Sunday, April 10, 2022

ஹிந்தி கற்பதற்கு தமிழக அரசு பள்ளிகளில் வாய்ப்பு தேவை

தமிழ்நாட்டை விட்டு வெளியே போகவே மாட்டேன், என்பவருக்கும் ஹிந்தி அறிதல் பலன் உள்ளது
 
சென்னையில் உள்ள பல வியாபார நண்பர்கள் - மளிகை/பலசரக்கு கடை, காய்கறி வியாபாரம் செய்வோர் அனைவரும் ஹிந்தி பேச கற்றுக் கொண்டு பிற மாநில தொழிலாளர்களை தொடர் கஸ்டமர் ஆக்கிக் கொண்டனர்
 
மொழி கற்றுக்கொள்வது ஏன் அவசியம் என டிவிட்டரிலே தேவி பிரசாத் ராவ் எழுதியது.
ஒடிசாவிலே மயூர்பாஜ்ஞ் எனும் மாவட்டம் இருக்கிறது. அங்கே இருக்கும் ராய்ரங்க்புர் எனும் சிறிய நகரத்திலே சிலமாதங்கள் பணி புரிய நேரிட்டது.
அங்கே தினமும் மாலையிலே ஒரு சிறிய உணவகத்திற்கு போவேன். அது ராஜஸ்தானிலே இருந்து வந்தவர்களால் நடத்தப்படுவது. வேலை செய்வோர் வங்காளிகள். உணவு உண்போர் உள்ளூர் ஒடியாக்கள். அங்கே மசாலா பொரி நன்றாக இருக்கும்.
அங்கே இஞ்சி டீ குடித்துக்கொண்டே ஹிந்தியிலே உள்ளூர் பிரச்சினை முதல் உலகப்பிரச்சினை வரை பேசுவது வழக்கம். அப்படியே கொஞ்சம் கொஞ்சம் உள்ளூர் ஒடியாவும் கலந்து வரும்.
அந்த சிறு நகரத்திலே எல் அண்ட் டி நிறுவனம் குடிநீர் குழாய் பதிக்கும் வேலையை செய்து வருகிறது.
அன்று ஒரு நாள் அந்த நிறுவனத்திலே வேலை செய்யும் ஒரு ஆள் போனிலே தமிழிலே ஏதோ பேசிகொண்டே வந்தார். இப்போது தான் படித்து புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என்பது பார்த்தாலே தெரிந்தது.
கோபமாக பேசிக்கொண்டே இருந்தார். இருக்கும் இடம் சுற்றிலும் இருக்கும் ஆட்கள் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. பேச்சிலே இருந்து சென்னையை சேர்ந்தவர் என புரிந்தது.
போனிலே பேசி முடிந்தவுடனே சுற்றும் முற்றும் பார்த்தார். நான் தட்டுபட்டேன்.
அவரை பார்த்து எந்த ஊரு என கேட்டேன்.
இரண்டு வார்த்தைகளை தமிழிலே கேட்டவுடனே முகம் பிரகாசமானது. சென்னைக்கு மிக அருகிலே தான் சொந்த ஊர் என சொன்னார்.
என்ன பிரச்சினை? ஏன் கோபமாக இருக்கிறாய் என கேட்டேன். உடனே அருவி போல் கொட்ட ஆரம்பித்தார். தமிழிலே தான். இங்கே எல்லாரும் இந்தி தான் பேசுகிறார்கள்.



அவருக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை, யாரிடமும் பேச பிடிக்கவில்லை. இந்த சாப்பாடு வடக்கனுக மட்டுமே சாப்பிட முடியும் என கிண்டலாக சொன்னார்.
நான் அதை கேட்க கேட்க அங்கே உணவகத்திலே இருந்த அனைவரும் அமைதியானார்கள். எல்லோருக்கும் ஒரு கோபமான ஆள் வந்திருக்கிறார் என்பது புரிந்தது.
பேசி முடித்தபின்பு நான் கேட்டேன்.
ஏதேனும் ஒரு இந்தி வார்த்தை இதுவரை படித்திருக்கிறாயா என
முடியவே முடியாது என்பது தான் கோபமான பதிலாக வந்தது. ஏதோ செய்யக்கூடாத குற்றத்தை செய்ய சொல்லிவிட்டேன் என்பது போல பார்த்தார்.
நான் சொன்னேன்
எனக்கு ஒடிசாவிலே நிறைய வேலைகள் கிடைக்கின்றன. காரணம் நான் ஒடிய மொழியிலே சில பல வார்த்தைகள் கற்றது தான்.
நான் மொழியை கற்றுக்கொள்ள முதல் அடியை எடுத்துவைத்தால் உள்ளூர் மக்கள் மிச்சமிருக்கும் வேலையை சுலபமாக்குவார்கள்.
இதை காட்ட அந்த தமிழ் ஆளுக்கு புரியவைக்க ஒடிய மொழியிலே டுய் ஒத சா (இரண்டு இஞ்சி டீ) என சொன்னேன்.
நாங்கள் பேசியது என்ன என
புரிந்து கொண்ட அந்த வங்க தொழிலாளி,
இந்த ஒடிசாவிலே இருக்கும் ராஜஸ்தானி உணவகத்திலே
ஒரு கன்னடர் இன்னோர் தமிழரை ஒரு மொழி கற்றுக்கொள்ளவது நல்லது என புரிய வைக்கிறார் என புரிந்து கொண்டு
அந்த வங்க தொழிலாளி கண்டிப்பா என தமிழிலே பதிலளித்தார்.
ஒட்டுமொத்த உணவகமுமே சிரிப்பலையிலே மூழ்கியது.
எல்லோருக்கும் நாங்கள் என்ன பேசினோம் என்பது புரிந்தது.
அந்த தமிழ் மொழி வெறியர் ஆனவர் வெக்கப்பட்டு பின்பு சிரித்து சரி கொஞ்சம் முயற்சி செய்து கற்றுக்கொள்கிறேன் என சொன்னார்.
மொழி என்பது மக்கள் பேசுவதற்கான மொழி. அதன் பயனே அது தான்.
பல மொழி கற்றுக்கொண்டால் மற்றவர்களை புரிந்து கொள்ளலாம், வியாபாரம் செய்யலாம் இணைந்து செயலாற்றலாம்.
ஆனால் மொழி என்பது பிரிவினையை தூண்டக்கூடியதாக துன்பத்தை தருவதாக இருந்தால் அது மொழி எனும் தகுதியையே இழக்கிறது.
டிவிட்டரிலே தேவி பிரசாத் ராவ் -தமிழாக்கம் ராஜசங்கர் விஸ்வநாதன்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா