Friday, April 22, 2022

ஈவெரா பேரன் இளையராஜா மீது ஜாதிவெறி தாக்குதல் - பிறர் மதவெறி தாக்குதல்

ஈவிகேஎஸ் இளையராஜாவை பற்றி “பணமும் புகழும் வந்துவிட்டால் தன்னை உயர்ந்த சாதி என்று நினைத்துக் கொள்வதா?” என்று கேட்டதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இதே ஈவிகேஎஸ்தான் பொதுமேடையில் கருணாநிதியை ஜாதி ரீதியாக குறியீடு வைத்துப் பேசிய முதல் தலைவர் லெவல் அரசியல்வாதி, அப்போது அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பையே ஏற்படுத்திய அந்த பேச்சு இன்று யாருக்குமே நினைவில்லை என்பதுதான்.
எப்போதும் ஜாதியை சுமந்து அலையும் இந்த ஈவிகேஎஸ் (எ) ஈரோடு வெங்கட கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவனின் பெயரில் உள்ள ஈரோடு வெங்கட என்பது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இல்லை? கண்டிப்பாக இருக்கும். காரணம் தமிழகத்தில் ஜாதி ஒழிப்பு போராளி என்று அடையாளப் படுத்தப்படும் ஈரோடு வெங்கட ராமசாமி (எ) ஈவெரா (எ) பெரியாரின் பெயரில் வரும் அதே ஈரோடு வெங்கடதான்.

ஈவெராவின் சகோதரர் கிருஷ்ணசாமியின் மகன் சம்பத்தின் மகன்தான் இளங்கோவன்.
தேவையில்லா பின்குறிப்பு: இளையாராஜா தன் சாதியை மறந்து விடக்கூடாது என்ற பேச்சை அண்ணார் பேசியது திக மேடையில், இன்னொரு சாதியொழிப்பு போராளி மிக்சர் வீரமணி முன்பு.
  

 

வரலாற்றுச் சுவடுகள் என்று தினத்தந்தி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. ரேண்டமாக பக்கத்தை புரட்டியபோது கண்ட சில தகவல்கள் பல கேள்விகளை எழுப்புகிறது.
+++
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதை துக்க நாள் என்று பெரியார் அறிக்கை விடப்போகிறார் என்பது கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணா உட்பட யாருக்கும் தெரியாது. பெரியாருக்கும் அண்ணாவிற்கும் பிணக்கு என்று கருத்து உலவுகிறது.
ஆனால் பின்னர் ஈரோட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் “பெட்டிச்சாவியை நானே வைத்துக் கொண்டு எத்தனைக் காலம் அலைந்து திரிவது? அதனால் சாவியை அண்ணாதுரையிடம் கொடுத்துவிட முடிவு செய்துவிட்டேன்” என்று பெரியார் அறிவிக்கிறார். அதற்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது
அடுத்த வருடமே “எனக்கும் என் பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும். ஆகையால் நான் ஐந்தாறு வருடங்களாக பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்கத்தின் நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறவருமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமை ஆக்கிக் கொண்டு ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று அறிக்கை விடுகிறார்.
பெரியார் தனது திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட ராஜாஜியை தனிப்பட கடிதம் எழுதி கேட்டிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதும் ராஜாஜி “30 வயது பெண். தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும் சொத்தை தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்புவதில் பயனில்லை” என்று சொல்லி அந்த கல்யாணத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த ரகசியம் பெரியர் இறந்த பிறகே வெளியிடப்படுகிறது.
திருமணம் முடிந்த பின் “இயக்கத்துக்காக முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்திவிட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம் சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி எனக்கு வாரிசுதான்” என்று அறிக்கை விடுகிறார்.
திக உடைந்து திமுக உதயமாகிறது.
+++
கேள்விகள்
அண்ணாவை கிட்டத்தட்ட வாரிசாக நியமிக்க முடிவெடுத்த பெரியார் திடீரென அவசரமாக மனம் மாறியது ஏன், எதற்கு, எப்படி?
அண்ணாவை விட, நீண்ட காலம் உடன் பயணித்த மற்ற எல்லாரையும் விட ஐந்தாறு வருடம் மட்டுமே பழகிய மணியம்மையை வாரிசாக நியமித்து இயக்கத்தையும் சொத்தையும் அவர் பெயரில் எழுதித் தரும் அளவுக்கு பெரியாருக்கு நம்பிக்கை வந்தது ஏன், எதற்கு, எப்படி?
இந்தத் திருமணம் சட்டப்படிக்கான பெயரே தவிர காரியப்படி எனக்கு வாரிசுதான் என்கிறாரே, சொத்துக்கு வாரிசு என்றால் கல்யாணம் செய்ய வேண்டுமா என்ன, ஒரு உயில் எழுதி வைத்தால் ஆகாதா?
கல்யாணம் செய்துவிட்டால் மனைவி என்பதாலேயே ஆட்டோமேடிக்காக இந்த சோற்றால் அடித்த பிண்டங்கள் மணியம்மையை தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை செயல்படுத்த முயற்சி செய்த முன்னோடியா பெரியார்?
அதிகார அரசியலின் மூலமாகவே நாம் சமூக நீதியை அடைய முடியும் என்று அண்ணா நம்பினார். ஈவெராவோ தேர்தல் அரசியலுக்கு வர விரும்பவில்லை. எனவேதான் சமூக நீதிக்காக அதிகாரத்தை அடையும் குறிக்கோளுக்காக அண்ணாதுரை திமுகவை தோற்றுவித்தார் என்பது நம் நூற்றாண்டின் மாபெரும் உருட்டா? அடிப்படையில் கல்லாப்பெட்டி ப்ரச்னைதான் திமுகவிற்கு பிள்ளையார் சுழி போட்ட முக்கிய ப்ரச்னையா?
இணைப்பு: வரலாற்றுச் சுவடுகள் நன்றி தினத்தந்தி 


No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...