பூமியை - இயற்கையை நேசிப்போர் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்
இறைச்சி உண்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.
புலால் உண்ணாமை(Refrain from meat eating
புலால் உண்ணாமை : – ஏன் புலால் உண்ண க்கூடாது ?
மனிதன் ஜீவ ராசிகளில் மிகவும் உயர்ந்த இடத்தில் படைக்கப்பட்டு இருக்கின்றான்.அவனை விட உயர்ந்த கதியில் யாரும் இல்லை என நினைக்கின்றேன்.ஆகவே அவனுக்கு கீழே இருக்கும் உயிர்களை பேணி காக்கும் பொறுப்பில் உள்ளான். அவன் தன் உடன் பிறப்புகளை கொன்று புசிக்கலாமா? என ஆய்வோம்.
உடற்கூறு , மன மெய்களால் பார்க்கும்போது , புலால் உண்ணல் மனிதனுக்கு அவசியமில்லை. சில சமயங்களில் தன் வாழ்வை பாது காக்க, அவன் அந்த சந்தர்ப்பங்களில் வெட்டி புசிக்கலாம் என தோன்றுகின்றது.
நமக்கு உள்ள உடற்கூறு குரங்கு களுக்கு உள்ளது போலவே உள்ளது. நம் வயிறு அமைப்பும், ஜீரண உணவு பாதைகளும், அசைவ உணவு உண்ண படைக்கப் படவில்லை. மாமிசத்தை உண்ணும் ஜீவன்கள், அந்த உணவு இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது. நரி, ஓநாய், சிங்கம், புலி’ மற்றைய ஜீவன்கள் உள்ளன. உணவு பழக்கங்களை, ஓப்பு நோக்கும் போது, மனிதன் மற்ற ஜீவன் களை கொன்று தின்ன வேண்டும் என இல்லை.
இந்து, பௌத்தம், சமணம், சீக்கிய கொள்கைகள் புலால் மறுத்தலை போதிக்கின்றன. பொதுவாக மனிதன், சக மனிதர்கள், மற்ற பிற உயிர்களோடும் அன்பாக இருத்தல் வேண்டும். அவன் எந்த ஓர் உயிருக்கும் தீங்கு நினைக்காது இருக்க தலைப்பட்டால், அவனிடம் அருள் பிறக்கும். அதனால் அவன் ஒழுக்கம், அறிவு, ஞான ங்களை பெற்று நல்ல பதத்தை அடைய இயலும் என்கின்றது அற நூல்கள். மேலும் , புலால் உண்ணல் மிகவும் கொடியது எனவும் , இதற்கு துணையாக இருப்பவருக்கும் கேடு விளைகின்றது என்பதாம் .
தாவர உணவை பச்சையாகவே உண்ண இயலும். அதே நிலையில் ஊன் உண்ணல் கொள்ள முடியாது. ஆக ஊன் உண்ணல் மனிதனுக்கு ஒவ்வாது ஆகின்றது.
புலால் தவிர்த்தலை பற்றி, திருவள்ளுவ பெருந்தகை என்ன விளக்குகின்றார் என ஆய்வோம் .
௧. தன் உடலை பேண பிற உயிரின் உடம்பை தின்பவன் எவ்வாறு அருளாளாக இருக்க முடியும்? அவன் கொடியோன் ஆகின்றான். (அவன் உடலை தான் போக்க இயலும்.ஆனால், உயிர் எப்போதும் அழிவதில்லை, நித்தியமானது )
௨. பொருளை போற்றுகின்றவனிடம் தான் பொருள் சேரும். அது போல, பிறர் மாட்டு அன்பு செய்தால் தான் அருளை பெருக்க முடியும். பிற ஜீவன்களை வதைப்பதாலும், உண்ணுவதாலும் அருள் வளர சாத்தியம் இல்லை என ஆகின்றது. ஆகவே அவன் மேல் கதிக்கு போகவே இயலாது.
௩. ஆயுதத்தை கொண்டவர் நெஞ்சம் இரக்க சிந்தனையை தூண்டாது போல, பிறிதோர் உடலை சுவைத்து உண்டவர் மனமும் அவ்வாறே ஆகும்.
௪. கொல்லாமையே அருளாகும். அறமாகும் .கொல்லுதல் அருளற்ற செயல். அதனால் வரும் ஊன் உண்ணல் தீங்காகும்.( பாவம்)
௫. ஒருவரும் ஊன், உண்ணாவிடில், அதன் பொருட்டு யாரும், பிறிது ஓர் உயிரை வதைக்க மாட்டார்கள்.
௬. புலால் என்பது வேறு ஓர் உயிரின் புண் என உணர்ந்தவரும், நல்ல மதி உடையோரும், உண்ண மாட்டார்கள். அது இழிந்ததாம். ஊனை உண்பவர், ஊனை உண்டாக்கும் பொருட்டு கொல்பவர், விற்கின்றவர் ,சமைப்பவர், ருசி யூட்டுபவர், பார்ப்பவர், தூண்டுபவர் என ஏழு பேர்களையும் இந்த தீங்கு சார்கின்றது.
௮. எந்த உயிரையும் வதைக்காதவனை, மற்ற எல்லா உயிர்களும் கை கூப்பி தொழும், என பரிந்துரை செய்கின்றார்.
மற்ற படி, சக்தி படைத்த ஆனை, சைவ வகைகளை தான் உண்கின்றது. அதன் உயிர் வாழ்க்கை நூறு ஆண்டுகள். சைவம் உண்ணும் கண்டா மிருகம், நீர் யானை, பெரும் சக்தி படைத்தவை. சிங்கம், புலி வகைகள் சராசரி ௨௦ ஆண்டுகளே.
மற்றோர் உண்மை! அசைவ உணவு மிகவும் விலை கூடுதலானதே என தெரியும்.
1 பவுண்டுதொழிற்சாலை மாட்டு இறைச்சியை உண்டாக்க 10 முதல் 15பவுண்டு வரை தானியங்களும் மற்றும் பெரும் விசை ஆற்றலும் தேவை படுகின்றது. சந்தையில் விற்பனையாகும் புலால் ஒரு ஆலை நிறுவனத்தில் உண்டாக்க படுபவை. மாடுகள் திறந்த வெளியில்மேய்க்க ப்பட்டுவளர்க்கப்படுவது இல்லை. அவைகளுக்கு உடல் பெருக்க தேவையில்லா தானியங்கள் கொடுக்கப் பட்டு கொழுக்க வைக்கப்படுகின்றன.
இவைகள் உணவு உண்டு அசை போடும் கால்நடைகள். சந்தைக்காக மிக அதிக அளவில் உண்டாக்க ப்படுகின்றன . இந்த கால் நடை கள் அசை போடுவதால் மீத்தேன் வாயுக்கள் உண்டாக்குகின்றன. மேலும் அவை வெளியேற்றும் சாணம் சிறுநீர், மீத்தேனை உண்டாக்குகின்றது. இது காற்றுமண்டலத்தை மாசுப் படுத்துகின்றது. இந்த மாசு நாம் செலுத்தும் வாகன ஊர்திகளிலிருந்து வெளி யேற்றும் மாசுக்களை விட அதிகம் என்கின்றனர். ஆலைகளை உண்டாக்க காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலம், நீர்,மின்சக்தி, விரயம் ஆகின்றது. இது 2050 ஆண்டுகளில் பெரிய அளவில் பாதிக்கும் என கணிக்கின்றனர்.
சில ஐரோப்பிய நாடுகள் “இறைச்சியில்லா திங்கள்கிழமைகள்’ என கொண்டாடுகின்றனர். அன்று அவர்கள் இறைச்சி உண்பது இல்லை. சீனர்கள் சென்ற நூற்றாண்டுகளில் பெரும்பாலோர் சைவ உணவை பின் பற்றிய தாக தெரிகின்றது. சில கீழையநாடுக ளில் 30 சதம் மக்கள் தீவிர சைவர்க ள். 70 சதம் சில நாள் சைவர்கள் என வும் கூகிள் சொல்கின்றது ஆகவே புலால் உணவை தவிர்க்கலாம் என்றே நினைக்கின்றேன்.
மேற்கோள்கள்: ௧. பரிமேலழகர் திருக்குறள் உரை
௨. கூகிள்
௩. Vegitarian myth – by Lierrie Keith