Wednesday, April 6, 2022

முதுகுளத்தூர் -திருவரங்கம் கிராம புனித இருதய மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் கணித ஆசிரியர் கைது!



















பரமக்குடி: புனித இருதய மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ் கைது! 

கு.விவேக்ராஜ்     சிவகங்கை கத்தோலிக்க விவிலிய மாவட்டம் மேலாண்மையில்  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் புனித இருதய மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததக் கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில்  புனித இருதய மேல்நிலைப்பள்ளி  கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ் 10, 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு கடந்த ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவிகளிடம் கணித ஆசிரியர் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று முன் தினம் அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல அமைப்புக்கு தொடர்பு கொண்டு ரகசிய புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அதிகாரிகள் கணித ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியரை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டனர்.

ஆனால் கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். அதனைத்தொடர்ந்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அமைப்பினர் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்‌. இந்நிலையில், கணித ஆசிரியர் மீது மேலும் மூன்று மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்ததால் அவர் மீது போலீஸார் போக்சோ வழக்கு பதிவுசெய்து அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், பரமக்குடியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமசை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளியில் பல மாணவிகளை கணிதத்தில் மார்க்கை குறைத்து விடுவதாக மிரட்டிப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரின் முன்னாள் மாணவரான ஆரோக்கிய அருள் தோமஸ் செய்யும் தவறுகளை தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை என மாணவிகள் போலீஸில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...