Saturday, April 30, 2022

காதலிக்க மறுத்த ஹிந்து மாணவிக்கு கத்திக்குத்து: ஆசிக் கைது… ‘லவ் ஜிகாத்’?!

 

காதலிக்க மறுத்த ஹிந்து மாணவிக்கு கத்திக்குத்து: ஆசிக் கைது… ‘லவ் ஜிகாத்’ டார்ச்சரா?!

பிளஸ் 2 படிக்கும் மாணவியை கத்தியால் குத்திய ஆசிக் என்கிற இளைஞரை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து போலீஸில் ஒப்படைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் ஒய்.எம்.சி.ஏ. அருகே இயங்கி வருகிறது கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் ஒரு தனியார் பள்ளி. இங்கு ஹிந்து மதத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை, கீழ பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஆசிக் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறான். தனது காதலை அந்த மாணவியிடம் வெளிப்படுத்தியபோது, அதற்கு அந்த மாணவி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், விடாமல் அந்த மாணவியை டார்ச்சர் செய்து வந்திருக்கிறான் ஆசிக்.

இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல பள்ளிக்கு வந்திருக்கிறார் அந்த மாணவி. பெட்போர்டு சாலை அருகே வந்தபோது ஆசிக் மது போதையில் பின்தொடர்ந்து வந்திருக்கிறான். பின்னர், மாணவியை வழிமறித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தி மிரட்டி இருக்கிறான். அதற்கு அந்த மாணவியோ, இனிமேலும் தன்னை தொந்தரவு செய்தால் தனது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று கூறியதாகக் சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் வயிற்றில் குத்தி இருக்கிறான். இதனால், வலி தாங்க முடியாமல் அலறியபடியே சம்பவ இடத்திலேயே மாணவி துடிதுடித்து சரிந்திருக்கிறார்.

இதையடுத்து, ஆசிக் தப்பியோட முயன்றிருக்கிறான். ஆனால், மாணவியின் அலறல் சத்தம் கேட்டு கூடிய அப்பகுதி மக்கள், ஆசிக்கை பிடித்து அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்த நையப்புடைத்தனர். பிறகு, போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனிடையே, பொதுமக்களில் சிலர், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் போன் செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம், கத்திக்குத்து காயமடைந்த மாணவியை ஏற்றிக் கொண்டு குன்னூரிலுள்ள அரசு லாலி மருத்துவமனைியல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இச்சம்பவமும் லவ் ஜிகாத்தின் ஒரு பகுதிதான் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இஸ்லாமிய அடிப்படைவாதிகள் லவ் ஜிகாத் என்கிற பெயரில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகளை குறிவைத்து இஸ்லாமிய இளைஞர்களை களமிறக்கி விட்டிருக்கிறார்கள். இவர்களும் ஹிந்து மாணவிகளை குறிவைத்து காதல் வலை வீசுகிறார்கள். இதில் சிக்கும் மாணவிகளை திருமணம் செய்து கொள்வதுபோல செய்துவிட்டு, பின்னர் அரபு நாடுகளுக்கு செக்ஸ் தொழிலாளிகளாக விற்று வருகிறார்கள்” என்கின்றனர். ஆகவே, ஹிந்து மாணவிகளும், பெண்களும் விழித்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், லவ் ஜிகாத்தில் விழுந்து விடக்கூடாது என்கின்றனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...