Monday, April 4, 2022

உத்தர பிரதேச கோரக்நாத் கோயிலில் அரிவாள் வெட்டு: முஸ்லிம் ஐஐடி பட்டதாரி இளைஞர் கைது

உ.பி. முதல்வர் யோகி கோயிலில் இஸ்லாமிய அடிப்படைவாதி தாக்குதல்..!

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோயிலில் இஸ்லாமிய அடிப்படைவாதி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
https://mediyaan.com/korakpur-korakknath-temple-islam/
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் அகமது முர்துசா. 29 வயதாகும் இவர், மும்பை ஐ.ஐ.டி.யில் ரசாயனப் பொறியியல் படித்தவர். படிப்பை முடித்தவர், மும்பையிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனிடையே, அகமது முர்துசாவுக்கும் கடந்தாண்டு வேலை பறிபோய் விட்டது. இதன் பிறகு, சொந்த ஊரான கோரக்பூருக்கே திரும்பி இருக்கிறார். இவரது தந்தை முனீர் அகமதுவும் மும்பையிலுள்ள சட்ட ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவரும் கடந்தாண்டு ஓய்வு பெற்று குடும்பத்துடன் மீண்டும் கோரக்பூருக்கு திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில்தான், நேற்று இரவு கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோயிலுக்கு வந்த அகமது முர்துசா, அல்லாகூ அக்பர் என்று கோஷமிட்டபடியே கோயிலுக்குள் நுழைய முற்பட்டிருக்கிறார். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அகமது முர்துசாவை தடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், தான் வைத்திருந்த அரிவாளால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பக்தர்களை சரிமாரியாக வெட்டி இருக்கிறார் அகமது முர்துசா. இதில், 2 ஜவான்கள் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளும், பொதுமக்களும் சேர்ந்து அகமது முர்துசாவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதில், ஹைலைட் என்னவென்றால் இக்கோயிலின் தலைமை பீடாதிபதி வேறு யாருமல்ல, தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் தான்.

இதுகுறித்து கோரக்பூர் மண்டல கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அகில் குமார் கூறுகையில், முர்துசா பற்றிய கூடுதல் விவரங்களை போலீஸார் சேகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அகமது முர்துசா பற்றி அவரது பெற்றோரிடம் விசாரித்ததில், ஏதோ வேலையாக சனிக்கிழமை வீட்டை விட்டுச் சென்றதாகவும், அதன்பிறகு திரும்பி வரவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தனர். தவிர, கோயில் வாசலில் இருந்து முர்துசாவின் பையை சோதனையிட்டதில், பென் டிரைவ், லேப்டாப் மற்றும் கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து, முர்துசா குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க பென் டிரைவ் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அவரிடமிருந்து செல்போன், பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, முர்துசா சிறு வயதாக இருக்கும்போதே, பிற மதத்தினர் பற்றி அவரது மனதில் நஞ்சை விதைத்திருக்கிறார்கள் அவரது பெற்றோர். இதனால், அவர் பிற மதத்தினருடன் ஒட்டாமலேயே இருந்து வந்திருக்கிறார். மேலும், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக வந்த பிறகு, இவரது நடவடிக்கையில் ஏகப்பட்ட மாறுதல் இருந்து வந்திருக்கிறது. 
தவிர, குடும்ப வாழ்க்கையும் சரியில்லாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறார். எல்லாவற்றும் மேலாக 2-வது முறையாக மீண்டும் யோகியே முதல்வராக வந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, யோகி தலைமை பீடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலுக்குள் ஏதோ சதித்திட்டத்தை அரங்கேற்றுவதற்காகச் சென்றிருக்கிறார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே, பாதுகாப்புப் படையினர் மற்றும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
அஹம்மத் அப்பாஸி முர்தாஸா என்னும் நபர் நேற்று முன்தினம் மாலை உத்திரபிரதேசத்தில்.. கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருக்கும் செக்யூரிடியின் கையிலுள்ள ரைஃபிளை பிடுங்க தன் கையிலுள்ள கூர்மையான ஆயுத்த்தால் அவரை தாக்கியிருக்கிறான். இது அனைத்தும் கண்காணிப்பு காமராவில் பதிவாகியுள்ளது. இப்படி துப்பாக்கியை பிடுங்கும்போது “ஓலா ஹூ ஊபர்” என்ற மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தானாம். 
இதில் கொடுமை இந்த  அஹம்மத் அப்பாஸி முர்தாஸா IIT மும்பையில் கெமிகல் எஞ்சினியரிங் படித்திருக்கிறானாம். தற்போது கையும் களவுமாக இவன் மாட்டிக் கொண்டுவிட்டான். உடனே இவனைப் பெற்ற தகப்பன் தன் மகனுக்கு மூளை சரியில்லை என்றும் சிறு வயதிலிருந்தே அவனுக்கு டிப்ரஷன் வியாதி என்றும சப்பைகட்டு கட்டுகிறான். 
ஒருவேளை செக்யூலர் மனம் படைத்த பஞ்சாயத்தின் வசம் இவன் வழக்கு வந்தால்.. இவன் மேல் கருணை கொண்டு.. பரிதாபப்பட்டு இவனுடைய வியாதி குணமாக நிதி உதவி செய்யும்படி மாநில அரசுக்கு பரிந்துரை செய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. 
NIA, UP ATS & STF என அனைத்து ஏஜென்ஸிகளும் இந்த விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். மேலும் பல பெயர்கள் வெளி வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 
கோரக்நாத் கோவில் தொடர்பான முழு வரைபடமும் இவனிடம் இருந்திருக்கிறது. யோகிஜி இந்த கோவிலுக்கு நுழையும் கேட் நம்பர் 3 வழியாகத்தான் இவனும் நுழைந்திருக்கிறான். 
இவனுக்கு மூளை சரியில்லை என்று சொல்லி இவனுடைய ISIS கனெக்‌ஷனை மறைக்க முயற்சி செய்யும் இவனது அப்பனையும் சேர்த்து உள்ளே தள்ளி யோகிஜி முட்டிக்கு முட்டி தட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்

 ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்   அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்     செப்டம்பர் 20, 2023  https:...