Friday, April 22, 2022

கிறிஸ்துவ மதவெறி மதமாற்ற அராஜகம் - அரசு பள்ளி தொடர்ந்து அரசு மருத்துவமனையில்

அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதிக்கம்! 

Kathiravan Mediyaan News  https://mediyaan.com/government-hospital-christian-missionaries/       தேனி அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மிஷநரிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அப்பாவி ஹிந்துக்கள், ஏழை எளியவர்கள் மற்றும் வறுமையில் வாடும் நபர்களை தேடி பிடித்து மதம் மாற்றுவதில் கேரளாவிற்கு அடுத்த இடம் தமிழகம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு, மிஷநரிகளின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது என்பதே நிதர்சனம். இதற்கு, முக்கிய காரணம் என்னவெனில் ஓட்டு அரசியல் என்பது பலரின் குற்றச்சாட்டு. 

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகள் லாவண்யா மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமே சிறந்த சான்று. பா.ஜ.க.வை தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் லாவண்யாவிற்கு குரல் கொடுக்கவில்லை என்பதை தமிழகமே நன்கு அறியும். இப்படியாக, கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் போக்கை துளியும் மாற்றிக் கொள்ளாமல் மிக தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ராஜிவ்காந்தி அரசு, பொது மருத்துவமனையில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், உள்நோயாளிகளுக்கு ஜபம் செய்ய வந்துள்ளனர். அப்பொழுது, ஏசு உங்களின் நோய்யை போக்குவார், அவரே மெய்யான தெய்வம் என்றும், ஏசுவின் அற்புதத்தை படித்து பாருங்கள் என்று துண்டு பிரசுரம் வழங்கியுள்ளனர். அதே வார்டில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த ஒரு ஹிந்து அமைப்பை சார்ந்த நபர் ஒருவர் தனது உறவினருக்கும், காவல்துறைக்கும் இத்தகவலை கூறியுள்ளார்.

இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கியவர்களை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதில் ஒரு நபர் நான் யார் தெரியுமா? என்னை நீங்கள் தடுக்க முடியாது. நான் ஐபம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர். நான் தொட்டால் நோய் குணமாகிறது. என் உடம்பில் ஏசு புகுந்து சொல்கிறார். என்னை யாரும் தடுக்க முடியாது என்று காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மதபிரசங்கம் செய்தவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதில் ஒருவர் ஐ.ஏ.எஸ் உமாசங்கர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் தான், தேனி அரசு மருத்துவமனையில் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை கிறிஸ்தவ மிஷநரிகள் மதம் மாற்றும் முயற்சி செய்வதாக இந்துமுன்னணி காவல்துறையில் புகார் மனு அளித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தாமரை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...