Thursday, April 28, 2022

கேரள சேரமான் பெருமாள் (திருவஞ்சிக்களம்) - குலசேகர ஆழ்வார் காலம்

கேரள சேரமான் பெருமாள் அரச குடும்பம் பிற்கால சேரர் வரிசையில் கடலுக்கு அடியில் இருந்த பகுதிகள் கடல் உள்வாங்கிட உருவான கொடுங்கல்லூர் தலைநகர் எனக் கொண்டு ஆண்ட பரம்பரை.

திருவஞ்சிக் களம் தலைநகராகக் (கொடுங்கல்லூர்) கொண்டு வாழ்ந்த சேரமான் பெருமாள் கேரள வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.  

1.கிறிஸ்துவர் 19ம் நூற்றாண்டில் பரப்பிய கதை, கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பலில் தோமா வந்து இறங்கி மதமாற்ற வர்த்தகம் செய்தார் எனும் கதை.

 2.முகம்மதியர்கள் சேரமான் பெருமாள் என்ற ராஜா மதம் மாறி கொடுங்கல்லூரில் மசூதி கட்டினார் எனும் கதை

 3. சங்க இலக்கியம் கூறும் முசிறி துறைமுகம்- கொடுங்கல்லூர் எனப் பரப்பிய கதையை வளர்க்க கிறிஸ்துவர் கீழ்த்தரமான தொல்லியல் பட்டணம் அகழாய்வு எனும் கூத்து. 

மூன்றையுமே நாம் முழு தரவுகளோடு ஆராய்வோம். ASI இந்திய தொல்லியல் துறை இரண்டு முறை மிகவும் பரந்த அளவில் செய்த அகழாய்வு முடிவுகள் முக்கியமானவை.

கொடுங்கல்லூர் இந்திய தொல்லியல் துறை(ASI Excavations1945-46) 

மார்ட்டிமர் வீலரோடு பணியாற்றிய அனு ஜான் அச்சன் நடத்திய அகழாய்வில் 14ம் நுற்றாண்டிற்கு முன்பான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என மிகத் தெளிவாக பேராசிரியர் கே.வி.ராமன் தன் "தொல்லியல் ஆய்வுகள்" நூலில் காட்டி உள்ளார்.

கொடுங்கல்லூர் இந்திய தொல்லியல் துறை(ASI Excavations1969-70)

கேரளா சர்ச்கள் மிகத் தீவீரமாக தோமா கிரங்கனூர் எனும் கொடுங்கல்லூர் துறைமுகத்தில் தான் வந்து இறங்கினார் என19ம் நூற்றாண்டு ரம்பன் பாட்டை  நம்பிட- மீது மிகப் பெரும் அழுத்தம் தந்து - ஓரு மிகப் பெரிய அகழாய்வு நடந்தது, இதற்கு கோழிக்கோடு பல்கலைக் கழகம் சார்பாக பேராசிரியர்.  M.G.S.நாராயணன் பங்கேற்றார். ASI சார்ந்த ஆய்வை பேராசிரியர். சௌந்தரராஜன் & பேராசிரியர் கே.வி.ராமன் நடத்தினர்.

ASI இந்திய தொல்லியல் துறை மிகத் தீவிரமாக இந்த பகுதி முழுவதும் சல்லடையாக சலித்து சர்வே செய்து பிறகு அகழாய்வில் முடிவு- இந்தப் பகுதி முழுவதும் கடலுக்கு அடியில் இருந்து, மனிதக் குடியேறியதே பொஆ. 9ம் நூற்றாண்டில் தான் .

குலசேகர பெருமாள்- குலசேகர ஆழ்வார் கட்டிய கண்ணன் கோயில்
கேரளத்தில் பொஆ 844 முதல் 870 வரை ஆண்ட மன்னன் ஸ்தாணு ரவி குலகேசரவர்மன். இவரைத்தான் குலசேகர ஆழ்வாராக ஆய்வாளர்கள் அடையாளம் காண்கின்றனர். 
ஆழ்வார் கட்டியதாக கொடுங்கல்லூர் அருகிலுள்ள குலசேகரபுரத்தில் ஒரு கண்ணபிரானின் ஆலயம் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டு திருக்குலசேகரபுரத்துத் தளிக்கு செல்லாநின்ற யாண்டு நூற்றுத் தொண்ணூற்றைஞ்சு என்று குறிப்பிடுகிறது. 
இதன் எழுத்தமைதி 11ம் நூற்றாண்டு இறுதியை ஒட்டி என்பதால் 195ஆண்டுக்கு முற்பட்ட காலமாக குலசேகரரின் (1060-195=865)  ஆட்சியாண்டுக்கும் பொருந்தி வரும். 
குலசேகர ஆழ்வார் கேரளாவின் கொல்லம் காலேண்டர்- 28ல் (பொஆ800  பிறந்தார் குலசேகர ஆழ்வார் ஆட்சி செய்தது பொஆ.845 - 870 இடையே. 
கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….  கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். 
குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. .. 
திருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப் படுத்தவில்லை.
பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala” 
பேராசிரியர் கே.வி.ராமன் ASI ஆய்வின் அனைத்து அனுபங்களையும்  "தொல்லியல் ஆய்வுகள்" என பதிப்பித்த நூலின் பக்கங்கள். 
  
சேரமான் பரம்பு  (சேரமான் ஜும்மா மசூதி)
கொடுமங்கல்லூரின் சேரமான்பரம்பு அருகே உள்ள ஜும்மா மசூதியை முகம்மதியர்கள் சேரமான் மசூதி எனவும், அது பொஆ 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது எனும் கட்டுக்கதை அரேபியக் குர் ஆன கதை முஸ்லிகளால் பரப்பப் படுகிறது
 இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் என்று கதைகள் பரப்பப் பட்டுள்ளன.
சேரமான் பரம்பு (Cheraman Parambu) என்பது சேர மரபு மன்னர்களான சேரமான் பெருமாள்களின் அரச இருக்கையாகக் கருதப்படுகிறது. இந்த அரண்மனை கேரளத்தின் கொடுங்ஙல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் மெத்தலாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது .  

1936 ஆம் ஆண்டில், இந்த இடம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1944 மற்றும் 1945 க்கு இடையில் இந்த இடத்தில் அகழாய்வு செய்யபட்டது. அப்போது இங்கு பானை, செம்பு, இரும்பு கருவிகள், வளையல்கள், மணிகள் போன்ற ஆபரணப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.  அகழ்வாய்வு செய்யப்பட்டபோது செலாடன் என்ற ஒரு வகையான பாண்டம் கிடைத்ததது. இது கி.பி 10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான சொங் அரசமரபு காலத்திய சீனத்தில் தயாரிக்கப்பட்டது.
 
கொடுங்கலூர் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்தது என்பதை கிறிஸ்துவ சர்ச்சும் உறுதிப் படுத்தியுள்ளது.
 History of Christianity in India, Vol. I, by Fr. A. Mathias Mundadan, Professor of Church History and Theology at the Dharmaram Pontifical Institute, Bangalore, in says 
Opinion seems to be Unanimously in supporting the Hypothesis that the whole or Greater part of the western section of the Kerala coast was once under waters and that the formation of the Land was due to some process of nature either gradual or Sudden. Page-12

பட்டணம் அகழாய்வு கூத்துக்களும், பின்வாங்கிய‌ செரியன் மோசடி கதைகளும்
கேரள வரலாற்றாய்வுக் கழகம், இயக்குனர் பி.ஜெ.செரியன் என்ற கிறிஸ்துவ சர்ச் நட்பில் ஆன தனி அமைப்பு எர்ணாகுளத்தில்  ருந்து 26 கீமீ தூரத்தில் உள்ள பட்டணம் எனும் இடத்தில் அகழாய்வு நடத்தியதாக  6 குழிகளைத் தோண்டி, அவற்றில் பல பொருட்கள் கிடைத்தது எனவும்; சங்க கால முசுறி தான் பெரியாறு ஓரமுள்ள பட்டணம் என்றும்  கதை பரப்பி வருகிறது.

திருவனந்தபுரத்தில் மூன்று நாள் தேசிய மாநாட்டில் இந்திய  தொல்லியல் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் (Indian Archaeological SocietyIndian Society for Prehistoric and Quaternary Studies & Indian History and Culture Society)-   பி.ஜே.செரியன் பட்டம் குறித்த தனது கட்டுரையை வழங்கிய பின்னர் அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  P.J.செரியன் மற்றும் பட்டணம் அகழ்வாராய்ச்சியின் ன்மை  கேள்வி எழுப்பி பன்னாட்டு அறிஞர்களால் நிராகரிக்கப் பட்டது.      

திருவனந்தபுரத்தில், நவம்பர் 11, 2011 அன்று, பேராசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன், இந்திய 

 




No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா