Wednesday, April 27, 2022

Hajj stampede deaths 2015 மெக்கா ஹஜ் யாத்திரை நெரிசலில் 700 ஹாஜிகள் பலி

  Saudi Arabia orders probe into deadly Hajj stampede -2015  

மெக்கா ஹஜ் யாத்திரை நெரிசலில்  700 ஹாஜிகள் பலி 

Government orders investigation into stampede in area of Mecca that killed more than 700 people on Muslim Eid holiday. 

Saudi Arabia orders probe into deadly Hajj stampede -Published On 25 Sep 2015

மினா (சவுதி அரேபியா),: மெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750 பேர் உயிரிழந்தனர்; இறந்தவர்களில், மூன்று பேர் இந்தியர்கள். 800க்கும் அதிகமானோர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


இந்தியாவின் மேற்கே உள்ள வளைகுடா நாடுகளில் ஒன்று, சவுதி அரேபியா. இங்கு உள்ள, முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் ஏராளமான முஸ்லிம்கள், 'ஹஜ்' பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தாண்டும், 20 லட்சம் பேர், இப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்; இந்தியாவில் இருந்து, 1.30 லட்சம் பேர் சென்றுள்ளனர்.
 

கட்டுமான பணி விபத்து

சமீபத்தில், மெக்கா பெரிய மசூதியில் கட்டு மான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கிரேன் விழுந்து, 107 பேர் இறந்தனர். இந்நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்,
 
ஹஜ் பயணம் நேற்று துவங்கியது. ஹஜ் பயணத்தின் கடைசி நிகழ்வாக கருதப்படும், சாத்தான் சுவர் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மெக்கா அருகேயுள்ள மினாவில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள லட்சக்கணக்கானோர் நேற்று குவிந்தனர். 'ஸ்ட்ரீட்-204' என்ற இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.

அப்போது, ஏராளமானோர் கீழே விழுந்தனர். இதனால், அங்கு திரண்டிருந்தவர்களிடையே பீதி ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால், விழுந்தவர்கள் மீதே பலரும் ஓடினர். இந்த நெரிசலில் சிக்கியவர்களில் இறந்தவர்கள் கணக்கெடுப்பில், நேற்று இரவு, 9:00 மணி வரையிலான நிலவரப்படி, 750 பேர் இறந்ததாகவும், 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.


மீட்பு பணியில், 4,000க்கும் அதிகமானஊழியர்களும், 200க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்களும் ஈடுபடுத்தப்பட்டன. காயம் அடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, சவுதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவிலிருந்து...

இறந்தவர்களில் பெரும் பாலானோர், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த மூன்று பேர்

இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், 'சாத்தான் சுவர் மீது கல் எறியும் இடத்தில் விபத்து நடக்கவில்லை. அதற்கு அருகே, 'ஜமராத் பாலம்' என்ற இடத்தில் ஏராளமானோர் கூடியிருந்தபோது நெரிசல் ஏற்பட்டதால், இந்த விபத்து நிகழ்ந்து விட்டது' என்றார். இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் இருந்து மற்றவர்களை வெளியேற்றும் பணியை, மீட்பு குழுவினர் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

தியாகத் திருநாளான, 'பக்ரீத்' பண்டிகை தினத்தில், இந்த விபத்துநடந்துள்ளது, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 00966125458000, 00966125496000; கட்டணமில்லா எண்: 80024 77786.

தமிழகத்தில் 3,670 பேர் பயணம்

அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் கூறியதாவது:தமிழகத்தில் இருந்து, 3,670 பேர் உட்பட, இந்தியாவில் இருந்து, 1.30 லட்சம் பேர் ஹஜ் பயணம் சென்றனர். தமிழகத்தில் இருந்து சென்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒடிசாவைச் சேர்ந்த, பீபிசான் என்ற பெண் இறந்ததாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து செல்வோர், மதியத்திற்கு பிறகு தான், சாத்தான் சுவர் மீது கல் எறியும் இடத்திற்குச் செல்வர். ஆனால், விபத்து காலையில் நடந்துள்ளது. இந்தியர்கள், காலையில், தங்கியிருந்த இடத்தில் இருந்தே தொழுகை நடத்தியதால் பெரிய பாதிப்பு இல்லை. இந்திய ஹஜ் பயணிகள், வரும், 28ம் தேதியில் இருந்து நாடு திரும்புவர். இவ்வாறு அவர் கூறினார்.

அடையாளம் காண்பதில் சிரமம்

ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர், பெரும்பாலும், ஒரே மாதிரியான வெள்ளை உடைகளை அணிந்திருப்பது வழக்கம். இதனால், நெரிசலில் சிக்கி இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Prince Mohamed bin Nayef, who chairs the Saudi Hajj committee, ordered the probe during a meeting on Thursday with senior officials responsible for the pilgrimage in Mina, where the stampede took place.

The findings of the investigation will be submitted to King Salman, “who will take appropriate measures” in response, the Saudi Press agency said.

The Saudi Arabian interior ministry says the crush of Muslim pilgrims appears to have been caused by two waves of pilgrims meeting at an intersection.

A brief history of disasters at Mecca and Medina

Ministry spokesman Major General Mansour al-Turki said high temperatures and fatigue might also have been factors in the disaster, the deadliest event to afflict the Hajj pilgrimage in more than two decades.

However, the head of Iran’s Hajj organisation, Said Ohadi, said that for “unknown reasons,” two paths had been closed off near the site of a symbolic stoning of the devil ritual where the stampede occurred.

“This caused this tragic incident,” he said on state television, according to the Associated Press news agency.

Ohadi said the path closures had left only three routes to the area where the stoning ceremony was held.

Iranian officials said on Friday that at least 131 Iranian pilgrims were among the dead.

Mina houses more than 160,000 tents where people spend the night during the pilgrimage.

Al Jazeera’s Basma Atassi, reporting from Mina, said the incident took place in a street between pilgrim camps.

“The street where it happened is named Street 204. 

https://twitter.com/Basma_/status/646972701400133632

“During and after the stampede the pilgrims continued to flock into Mina to perform the devil stoning ritual.”

Amateur video shared on social media showed a horrific scene, with scores of bodies – the men dressed in the simple terry cloth garments worn during Hajj – lying alongside crushed wheelchairs and water bottles.

The head of the Central Hajj Committee, Prince Khaled al-Faisal, blamed the stampede on “some pilgrims from African nationalities,” Saudi-owned al-Arabiya TV channel reported.

Survivors assessed the scene by standing on the top of roadside stalls as rescue workers in orange and yellow vests combed the area.

About 4,000 people from rescue services were participating in the operation to help the injured and about 220 ambulances were directed to the scene, a civil defence spokesman said.

Deadly Hajj incidents

Saudi authorities take extensive precautions to ensure the security of the Hajj and the safety of pilgrims. But tragedies are not uncommon.

In 2006, more than 360 pilgrims were killed in a stampede, also in Mina.

https://twitter.com/Basma_/status/646978957405917184

The day before the 2006 Hajj began, an eight-storey building being used as a hostel near the Grand Mosque in Mecca collapsed, killing at least 73 people.

Two years earlier, a crush at Mina killed 244 and injured hundreds on the final day of the pilgrimage.

And, in 2001, a stampede at Mina killed 35 people.

The worst Hajj-related tragedy, which happened in 1990, killed 1,426 pilgrims in a stampede in an overcrowded pedestrian tunnel leading to holy sites in Mecca.

No comments:

Post a Comment

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...