Saturday, April 23, 2022

ஆசாரியார்களை மதிப்பது வள்ளுவம் காட்டும் வழி

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் கந்தகிரியில் உள்ள அருள்மிகு  ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் காஞ்சி காமக்கோடி பீடத்தின் சங்கராசாரியாரான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையேற்று நடத்தினார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் வேதசிவாகம பாடசாலையின் ஆதிசைவ சிவாச்சாரிய அத்யாபகர்கள், வித்யார்த்திகள் மற்றும் ஸ்தானிகர்கள் தமிழ் மறையாகிய திருப்புகழை கர்பகிருஹத்தில் ஓதினார்கள்.
"சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே"
தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுக்காப்பதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஒரு முன்னோடி என்பதை நாம் அறியத் தக்கது.
 
ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸ்கந்தகிரி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் பங்கேற்ற தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுனர் Dr.திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் அவர்கள் அருளாசியும், அருட்பிரசாதங்களும் வழங்குதல்
  
துறவிக்கு வேந்தன் துரும்பு என்பது தான் இந்து பண்பாடு Dr தமிழிசை மட்டுமல்ல அம்பானி மனைவிக்கும் ஒரே மாதிரியான பிரசாதம் தான்.
  
தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு காஞ்சி விஜேயேந்திரர் பிரசாதத்தை தூக்கி கொடுப்பதை பதிவிட்டு பலரும் கிண்டல் செய்கின்றனர். கவர்னர் ஆக இருந்தும் தமிழிசைக்கு மரியாதை இல்லை என்பது போல் சில பதிவுகள். ஜெயலலிதா காஞ்சி ஜெயந்திரரிடம் பிரசித்தம் வாங்கும் படம் போட்டு அதை தமிழசையுடன் ஒப்பிட்டு அதில் சாதிய கோணமும் இருப்பதாக கூற்றம் சாட்டுகின்றனர். நான் அவ்வாறு நினைக்கவில்லை. கேரளா கோவில்களுக்கு பிரதமர் மோதி செல்லும்போது பூஜை செய்தவர் பிறருக்கு கொடுப்பது போல் தூக்கி கொடுக்காமல் தொடுவது போல் கையில் கொடுப்பார். மோதி பிராமணர் இல்லையே. மூர்த்திக்கு பூஜை செய்யும் ஒருவர் பிற யாரையும் தொடக்கூடாது, இவ்வாறு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற நியமனங்களை சரியாக பின்பற்றுவதை நாம் தவறாக புரிந்துகொள்ள கூடாது. எனக்கு இந்த வீடியோ நினைவுக்கு வந்தது. கர்நாடக மடாதிபதி ஒருவரிடம் யோகி பிரசாதத்தை கையில் வாங்க முயல்கையில் மடாதிபதி மேலும் கையை உயர்த்துகிறார். அருகிலுள்ள சிஷ்யர் எவ்வாறு வாங்க வேண்டும் என்று சைகை காட்டுகிறார். யோகி புரிந்துகொண்டு சரியாக வாங்குகிறார். சாமியார் துண்டை தூக்கி யோகியின் தோளில் வீசுகிறார். யோகி முதல்வர் மட்டுமல்ல இன்னொரு மடாதிபதியும் தான். சில இடங்களில் நியதிகள் சரியாக பின்பற்றப்படாமல் இருக்கலாம். ஆனால் நியதிகள் சரியாக பின்பற்றப்படுவதற்கு நாம் உள்ளார்த்தம் கற்பிக்க கூடாது. தமிழிசையும் யோகியும் சொன்னால் புரிந்துகொள்வார்கள், மோதி மற்றும் ஜெயலலிதா அதை இழுக்காக எடுத்துக்கொள்வார்களோ என்ற பயம் கூட அவர்களுக்கு பிரசாதத்தை தொட்டு கையில் கொடுப்பவர்களிடம் இருந்திருக்கும்.



 
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். குறள் 441: பெரியாரைத் துணைக்கோடல்.
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
பங்காரு அடிகளார் ஐயாவை சந்தித்துவிட்டு தரையில் அமர்ந்து அவரோடு கே.என்.நேரு பேசுவதில் எந்த தவறும் இல்லை..நானே இருந்தாலும் அதைத்தான் செய்வேன்.








 


அது காஞ்சி மடமோ , அஹோபில மடமோ , மடி ஆச்சாரம் என்பதையெல்லாம் உங்க உருட்டுக்கு ஏற்றார் போல மாற்ற முடியாது , இன்னும் சொல்லப்போனால் நாங்க யாரையும் அங்கே வற்புறுத்தி கூப்பிடல , கே என் நேரு முதல் துர்கா ஸ்டாலின் வரை நீங்களா தான் வரீங்க ,வராதீங்கன்னு தான் என் போன்றவர்கள் சொல்றோம் .




 


"தனுவுண்டு நம்கையில் காண்டீபம் அதன் பேர்.."
தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிக நிறுவனம் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட .. மிகச் சிறப்பாக நடந்த... ஒரு அண்டை மாநில நிகழ்ச்சியின் விடியோவை கட் பண்ணி "எப்டி தூக்கிப் போடறாங்க.. பார்த்தீங்களா?" என்று போட்டு வழக்கம்போல களேபரம் பண்ணத் தூண்டினார்கள்..
இந்த முறையும் எதைச் சொன்னாலும் வழக்கம்போலவே அமைதியாக இருப்பாங்கன்னு நினைப்பு..
ஆனால் சம்பந்தப்பட் பிரமுகர்களுக்கு ஸம்ப்ரதாய மரியாதைகள் உரிய விதத்தில் அளிக்கப்பட்டதைக் காட்டும் படங்களும், காணொளிக் காட்சிகளும், இடைவெளி இன்றி, சரமாரியாக ஆன்மிகத் தரப்பிலிருந்து வெளிவந்து இவர்கள் வாயை மூட வைக்கும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.. பாவம்..
"தனுவுண்டு நம்கையில் காண்டீபம் அதன் பேர்"
ஸமரவிஜயகோடி குழுவிற்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்..


ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஸ்கந்தகிரி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் பூஜ்யஸ்ரீ ஆசார்யர்கள் திருவுளப் பாங்கின் வண்ணம் ஸ்ரீமடம் தேவஸ்தானங்களில் மரபுவழி பூசனை செய்துவரும் ஆதிசைவ சிவாசார்யர்களும், ஸ்ரீமடம் வேதசிவாகம பாடசாலைகளில் பயிலும் மாணவர்களும் திருமுறை விண்ணப்பம் செய்யும் காட்சி..
"சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே"



காஞ்சி ஶ்ரீ காமகோடி பீடம் சமஸ்தானத்திற்குச் சொந்தமான ஹைதராபாத் ஸ்கந்தகிரி ஸ்ரீஸூப்ரஹ்மண்யர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்நின்று செய்த பிறகு,
காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீஸுப்ரஹ்மண்யரை தரிசனம் செய்தார்கள்.‌
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் ஆசார்யாளுடன் தரிசனம் செய்தார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் வேதசிவாகம பாடசாலையின் ஆதிசைவ சிவாச்சாரிய அத்யாபகர்கள், வித்யார்த்திகள் மற்றும் ஸ்தானிகர்கள் தமிழ் மறையாகிய திருப்புகழை கர்பகிருஹத்தில் ஓதினார்கள்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுக்காப்பதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஒரு முன்னோடி என்பதை நாம் அறியத் தக்கது.
ஸ்ரீ மடத்தின் மூலமாக பல வேதசிவாகம சாஸ்திர மாநாடுகள் நடத்தப்பட்டு இது விஷயமாக அநேக புத்தகங்கள் வெளியாகியுள்ளதும் இதற்கு சான்று. குறைந்த பட்சம் நாற்பது ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான அர்ச்சகப்பெருமக்களுக்கு உதவி செய்து வருகிறது காஞ்சி மடம். பல வேதசிவாகம பாடசாலைகள் ஸ்ரீ மடத்தின் வாயிலாக நடந்துக் கொண்டிருக்கிறது.



பிரச்னை இது 'பிராமண' மடம். அந்த மடத்தோடு எல்லா பிராமணர்களும் உறவாடுகிறார்களா என்றால் அதுவுமில்லை. பிராமணர் அல்லாதோர்தான் அதிகம் போகிறார்கள். இதையே எந்த ஆதீன வகையில் எதுநடந்தாலும் சமூகம் வாய்திறக்காது. பிராமண வெறுப்பு திட்டமிட்டு தீ போல பரப்பப்படுகிறது. தேச வெறுப்பும்.
வெறுப்பு, எவ்வித வெறுப்பானாலும், பகை, எதற்கும் யாருடனும் நன்மை விளைவித்ததில்லை. What is being whipped up is a mob mentality.
அவலை நினைச்சிட்டு உரலை இடிக்கிற கதைன்னு தள்ள முடியாது.
தமிழ்நாட்டில் அரசாங்க வேலைகளில்.ஏறத்தாழ பிராமணர்களே கிடையாது. தொழிலதிபர்களில் ஏறத்தாழ 98% பிராமணர் அல்லாதார். Real estate யார்கிட்ட இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தும் அனுபவித்தும் கொண்டிருப்பவர்கள் யாரென்றும் தெரியும். அரசியலில் ஒழித்துவிட்டோம் என்று அவர்களே ஒப்புக் கொண்டு பெருமிதப்ரகடனமும் செய்துவிட்டார்கள். இன்னும் என்ன செய்ய வேண்டும்? இருக்கிற மீதிப் பேரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த வேண்டும். அல்லது நாடு கடத்த வேண்டும். இதுதான் கோரிக்கை.

No comments:

Post a Comment