Wednesday, April 27, 2022

சர்ச் மணியை அடித்து கூட்டத்தை திரட்டி காவல்துறையையே தாக்கும் ரௌடித்தனம்

இன்றைய (27-04-20) விகடன்.காமில், "அடிக்கடி ரோந்து.. சர்ச் மணியால் கூடிய மக்கள்..எஸ்.ஐ-க்கு அதிர்ச்சிக் கொடுத்த குமரி கிராம மக்கள்!" என்கிற தலைப்பில் ஒரு செய்தி வந்திருந்தது. அதன் சாரம்சம் என்னவென்றால்,
"கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் முள்ளூர்த்துறை மீனவ கிராமத்தில் தடுப்பு நடவடிக்கை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றுமாறு போலீசார் கேட்டுக் கொணனர்.
மேலும் அப்பகுதியில் வாலிபர்கள் கடற்கரையோரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களையும் போலீசார் கண்டித்து விரட்டியடித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆலய மணியை ஒலிக்க வைத்து பொதுமக்களை திரட்டி போலீசாரை கல்வீசி தாக்கியுள்ளனர். மேலும் காவல் துறைக்கு சொந்தமான இரண்டு வாகனங்களையும் கல்வீசி உடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில் அப்பகுதியினர் கல்வீசி தாக்கியதில் இதில் புதுக்கடை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், தலைமை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி போலீஸ் படையுடன் அங்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். போலீஸ் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய சிலர் கைது செய்யப்பட்டனர்." என்கிறது அந்த செய்தி.
இந்த செய்தியை ஒரு வித அச்சத்துடன் தான் படிக்க வேண்டி உள்ளது. காரணம், "ஊரடங்கை மீறி கூடிய மக்களை கலைந்து போக காவல்துறை சொன்னால், சர்ச் மணியை அடித்து கூட்டத்தை திரட்டி காவல்துறையையே தாக்கும் ரௌடித்தனத்தை சாதாரணமானதாக நினைத்து அலட்சியப்படுத்திவிட முடியாது. சிறுபான்மை சமூகத்திற்கு அளவுக்கு அதிகமாக கொடுக்கும் செல்லத்தின் காரணமாகவே இம்மாதிரியான ரௌடித்தனமான செயல்கள் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இம்மாதிரி சர்ச் மணியை அடித்து வன்முறை செய்த இன்னொரு சம்பவமும் உள்ளது. அதை பற்றியும் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதையும் இத்துடன் இணைத்தே தருகிறேன். தினமலர் நாளேட்டில் (03-01-2018) "புதுகை அருகே இரு தரப்பினர் மோதல்: கடைகள் அடைப்பு" என்கிற தலைப்பில் வந்த ஒரு செய்தியை, முழுமையாக வாசித்ததில் நமக்குள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த செய்தியிலிருந்து.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ஆலத்துாரைச் சேர்ந்தவர் பால்ராஜ், 52. இவர், இலுப்பூர் கடை வீதியில், பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை, இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த சிலர், போதையில் வந்து, பால்ராஜ் பெட்டிக் கடையில் சில பொருட்கள் வாங்கினர். அப்போது, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியுள்ளனர். இதை தட்டிக் கேட்டவர்களையும் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், அந்தோணியார் கோவில் மணியை ஒலிக்க செய்து, கிறிஸ்தவ இளைஞர்களை திரட்டி, மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று, சரமாரி கல்வீச்சிலும், தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இதில், சில கடைகள் சேதமடைந்தன. இரு தரப்பினருக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில், 11 பேர் படுகாயமடைந்தனர். சாதாரணமாக வாசித்து கடந்து போக கூடிய செய்தியாக நமக்கு தெரியவில்லை அது. இந்துத்வா வன்முறையை பார்த்திருக்கிறோம். இஸ்லாமிய வன்முறையை பார்த்திருக்கிறோம். "எங்களுக்கும் வன்முறை வரும்" என காட்டும் கிறிஸ்தவ வன்முறையா அது. சாதாரண பெட்டிக்கடை வாக்குவாதத்தால் நிகழ்ந்த கைகலப்புக்கு, "அந்தோணியார் தேவாலய மணியை ஒலிக்க செய்து, கிறிஸ்தவ இளைஞர்களை திரட்டி வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதை நாட்டிலுள்ள முற்போக்குகளும், பகுத்தறிவாளிகளும் கண்டிக்க வேண்டாமா? கேடு கெட்ட அவர்களோ, "மதத்துகொரு நியாயம் பேசி கொண்டு - மடத்தனமாக, இந்த செய்தியை மறைத்துவிடுகிறார்கள். மேலும் இதில் பகுத்தறிவு முகமூடி போட்டிருக்கிற பலரும், சிறுபான்மை மதவெறியை கொண்டிருப்பவர்களே. எல்லா பெருந்தவறுகளுமே, சிறியதிலிருந்து வந்தவையே. இந்த கிறிஸ்தவ வன்முறையும் நாளை பெரியதாய் உருவெடுக்கலாம்.
"தேவாலய மணி - நாளையும், வேறொரு இடத்திலும் ஒலித்து வன்முறையை துண்டாது என்பதற்கு என்ன நிச்சயம்" என அன்றைக்கு கேட்டிருந்தோம். இன்றைக்கு அது கன்னியாகுமரியில் நடந்துவிட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேவாலய மணி சப்தத்துடன் நேரம் சொல்லி, ஒரு பைபிள் வசனமும் சொல்ல அனுமதிக்கப்படுகிறது என்றால் ஒரு அரசாங்கம் மத உணர்வுகளுக்கு, நம்பிக்கைகளுக்கு, செவி சாய்த்து அதனை அனுமதிக்கிறது. அதை இத்தகைய வன்முறை வெறியாட்டத்திற்கு பயன்படுத்தினால்?
பகுத்தறிவாதி என சொல்லி கொள்கிற, ஈவெராமசாமியிடம் பகுத்தறிவு பாடம் பயின்ற திராவிடர் கழகத்தவன் கேட்க வேண்டிய இந்த கேள்வியை - அவர்கள் கேட்க அச்சப்பட்டு தொடை நடுநடுங்கி சாவதால், அவர்கள் சார்பாக "இந்த கேள்விகளை" நாம் கேட்க வேண்டி உள்ளது. இது போன்ற ஒரு அயோக்கியதனத்தை பெரும்பான்மை சமூகம் செய்திருந்தால் - அப்போதும், இப்போது போல சாதாரணமாக கருதி ஈவெராவாதிகள் மூடி கொண்டு இருந்திருப்பார்களா. என்ன ஒரு தி.க.வினரின் அயோக்கியதனம்.
ஒரு மதத்தின் யோக்கியதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இடத்தில் என்ன மாதிரியாக உள்ளது என பார்க்க வேண்டும். ஐரோப்பா நாடுகளில் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் செய்யாத வன்முறையாட்டமா? அதுவே இப்போது தமிழகத்தில் இந்த நிகழ்வில் மூலம் நடந்துள்ளது. ஒரு நாட்டில் அமைதி நிலவ "ஒரு மதத்தின் கைகளை மட்டும் கட்டிவிட்டால் போதும்" என முட்டாள்தனமாக நம்பும் தி.க.வினரை வைத்து கொண்டு, மதவெறியை ஒழிக்க முயற்சிப்பது, ஒரு கையில் ஓசை வருமென முட்டாள்தனமாக நம்புவது போன்று தான்.

 

 

 

மது விற்ற 'டிவி' நிருபர்கள்: திருப்பூரில் 4 பேர் மீது வழக்கு

 Added : ஏப் 28, 2020 


திருப்பூர்:காரில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற, 'டிவி' நிருபர், கேமராமேன் உட்பட, நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எஸ்.வி., காலனி பகுதியில், போலீசார் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த ஒரு நபர், போலீசாரை பார்த்ததும் ஓடினார். அவரை பிடித்து விசாரித்ததில், மணிமுத்து, 48 என்பதும், மது பதுக்கி விற்பதும் தெரிந்தது.தொடர் விசாரணையில், இவர், மணிகண்டன், 39 என்பவரிடம் இருந்து மது வாங்கி விற்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலசீார், 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, 'டிவி' நிருபர் பரூக் மற்றும் கேமராமேன் நவ்ஷத் ஆகியோரிடம் இருந்து, மூன்று பெட்டி மதுபாட்டில்களை வாங்கி, விற்று வந்தது தெரிந்தது. இதற்காக, இருவரும் பணியாற்றும், 'டிவி' நிறுவனத்தின், 'லோகோ'வை தங்களது காரின் முன் வரைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக காரில் மதுபாட்டில் பதுக்கி, திருப்பூர் முழுவதும் சுற்றி, கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். மணிமுத்து, மணிகண்டன் சிக்கியதும் தெரிந்ததும், பரூக், நவ்ஷத் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடி வருகிறோம்' என்றனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...