படுகிறது. 2003-க்கு முந்தைய பணியாளர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவிடப்படுகிறது. இது தான் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கும் உள்ள வித்தியாசம்.

கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூ பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த ஆண்டு ஓய்வுபெறும் நிலயைில் அவர்களுக்கு ரூ.2,150 கோடி செலவாக இருக்கிறது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.5,200 கோடி செலவிடப்படுகிறது.

இந்த ஆண்டு, சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை ஓய்வு பெற்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்துக்காக ரூ.7 கோடி, எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்துக்காக ரூ.40 கோடி செலவிடப்பட உள்ளது. அதனால் எம்எல்ஏக்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வு குறித்து அவை முன்னவரும், முதல்வரும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டவன்.

சுதந்திரத்துக்கு பிறகு, சட்டப்பேரவை, அரசு, நீதித்துறை ஆகியவற்றின் எல்லை தெளிவற்று இருக்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பார்த்தால் அரசாங்க உரிமைகளில் கை வைக்கும் வகையில் உள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சரியான தலைமை இல்லாத ஆட்சி நடந்ததால் அதிகாரிகள் சற்று திசை திரும்பி இருக்கிறார்கள். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு மாற்றத்தை உருவாக்கி வருகிறோம். படிப்படியாகதான் அரசை திருத்த முடியும். திருத்தம் உறுதியாக நடந்து வருகிறது என்றார்.


திமுக வாக்குறுதி பொய்கள் மக்களுக்கு வேதனை 

1. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது இது தெரியவில்லையா?
2. ஜக்டோ ஜியோ போன்ற அமைப்புகள் தற்போது ஏன் நவத் துவாரங்களையும் மூடிக் கொண்டு இருக்கின்றன?
3. பட்ஜட்டில் 98% அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதியமாக போகிறது என்கிற குற்றச்சாட்டை அரசியல்வாதிகள் அவ்வப்போது அவிழ்த்து விடுவார்கள். சொல்லப்பட்ட "ஆண்டுக்கு தலைக்கு இரண்டு லட்சம்" என்பது மிகக் குறைவாக இருக்கிறது. இது பொய்யா, அது பொய்யா?
--------------------------
அரசு ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதால், அவர்களை வாக்கு வங்கியாகப் பார்க்கும் காலம் வெகு விரைவில் இல்லாமற் போகும்!
ஓய்வூதியம் பற்றிப் பேசும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று - எம்எல்ஏக்களின் ஓய்வூதியம்! ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம், அவர்களுக்குப் பிறகு அவர் மனைவிக்கு ஓய்வூதியம் என்று அநியாயமாக செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் பதவியில் இருக்கும் போது சம்பாதிப்பது பல தலைமுறைகளுக்கு வரும், ஓய்வுதியம் ஏன்?














அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் புதிய பென்ஷன் ஒரு பார்வை:
செய்திகளில் பரவலாக அடிபடும் இந்த பழைய பென்சன் புதிய பென்சன் பற்றி எழுதலாமென்று நினைத்தேன்.நான் புரிந்துகொண்ட அளவில் எழுதியுக்கிறேம்..கொஞ்சம் பெரிய பதிவுதான்..ஆர்வமுள்ளவர்கள் பொறுமையாக படித்துப் பார்க்கவும்.
தமிழ்நாட்டில் 2003லிருந்தும் பிற மாநிலங்களிலும் மத்திய அரசிலும், 2004 லிருந்தும் பணியில் சேர்பவர்களுக்கு அதற்கு முன்னால் பணியில் இருப்பவர்கள் மாதிரி பழைய பென்சன் திட்டம் கிடையாது. மத்தியிலு ம் சில மாநிலங்களிலும்,New Pension Scheme (NPS )எனும் திட்டமும் தமிழகத்திலும், சில மாநிலங்களிலும் Contributory Pension Scheme (CPS) எனும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.இவை பற்றி பார்க்கும்முன் பழைய பென்ஷன் திட்டம் என்பது என்ன என்றும் ஏன் அதையே அரசு ஊழியர்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றும் பார்ப்போம்.
பழைய பென்ஷன் திட்டம் என்பது ஒரு அரசு ஊழியர் ஒய்வு பெறும் போது அவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் ஐம்பது சதவீதம் அவருக்கு பென்ஷனாக வழங்கப்படும். தமிழகத்தில், முழுப் பென்ஷன் வாங்க அதாவது 50% of Last pay Drawn 30 ஆண்டுகள் பனி செய்திருக்க வேண்டும்.மஹ்தியா அரசு ஊழியர்கள்,20 ஆண்டுங்களுக்கு மேல் எப்போது ஒய்வு பெற்றாலும் சம்பளத்தின் 50% ஐ வாங்கலாம். இந்தப் பென்ஷனுக்கு அகவிலைப்படியும் உண்டு. அதாவது இன்று ஒய்வு பெரும் ஒருவரின் அடிப்படை சம்பளம் 50000/- என்றல் அவரது பென்ஷன் 25000/-.இதனுடன்,இன்றிருக்கும் அகவிலைப்படி 34% சதவீதமும் சேர்த்து 33500/-மாதப் பென்ஷனாக கிடைக்கும்.
இதில் கம்யூடேஷன் என்று ஒரு வசதியுமுண்டு. அதாவது வாங்கும் பென்சனில் மூன்றில் ஒரு பங்கை, (மத்திய அரசில் 40%) முன் கூட்டியே commute செய்து(ஒப்படைத்து)அதற்கான மதிப்பினை வாங்கிக்கொள்ளலாம். அதற்கு ஒரு கணக்கீடு உண்டு.நான் மேலே சொன்ன 25000/-ல் 1/3,அதாவது,8333/- என்ற தொகையை ஒரு கணக்கீட்டின் படி முன்கூட்டியே வாங்கலாம். அதன் படி அந்த அரசு ஊழியருக்கு Commuted Value of Pension என்பது 8333x 12x 8.14 என்று கணக்கிட்டு ரூ.813938/- கிடைக்கும். இந்த 8333/- மாதாந்திர பென்சனில் கழித்துக் கொள்ளப்படும்.இப்போது ஒரு அரசு ஊழியரின் பென்ஷன் இப்படி இருக்கும்.
அடிப்படை பென்ஷன் --25000/-
அகவிலைப்படி -- 8500/
Minus Commuted Pension (-)8333/-
----------
மாதம் கையில் கிடைக்கும் மொத்தத் தொகை 24667/-(இதைத்தவிர மருத்துவப் படியும் அது சமபந்தப்பட்ட பிடித்தங்களும் உண்டு)
இதனுடன் கிராஜுவிட்டி (பணிக்கொடை)என்ற ஒன்றும் உண்டு. அதுவும் கடைசி மாதச் சம்பளத்தின் அடிப்படையில் பணி புரிந்த மொத்த ஆண்டுகளையும் இரண்டால் வகுத்து, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் சேர்த்து கணக்கிட்டு வழங்கப்படும். இது அதிகபட்சமாக இன்று 20 லட்சம் வரை வாங்கலாம். அதற்கு மேல் கிடையாது.
எ கா: ஒரு அரசு ஊழியர் 33 ஆண்டுகள் பணி செய்திருந்து அவரது அடிப்படை சம்பளம் 25000/- என இருந்தால் இப்படி கணக்கிடப்படும்.
அடிப்படை சம்பளம் --25000/-
அகவிலைப்படி 34%----- 8500
---------
மொத்தம் 33500 x 33/2
=552750/-
இவற்றைத் தவிர பொது சேம நல நிதி (General Provident Fund )என்ற ஒன்றும் உண்டு.இது Employee's Provident Fund மற்றும் Public Provident F und ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.இதற்கான ஒவ்வொரு மாதமும் அந்த அரசு ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகை.அதற்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி வழங்கப்பட்டு ஒய்வு பெரும் சமயம் திருப்பி அளிக்கப்படும்.பிடிக்கப்படும் குறைந்த பட்ச தொகை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். ஆனால், வட்டி மத்திய அரசு நிர்ணயிப்பது. நான் 1986ல் பணியில் சேர்ந்த போது 12% இருந்தது இன்று 7.10% என்று குறைந்து விட்டது.இதில் கடன் எடுக்கவும் வசதி உண்டு.ஒரு குறிப்பிட்ட பனிக்காலம் முடிந்த பின் கணக்கில் இருக்கும் பகுதி பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.இதற்கெல்லாம் பல் வேறு அளவுகள் வரன்முறைகள் உண்டு.
ஆக, பழைய பென்ஷன் திட்டத்தில் ஒய்வு பெறும் ஒரு ஊழியருக்கு, பென்ஷன், commuted value of pension ,Retiremnt Gratuity, GPF கணக்கில் உள்ள பணம்,மற்றும் அவர் பணிக்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளாமல்,சேர்த்து வைத்திருக்கும் விடுமுறை நாட்களுக்கான சம்பளப் பணமும் கிடைக்கிறது.இது 300- 330 நாட்கள் வரை சேர்த்து வைத்து பணமாக பெற்றுக் கொள்ளலாம்.இவைதான் பழைய பென்ஷன் திட்டத்தில் ஒரு ஊழியர்க்கு கிடைக்கக் கூடிய ஒய்வு கால பலன்கள்.
சரி இப்போது புதிய பென்சன் திட்டத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.தமிழகத்தில் அமலில் இருக்கும் Contributory Pension Scheme என்பதில் பழையதில் இருந்த Gratuity கிடையாது, General Provident Fund எனும் திட்டமும் கிடையாது.ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்தே அவரது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி இவை இரண்டையும் சேர்த்து வரும் தொகையில் 12% பிடிக்கப்படுகிறது.பிடிக்கப்படும் தொகைக்கு ஈடாக அரசும் அதே தொகையை வழங்குகிறது. இவை இரண்டும் சேர்த்து வரும் தொகைக்கு ஒருவர் ஓய்வூதியம் பெறும் தேதியில் அமலில் உள்ள வட்டி விகிதப்படி வட்டியும் சேர்த்து மொத்தமாக பணம் திருப்பி அளிக்கப்படுகிறது.இதன் கீழ் வரும் அரசு ஊழியருக்கு பழைய அரசு ஊழியர்கள் வாங்கிய Gratuity கிடையாது,பென்ஷன் இல்லாததால்,Commutaion தொகையும் கிடையாது.GPF திட்டமும் இல்லாததால், அதனுடைய கடன் வசதியும் அடிபட்டுப் போய் விடுகிறது.அரசுக்கு இதெல்லாம் மிச்சம்.ஊழியர்களுக்கு நஷ்டம்.ஊழியர்களிடமிருந்து பிடிக்கப்படும் இந்த பணத்தில் ஒரு பங்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரும் லாபம் ஊழியர்களுக்குத் தரப்படும் என்று ஒரு திட்டமும் இருக்கிறது.ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். அதிலும் பிரச்னை இருக்கிறது.லாபம் வந்தால் சரி..நஷ்டம் வந்தால்?
இதுவெல்லாம் தான் அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டமே வேண்டும் என்பதற்குக் காரணம்.அனால் அரசுகள் அசைந்து கொடுப்பதாக இல்லை. பாஜக ஆளாத ராஜஸ்தான் தெலங்கானா,சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தங்கள் ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தையே அமல் செய்து விடுவதாக அறிவித்திருக்கின்றன.ஆனால் நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை. இதில் இன்னொரு சிக்கலுமிருக்கிறது. புதிய திட்டத்தின் படி,கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் மீண்டும் அவர்களுக்கு ஒரு கணக்கு தொடங்கப்பட்டு திருப்பி அளிக்கப்பட வேண்டும்.அல்லது பழைய gpf போல ஒரு கணக்கு தொடங்கப்பட்டு அதில் போடப்பட வேண்டும்.
இங்கே தான் ராஜஸ்தானில் நடந்ததை கவனிக்க வேண்டும். ராஜஸ்தான் அரசு பழைய பென்ஷன் திட்டத்துக்கே மாறுகிறோம் என்று அறிவித்தவுடன், அந்த அரசு புது திட்டத்தின் கீழ் 2004ம் ஆண்டிலிருந்து இதுவரை ஊழியர்களிடம் இருந்து பிடிக்கப்ப ட்ட தொகையை NPSல் இருந்து திருப்பித் தருவது சாத்தியமில்லை என்று இந்தத்திட்டத்ஹ்ட்டை மேலாண்மை செய்யும்,Pension Regulatory and development Authority என்ற அமைப்பு சொல்லிவிட்டது.இதை மேற்கோள் காட்டித்தான் தமிழகத்தின் நிதியமைச்சர். மீண்டும் பழைய பென்ஷனை திருப்பிக் கொண்டுவருவது சாத்தியமில்லை என்று நேற்று சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.
20 ஆண்டுகளாக நிலை பெற்றுவிட்டதொரு திட்டத்தை மாற்றுவது மிகவும் சிரமமானது என்பது உண்மைதான். மேலும் ஒவ்வொரு மாநில அரசுக்குமிருக்கும் நிதிச்ச சுமையில் பழைய திட்டம் மேலும் பெரும் செலவுக்கு வழி வகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.அனால், இதெல்லாம் நமது அரசியல் கட்சிகளுக்குத் தெரியாதது அல்ல.முடியாது என்று தெரிந்தும் தேர்தல் சமயத்ஹ்டில் வாக்குறுதிகள் அளித்து விட்டு இப்போது சால்ஜாப்பு சொல்கிறார்கள் எல்லோரும்.உண்மையில் திமுக இந்தத் திட்டத்தை மாற்றி பழைய திட்டத்தை அமல் படுத்த வேண்டி நினைத் திருந்தால், 2006-11 ஆட்சிக்காலத்தில் அதைச் செய்திருக்கலாம்.ஏனென்னில் அத்திட்டம் வந்து 3 ஆண்டுகள் தான் அப்போது ஆகியிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் முனைந்திருந்தால், அன்று தனி மெஜாரிட்டி இல்லாத திமுக அரசை வலியுறுத்தி இதைச் சாதித்திருக்கலாம்.மத்தியிலும் 10 ஆண்டு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மாற்றியிருக்கலாம்.ஆனால் அப்போது அதைச் செய்யவில்லை.இப்போது திணறுகிறார்கள்.பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வராததற்கான முக்கியமான காரணம் உலக வங்கியிடம் கடன் வாங்கும்போது இதைச் செய்ய மாட்டோம் என்ற நிபந்ததனையில் கையெழுத்திட்டிருப்பதுதானென்றொரு பேச்சு இருந்தது. அதன் உண்மைத்தன்மை பற்றி தெரியவில்லை.ஆனால நாம் உலக வங்கியிடம் மேலும் மேலும் கடன் வாங்கிக்கொண்டேதான் இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.கடன் வாங்க வாங்க நிபந்தனைகளும் கூடும் என்பதும் உண்மை.
இதில் நிதியமைச்சர் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. அவர், பழைய பென்ஷன் திட்டத்தின் படி அரசுக்கு ஒரு ஊழியருக்கான செலவு மாதமொன்றுக்கு 2லட்சம் ஆகிறதென்றும், புதிய திட்டத்தின் படி 50 ஆயிரம்தான் ஆகிறதென்றும் ஒரு கணக்கை வைத்திருக்கிறார்.இதன் அடிப்படை என்னவென்று தெரியவில்லை.ஆனால் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யபப்ட்டபோது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு தலைவரான காலஞ்சென்ற திரு.எம்.ஆர்.அப்பன் அவர்கள் புதிய திட்டமே அரசுக்கு அதிக செலவு வைக்கக்கூடியது என்றும்,பழைய திட்டத்தில் குறைவான செலவுதான் ஏற்படும் என்றும் விளக்கி ஒரு சிறு புத்தகமே எழுதினார் என்று நினைவு.
இப்போது திங்கட் கீழ்மையிலிருந்து தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் நிதியமைச்சர் சொன்னதை எதிர்த்து, தொடர் போராட்டங்கள் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்.அதனுடன் நிதியமைச்சர் கொடுத்திருக்குமிந்த செலவினம் பற்றிய புள்ளி விபரங்களையும் அவர்கள் ஆதாரத்தோடு மறுத்தால் சரியாக இருக்கும்.
ஆனால் வரலாறும் தற்போதைய சூழ்நிலையும், இதற்கெதிராகவே இருக்கிறது. உலக அளவிலேயே இப்போது அநேகமாக எல்லா நாடுகளும் புதிய பென்ஷன் திட்டத்துக்கு வந்து விட்டன. தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தாராளவாத அரசான , ஃ பிரான்சிலும் பழைய பென்ஷன் திட்டம் இப்போது அமலில் இல்லை என்றுதான் கேள்விப்படுகிறேன்.
இதில் பொது மக்களும் பிற தனியார் துறை ஊழியர்களும் அரசு ஊழியரகள் பக்கம் இல்லை என்பதும் ஒரு உண்மை. ஆனால் அது சரியான நிலைப்பாடு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.ஒரு அரசு Model Employer ஆக இல்லாவிட்டாலும் Fair Employer ஆக இருக்கவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்இவ்வாறான விஷயங்கள் நடைமுறைக்கு வந்தன. அவற்றையெல்லாம் வெட்டி ஊதாரி செலவு என்று நீக்குவது அவ்வளவு சரியல்ல. மேலும், இன்று அரசு ஊழியர்களாக ஒரு சாரார் இருக்கின்றனர். நாளை பொதுமக்களிலிருந்து யார் வேண்டுமானாலும் அரசு ஊழியராக வரலாம்.அவர்களுக்கும் நாளை வரவிருக்கும் தலைமுறைக்கும் சேர்த்துத்தான் இப்போதிருக்கும் ஊழியர்கள் கோரிக்கைகள் வைக்கிறார்கள் போராடுகிறார்கள்.இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
பிகு;
இதில் NPS பற்றி விரிவாக எழுதவில்லை.ஏனெனில் அது தமிழகத்தில் நடைமுறையில் இல்லை. எழுதியிருப்பதில் ஏதும் தவறான தகவல்கள் இருந்தால் நண்பர்கள் அவற்றை சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா