திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துவ மதமாற்ற அராஜகம்
திருப்பூர் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது மத மாற்ற குற்றச்சாட்டு- மாணவியின் அப்பாவும், இந்து முன்னியும் காவல்துறையில் புகார்
திருப்பூர் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது மாணவி மத மாற்றப் புகார் தெரிவித்துள்ளார்.
- NEWS18 TAMIL APRIL 19, 2022
|
திருப்பூர் அரசு பள்ளியில் மதம் மாற்றும் வேலையில் ஆசிரியைஈடுபடுவதாக பெற்றோர் மற்றும் இந்து முன்னணியினர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஜெய்வாபாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வரும் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவியை தினம்தோறும் பள்ளி செல்லும் பொழுது நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து செல்வது வழக்கம்.
பள்ளியில் தமிழ் ஆசிரியை திலகவதி மாணவியை பார்த்து தினமும் நெற்றியில் பட்டை போட்டு வர தெரிகிறது. ஒழுங்காக படிக்க தெரியாதா என்று திட்டியதோடு வகுப்பு தொடங்கும் முன் இரு கைகளையும் நெஞ்சில் இருக்கி வைத்து இயேசுநாதரை பிரார்த்தனை செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் ஆசிரியை இஷ்ட தெய்வங்களை கூறும்படி கேட்கும் பொழுது மாணவி சிவன் என்று சொன்னதாகவும் அதற்கு ஆசிரியை இயேசு தான் உண்மையான சக்தியுள்ள கடவுள் நம்மை காப்பாற்றக் கூடியவர் என்று சொல்வதாகவும் அதுமட்டுமல்லாமல் ஆங்கில ஆசிரியை கல்பனாவும் மாணவியை பட்டை போட்ட கழுதை என திட்டியதோடு எழுத்துப் பயிற்சியில் முருகன் சிவன் விநாயகர் கிருஷ்ணர் என்று இந்து தெய்வங்கள் பெயரை எழுதக்கூடாது என்று கடுமையாக மிரட்டியுள்ளதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனது மகள் பள்ளி செல்ல மறுப்பதோடு அச்சத்தில் உள்ளதாகவும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மகளுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் மனு அளித்துள்ளார். அப்போது, இந்து முன்னணி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment