Tuesday, April 19, 2022

குமாரவயலூர் முருகன் கோவிலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறியபடி புதிய அர்ச்சகர்கள்

வயலூர் ஆலயம் என்பது அதற்கென்ற தோற்றம் வழக்கம் மரபுகள் நடைமுறைகள் உள்ள அமைப்பு. அதன் விதிகள் படியே அது இயங்க முடியும்.




தமிழர் மெய்யியல் மரபில் ஆகமமே பிரமாணம் என்பது உச்சநீதிமன்றம் வரை உறுதி செய்யப் பட்டும் மீறுவது தமிழர் விரோத மனப்பான்மை
வயலூர் முருகன் பெயரை கிருபானந்த வாரியார் மேடை தோறும் கூறி வணங்குவார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மீறப் படுகின்றன.
ஆகமமே அடிப்படை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறப்படுகிறது.
நீதிபதி மகராஜன் கமிட்டி கருத்து மீறப்படுகிறது.


ஆச்சார்யர்களை காப்பதே ஹிந்துக்களின் முதல் கடமை.
மூர்த்தி தலம் தீர்த்தம்
முறையாக துதிப்பதன் பலனே
குரு வாய்ப்பதற்காகவே.
ஆச்சார்யர்களை ஒவ்வொரு கிராமத்திலும் காப்பதே முதல் அறனாகும்.
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
ஸ்ரீமத் நாவலர் கோன்
வண்தொண்டர் பரம்பரையினரை காப்பதே தென்னாடுடைய சிவனார் சேவை.
எத்தனையோ அவமானத்திலும்
கஷ்டத்திலும்
ஆச்சார்யர்கள் வாழ்வது நமது மூதாதையர்களின் நற்ப்பெயரை நம் சந்ததியினர் சுமக்கவே.
உணர்வீர்
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்கு ஓர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருபாதம் துணை 

குமாரவயலூர் முருகன் கோவிலில் புதிய அர்ச்சகர்கள் கருவறைக்கு சென்று பூஜை செய்ய எதிர்ப்பு

திருச்சி: திருச்சி அருகே பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோவில் உள்ளது. இங்கு இதுவரை 5 அர்ச்சகர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகளை செய்து வந்தனர்.

இவர்களில் 2 பேர் இந்து அறநிலையத் துறையால் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள். ஒருவர் தினக்கூலி அடிப்படையிலும், இருவர் கடந்த 12 வருடங்களாக சம்பளம் ஏதும் வாங்காமல் பணி நிரந்தரமாகும் என்ற கனவில் அர்ச்சகராகவும் இருந்து வந்தனர்.

தற்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் கீழ் கார்த்திக் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோவிலுக்குள் நுழைந்து அர்ச்சனை செய்ய முற்பட்ட போது ஏற்கனவே இருந்த பரம்பரை அர்ச்சகர்கள் உள்ளே வரக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.

இதனை அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வயலூர் கோவிலில் திரண்டனர். இதனை அறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் மோகனசுந்தரம், ஸ்ரீரங்கம் ஆய்வாளர், வயலூர் செயல் அலுவலர் மற்றும் அருகில் உள்ள கோவில் செயலாளர்கள் ஆகியோர் வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் புதிய அர்ச்சகர்கள் இருவரும் சென்று முருகன் சன்னதியில் அர்ச்சனை செய்தனர் .

இந்த நிலையில் ஏற்கனவே இருந்த அர்ச்சகர்கள் உள்ளே செல்லாமல், வெளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பரம்பரை அர்ச்சகர்கள் தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில், கோவில் தோன்றிய காலத்திலிருந்து நாங்கள் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகராக இருந்து வருகிறோம் எங்களுக்கு தெரிந்து இது நான்காவது முறையாகும். ஏற்கனவே பணிநிரந்தர கனவில் 2 அர்ச்சகர்கள் உள்ளனர்.

ஆனால் தற்போது எங்கிருந்தோ வந்த இருவரை பணிநிரந்தரம் செய்த இந்து அறநிலைய துறை 12 வருடங்களாக பணிசெய்து வந்தவர்களை உள்ளே வரக்கூடாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பினார்.

புதிய அர்ச்சகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரம்பரை அர்ச்சகர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

No comments:

Post a Comment