சர்ச் ஆஃப் தி வர்ட் பாஸ்டர் அபகரித்த நிலத்தை மீட்க முட்டி போட்டு முதல்வர் ஆபீசில் மனு ஏப் 30, 2022
சென்னை : கிறிஸ்தவ பாதிரியார் அபகரித்த நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, நிலத்தின் உரிமையாளர்கள், தலைமைச் செயலகத்தில், நேற்று முட்டி போட்டபடி சென்று, முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர்.
நிலத்தின் தற்போதைய மதிப்பு, 12 கோடி ரூபாய்.சரவணபெருமாள் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்தினர், தங்கள் நிலத்தை பாதிரியாரிடம் இருந்து மீட்டுதரக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
தலைமைச் செயலர், உள்துறை செயலர், முதல்வர் சிறப்பு அதிகாரி, டி.ஜி.பி., என அனைவருக்கும் மனு அனுப்பி உள்ளனர்; எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இந்நிலையில், சரவண பெருமாள் குடும்பத்தை சேர்ந்த, ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர், நேற்று மாலை, சென்னை தலைமைச் செயலகம் வந்தனர். அனைவரும் தலைமைச் செயலகம் உள்ளே முட்டி போட்டபடி, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு நகர்ந்து சென்று, மனு கொடுத்தனர்.
பாதிரியாரிடமிருந்து தங்கள் நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, மனு கொடுத்துள்ளனர். மேலும் பாதிரியாருக்கு ஆதரவாக, போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால், சென்னை போலீஸ் கமிஷனர் நேரடி பார்வையில், வேறு அதிகாரி அல்லது சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும் என்றும், மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment