"நிலை மறந்தவன் படத்தை வெளியிட கூடாது களம் இறங்கும் கிறிஸ்தவ அமைப்புகள்...


நிலை மறந்தவன் திரைப்படத்தில் கிறிஸ்தவ மத போதகர்களின் செயல்பாடுகள் மற்றும் சில அமைப்புகளின் ஏமாற்று வேலை போன்றவற்றை பட்டியல் போட்டு இருப்பதாகவும், இந்த திரைப்படம் மலையாள திரைப்படமாக வெளிவந்தாலும் தமிழில் சில மத போதக அமைப்புகள் எவ்வாறு மக்களை முட்டாள் ஆக்குகின்றன என்பதை மையமாக வைத்து திரைப்படம் தயாரிக்க பட்டு இருக்கிறது.
இதில் இடம்பெற்ற கதா பாத்திரங்களுக்கு மோகன் சி லாசர்ஸ், சற்குணம் போன்றவற்றை நினைவு படுத்தும் விதமாக பெயர்கள் அமைந்துள்ளது என்பது ட்ரைலர் மூலம் தெரியவந்துள்ளது, இது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, வேண்டும் என்றே கிறிஸ்தவ அமைப்புகள் மீது தவறான எண்ணத்தை விதைக்க இந்த திரைப்படம் தயாரிக்க பட்டு இருப்பதாகவும், உடனே இந்த படத்தை தடை செய்யவேண்டும் என சில அமைப்புகள் விரைவில் போர் கொடி தூக்க இருக்கிறதாம்.
நிலை மறந்தவன் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு இது குறித்து மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் சில கிறிஸ்தவ அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது, நிலை மறந்தவன் திரைப்படத்தில் ஜோதிகா குறித்த குறியீடும் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இந்த படம் திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பல்வேறு விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் என அரங்கேறும் என்பது மட்டும் தற்போது தெளிவாகிறது. நிலை மறந்தவன் திரைப்படத்தின் ட்ரைலர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment