Tuesday, April 5, 2022

மாணவியை வளர்த்த ஷெரீப் (வயது 64) கற்பழித்திட பின்னர் மகன்கள் இம்தியாசுக்கு (34), இர்பான் (29), அனீப் (26) கூட்டு கற்பழிப்பு, கர்ப்பம் கலைத்தல் கைது

 சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : தந்தை, 3 மகன்களோடு குடும்பமே அதிரடி கைது

சென்னையில் கல்லூரி மாணவியை தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கியவர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தை, 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர். https://www.dailythanthi.com/News/State/2022/04/06001325/College-student-sexually-harassed-in-Chennai-Father.vpf




பதிவு: ஏப்ரல் 06,  2022 00:13 AM மாற்றம்: ஏப்ரல் 06,  2022 சென்னை,

கல் நெஞ்சக்காரர்களை கூட கலங்க வைக்கும் விதமாக கல்லூரி மாணவி சந்தித்த பாலியல் கொடுமைகள் போலீஸ் வட்டாரத்தில் கண்ணீர் கதையாக பேசப்படுகிறது. அந்த கல்லூரி மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:- 

எனக்கு நேர்ந்த கொடுமைகளை வாழ்க்கையில் எந்த பொண்ணும் சந்திக்கக்கூடாது. நான் தற்போது சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன்.

நான் பிறந்தவுடன் எனது தாயார் இறந்து போனார். தந்தையும் அடுத்து காலமாகி விட்டார். எனக்கு உடன்பிறந்த ஒரு சகோதரி, 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களால் என்னை வளர்க்க முடியாமல் பிறந்து ஒரு மாதம் ஆனவுடன் என்னை தத்து கொடுத்து விடுகிறார்கள். 

சென்னை பகுதியை சேர்ந்த ஷெரீப் மற்றும் அவரது மனைவி ஜமீலா ஆகியோர் என்னை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். எனக்கு நினைவு தெரிந்தபோது, அவர்களைத்தான் தந்தை, தாயாக நான் பார்த்தேன். அவர்களும் என்னை பாசத்தை கொட்டிதான் வளர்த்தார்கள். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

அவர்களுக்கு பெண் குழந்தை இல்லை. என்னை மகளை போலவே வளர்த்தார்கள். என்னை பெரிய புகழ்பெற்ற கான்வென்ட் பள்ளியில்தான் படிக்க வைத்தனர்.

ஷெரீப் (வயது 64) முதலில் சீரழித்தார்

எனக்கு தற்போது 17 வயது ஆகிறது. சென்னையில் சிறப்பாக பேசப்படும் பெண்கள் கல்லூரியில்தான் என்னை சமீபத்தில் சேர்த்து படிக்க வைத்தனர். நான் வளர்ந்து, பருவம் அடைந்த பிறகுதான் எனக்கு சோதனை காலம் தொடங்கியது. கடந்த 2020-ம் ஆண்டு என்னை மகளாக வளர்த்த ஷெரீப் (வயது 64) எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து விட்டார். மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை.

அவரது மகன் இம்தியாசுக்கு (34), தந்தை ஷெரீப் என்னோடு உறவு வைத்திருப்பது தெரிந்து விட்டது. அவரும் என்னை அவர் கணக்கிற்கு பந்தாடினார். அடுத்தடுத்து அவரது அடுத்த மகன்கள் இர்பான் (29), அனீப் (26) ஆகியோரும் என்னிடம் சுகம் அனுபவித்தனர். 3 மகன்களும் திருமணம் ஆனவர்கள். சில நேரங்களில் ஒரே நாளில் 4 பேரும் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்வார்கள். 

ஒரு கட்டத்தில் நான் தாயாக பார்த்த ஜமீலாவிடம் நடந்த விசயத்தை சொல்லி கண்ணீர் விட்டு அழுதேன். அவர் சொன்ன பதில் என்னை கதற வைத்து விட்டது. அனைத்து விசயங்களும் எனக்கு தெரியும். அவர்களின் இஷ்டப்படி நடப்பதுதான் உனக்கு நல்லது, என்று கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் பதில் சொல்லி விட்டு சென்றார்.

கர்ப்பமானேன்

இதற்கிடையே நான் கர்ப்பமானேன். உடனே ஷெரீப், தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருவை கலைக்க ஏற்பாடு செய்தார். இதற்கு பிறகாவது, எனக்கு விடிவு காலம் பிறக்கும் என்று நினைத்தேன். ஆனால் 4 பேரும் அதே உறவை தொடர்ந்தார்கள்.

அப்போதுதான் எனது சகோதரியிடம் எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை செல்போன் மூலம் கூறி அழுதேன். அதற்கு உடனடி உதவி கிடைத்தது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் கூறினார்கள்.

4 பேர் அதிரடி கைது

பாதிக்கப்பட்ட மாணவிக்கு 17 வயது ஆவதால், போக்சோ சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தாரணி வழக்குப்பதிவு செய்தார்.

புகார் கூறப்பட்ட ஷெரீப், அவரது மனைவி ஜமீலா, மகன்கள் இம்தியாஸ், இர்பான் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். .இன்னொரு மகன் அனீப்பை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கைதானவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று கூறியதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் விரைவில் ரகசிய வாக்குமூலம் பெறப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அந்த மாணவி அவரது சகோதரியின் பாதுகாப்பில் உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment