Wednesday, April 20, 2022

கிரிப்டோ கிறிஸ்துவ அராஜகம். திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் கிறிஸ்துவர் கல்யாணம்

திருப்புல்லாணி ஜகன்னாத பெருமாள் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்விய தேச ஆலயம். அதில் திருமணம் என  பத்திரிகை; மணமகன்- மணமகள் அனைவர் பெயரும் இந்து பண்பாட்டு பெயர்கள். கல்யாணம் நிகழ்வு பற்றிய பஞ்சாங்க குறிப்புகள் அனைத்தும் இந்து மரபு.
 
பத்திரிகை மேலே அன்னிய பைபிள் கதை தெய்வம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என தெளிவாக உள்ளது.
கிரிப்டோ கிறிஸ்துவர்கள் தங்கள் வீட்டு திருமணம் சர்ச் உள்ளையே செய்ய வேண்டும்.
இறைவன் திருக்கோவிலில் செய்வது அராஜகத்தின் உச்சம்.
அரசு இப்படி கிரிப்டோக்களை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் வருகின்ற 21 ஆம் தேதி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த விக்னேஷ், பவதாரணி திருமணம் நடைபெறுகிறது. இந்துக்களின் ஆலயத்தில் ஒரு கலாச்சாரம் பண்பாடு மற்றும் ஆஸ்தான அனுஷ்டான முறைகள் பின்பற்றப்படுகிறது. கிறிஸ்தவர்கள் திருமணம் மற்றும் இறப்பு போன்ற காரியங்களை அவர்கள் மத வழக்கப்படி நடத்துவதும் அதனை ஆவணப்படுத்துவதும் அவர்களின் வழக்கம்.
அதன்படி இந்த திருமணத்தை வேண்டுமென்றே கிறிஸ்தவ ஆலயத்தில் வைக்காமல் இந்து ஆலயத்தில் வைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது...
இந்துக்களின் ஆலயத்தை கிறிஸ்தவ மயமாக்க முயற்சி நடக்கின்றதோ என்ற அச்சம் மக்களிடையே எழுகிறது.
ஆலய நிர்வாகம் இந்த திருமணத்தை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.
கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்து திருமணங்களை அனுமதிப்பார்களா..?
இந்த செயல் மூலம் ஆலய நிர்வாகம் முற்றிலுமாக தனது நிர்வாக திறமையை இழந்து உள்ளது என்பதை காட்டுகிறது.
இந்துக்களின் ஆலயத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த திருமணம் இந்துக்களின் கலாசாரத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு நடைபெறுகிறது.
இந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு ஆலயத்தில் வேண்டுமென்றே இந்துக்களின் பாரம்பரிய முறையை சீர்குலைப்பது உடன் ஆலயத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் அதன் மூலம் சமூக அமைதியைக் கெடுக்க நினைக்கும் மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே. இராமமூர்த்தி
மாவட்ட பொதுச்செயலாளர்
இந்து முன்னணி-இராமநாதபுரம் மாவட்டம்




No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா