Wednesday, April 6, 2022

கோவில்களை கைப்பற்றும் அரக்கத்தனம் - சர்ச் கொத்தடிமை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சட்ட விரோத அராஜக‌ம்

 சர்ச் கொத்தடிமை பாசீச மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு  கட்சி அராஜக‌ம் கோவில்களை கைப்பற்றும் அரக்கத்தனம்



தமிழர் விரோத சர்ச் அடிமை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு ஓநாய் கூட்டம்  

அக்கட்சியின் 23வது மாநில மாநாட்டு  மதுரை பழங்காநத்தம் பகுதியில்  நடைபெற்றதில்  மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார்.

கோயில்கள் இறை நம்பிக்கை வாழ்கிற இடம்.  அங்கு மதம் கிடையாது. எனவே, கோயில் கமிட்டிகளில் மட்டுமல்ல, கோயில் நிகழ்வுகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பண்பாடு, கலாச்சார பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொள்ளும். கோவில்களில் அபிஷேகம் செய்ய மாட்டோம், மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்வோம். 

இரு ஆண்டுகளாக பக்தர்களின்றி வெறும் விழாவாக நடத்தபட்ட மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு மிக உற்சாகத்துடன் கொண்டாடபடுகின்றது, இன்று கொடியேற்று விழா
மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல, மதுரை உலகின் மிகபழமையான நகரங்களில் ஒன்று கிரேக்கத்தின் ஏதென்ஸ், இத்தாலியின் ரோம், அரேபியாவின் பாக்தாத் , இஸ்ரேலின் ஜெரிக்கோ, சிரியாவின் டாமாஸ்கஸ், எகிப்தின் எல்காப், எஸ்னா சீனாவின் பிஜிங் போன்ற நகரங்களை விட மிக பழமையானது
இந்தியாவின் காசி புண்ணியநகர் போல மிக மிக தொன்மையான ஒன்று
அங்கு திருவிழாக்கள் தடைபடுவது புதிது அல்ல, வ‌ரலாற்றில் களபிரர் காலம், புத்த சமண ஆட்சியின் இந்துவிரோத‌ காலம், ஆப்கானிய சுல்தானிய கொடுங்காலம் , ஆங்கிலேயரின் போர்காலம் என பல இடங்களில் அது தடைபட்டுத்தான் மீண்டது
தமிழ் பொதிகையில் பிறந்தாலும் மதுரையில்தான் வளர்ந்தது, தமிழும் இந்துமதமும் அங்குதான் நடைபயின்றன‌
காஞ்சி போன்றவை பின்னால் உருவான நகரங்கள், மதுரை என்பது இந்துக்களுக்கும் தமிழுக்கும் தாய்வீடு
அந்த பழமையான மதுரையின் சித்திரை திருவிழாவின் நினைவுகள் எப்பொழுதும் சுகமானவை
மதுரையின் வரலாறு திருவிளையாடற் புராணத்தில் 49 வது படலமாக திருவாலவாயான படலத்தில் இருந்து தொடங்குகின்றது
அதுவரை நான்குமாட‌க்கூடல் என் அழைக்கபட்ட அந்த ஊர் அதுலகீர்த்திப் பாண்டியனுக்கு மகனான கீர்த்தி பூசண பாண்டியன் காலத்தில் பெரும் ஊழியினை சந்தித்தது
2004ல் நடந்த கடற்கோள் போல, அதற்கு முன்பே பூம்புகார் கடலில் மூழ்கியதை போல ஒரு பெரும் இயற்கை பேரிடர் அப்பொழுது நடந்தது, அந்நேரம் பாண்டியநாடு பெரும் அழிவினை சந்தித்தது
அந்த அழிவில் இருந்து பாண்டிநாட்டை மீட்க சிவனே வந்தார், அவரே சந்திரகுல பாண்டியர்களை தோற்றுவித்து சேகர பாண்டியனை மன்னனுமாக்கினார், அப்பொழுது பாம்பு ஏந்திய சித்தன் வடிவில் வந்ததால் ஆலம் எனும் விஷம் கொண்ட வாயினை குறிக்கும் வகையில் ஆலவாய் நாதன் என பெயரும் பெற்றார்
அவர் பெயரால் அது ஆலவாய் ஆலயமாகி அந்த ஊருக்கு திரு ஆலவாய் என பெயர் வந்தது, ஆலவாய் என்பது பல இடங்களில் சிவாலயத்தை குறிக்கும் பெயர், கேரளாவின் இன்றைய அலுவா கூட ஆலவாய் எனும் சிவன் பெயரை கொண்டதே
அப்படிபட பெருமையினை கொண்ட அன்று ஆலவாய் நாதன் ஆலயம் என்றும் இன்று மீனாட்சியம்மன் ஆலயம் என அழைக்கபடும் அந்த ஆலயம் பிரசித்தியானது, பெரும் புகழும் மங்கா அடையாளங்களும் தனித்துவ வரலாறும் கொண்டது
அந்த சிவாலயத்தில் தொடக்கத்தில் சித்திரை மாத திருகல்யாண விழா இல்லை, அது மாசியில் தேரோட்ட திருவிழா, பங்குனியில் உத்திர திருவிழா என திருவாரூர், சிதம்பரம் போலத்தான் இருந்தது
பங்குனி உத்திரம் அன்று திருபரங்குன்றத்திலும் விமரிசையாக இருந்தது
சித்திரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அன்று விஷேஷம் ஏதுமில்லை
உண்மையான விஷேஷம் ம‌துரைக்கு வட கிழக்கில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அழகர் மலையில் நடந்து கொண்டிருந்தது, வைணவம் அன்று சைவத்துக்கு சற்றும் குறையாமல் வளர்ந்திருந்தது
திருமாலிருஞ்சோலை, அழகர்மலை என்றெல்லாம் அழைக்கப்படும் அந்த அழகிய‌ வைணவத்தலம் புராதனமான வரலாற்றை உடையது.
இந்தக் கோவிலில் உறையும் சுந்தரராஜப் பெருமாள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர். 'சுந்தரத் தோளுடையான்' என்று ஆண்டாள் இவரை அழைக்கிறார்.
பரிபாடலில் இந்த அழகர் மலை பற்றிய குறிப்புகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் காடு காண் காதையில் உண்டு
'திருமால் குன்ற வழியை" என்ற வரி அதனை சொல்கின்றது, அங்கு ஒரு சிற்றாறு ஓடி கொண்டிருந்தது அதன் பெயர் சிலம்பாறு
அந்த ஊரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கெல்லாம் அழகர்தான் குல தெய்வம். அவர்களால் கள்ளழகர் என்று அன்போடு அழைப்படுபவர் இவர்.
கிராம தேவதையான கருப்பண்ண சாமி அங்கு பதினெட்டாம்படி கருப்பராக காவலுக்கு நிற்பார், முதல் பூசை எந்நாளும் அவருக்கே
அந்த‌ உற்சவ மூர்த்தியான சுந்தர ராஜப் பெருமாள், அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னால் செய்யப்பட்டவர். இப்போது நாம் சுத்தத் தங்கம் என்று சொல்லும் பொன் பத்தரை மாற்று, அதாவது பத்து பங்கு தங்கத்திற்கு அரைப்பங்கு செம்பு சேர்த்துச் செய்யப்பட்டது. .
ஆம் அவர் பெயரில் மட்டும் அழகர் அல்ல, மலையில் மட்டும் அழகர் அல்ல சிலையிலும் அழகர், கள் வடியும் பூ போன்ற கள்ளழகர்.
அழகர் ஏன் ஆற்றில் இறங்குகின்றார் என்றால் அதற்கும் ஒரு புராண கதை உண்டு
இங்கேயுள்ள சிலம்பாற்றில் சுதபஸ் என்னும் முனிவர் நீராடிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த துர்வாசரைக் கவனியாது இருந்துவிட்டதால் அவரைத் தவளையாகுமாறு துர்வாசர் சபித்துவிட்டார்.
அவர் சாப விமோசனம் வேண்டவே, வைகையாற்றில் தவம் செய்யுமாறும் அங்கே அழகர் பெருமான் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்றும் கூறிச்சென்றார். அதன்படியே வைகையாற்றில் தவம் செய்துகொண்டிருந்த முனிவருக்கு அழகர் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்ரா பௌர்ணமி அன்று வைகையாற்றின் கரையில், மதுரைக்கு வடமேற்கில், சமயநல்லூருக்கும் சோழவந்தானுக்கும் இடையில் உள்ள, தேனூர் என்ற ஊரில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இதற்காக மலையிலிருந்து அழகர் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் வரை வருவார். அச்சமயம் அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பெரும் திரளான மக்கள் அழகரைச் சந்திக்கப் புறப்பட்டு வருவார்கள். கள்ளர் வேடமணிந்து அழகரை வழிபடுவார்கள்.
ஆம் மீனாட்சி அம்மனுக்கு மாசி , பங்குனியில் விஷேஷம். அழகருக்கு சித்திரையில் விஷேஷம், 13ம் நூற்றாண்டு வரை இவ்வழக்கம்தான் இருந்தது.
12ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மிக பெரிதாக எழும்பினான், அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல பாண்டிய வம்சத்தின் கடைசி பெரும் ஜோதி அவன்
ராஜராஜசோழனின் சாதனையினை அவன் மிக எளிதாக சமன் செய்தான், சேர சோழ பாண்டி நாட்டை அடக்கி, ஈழம் தாய்லாந்து கடாரம் என வென்று இமயம் வரை கொடிநாட்டிய பெரும் அரசு அவனுடையது
ஆதித்த கரிகாலன் மதுரைக்குள் புகுந்து வீர பாண்டியன் தலையினை வெட்டியதற்கும் பின் ராஜராஜ சோழன் பாண்டியரை முழுக்க அடக்கியதற்கும் அவனே பழிவாங்கினான்.
அப்பொழுதுதான் திருச்சி பாண்டியரின் கட்டுபாட்டில் இருந்தது, சோழர்கள் கப்பம் கட்டிகொண்டு தஞ்சையில் அடங்கி இருந்தனர்
அவன் காலத்துக்கு பின்பே அவன் வாரிசுகள் சண்டையிட்டு அதில் ஒருவனை ஒருவன் பழிவாங்க டெல்லி மாலிக்காபூரை அழைத்து வந்து மதுரையினை நாசமாக்கினர்
அதிலும் ஒரு பாண்டியன் எழும்பி மாலிக்காபூரை விரட்டி அடித்தான் அல்லது மாலிக்காபூர் காலி செய்த மதுரையினை ஆளமுயன்றான்
ஆனால் பாண்டிய நாடு ஐந்து துண்டுகளாய் வாரிசு சண்டையில் சிதற அது பின் வந்த டெல்லி துக்ளக் கோஷ்டிக்கு வசதியாயிற்று, திருச்சி அப்பொழுது பாண்டியர் வசம் இருந்ததால் அங்கு பாய்ந்தான் துக்ளக்
ரத்த சரித்திரமும் எக்காலமும் இந்துக்கள் மறக்க முடியாத கொடூர காலமான திருவரங்க படுகொலையும் கொள்ளையும் அப்பொழுது நிகழ்ந்தது
அது மதுரையிலும் நிகழ்ந்தது, பின் மதுரையிலும் நிகழ்ந்து சுமார் 40 ஆண்டு காலம் மதுரை ஆப்கானியரால் சிதைக்கபட்டது
அதன் பின் நாயக்கர்கள் வந்து சுல்தான் படைகளை விரட்டி அடித்து பாண்டியன் ஆண்ட பகுதியெல்லாம் அவர்கள் ஆண்டார்கள் திருச்சி தஞ்சை மதுரை என எல்லாம் அவர்கள் கைக்கு வந்தது
இந்துமதம் தழைத்தது
இதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு, நாயக்கர்கள் திருச்சி திருவரங்க படுகொலைகளை கண்டு மனம் வெதும்பிய வைணவர்கள், அரங்கனின் சிலையினை மறுபடி ஸ்தாபிப்பதே அவர்கள் படையெடுப்பின் நோக்கம்
அதை வெற்றிகரமாக செய்தபின் அவர்கள் மனம் திருச்சி திருவரங்கம் பக்கமே சுற்றிற்று, மதுரை அவர்களுக்கு உவப்பானது அல்ல‌
இதனால் பெருவாரி நாயக்கர்கள் திருச்சியில்தான் இருந்தார்கள், அதில் மறுபடி டெல்லி சுல்தான் பாமினி சுல்தானின் கோல்கொண்டா அல்லது பிஜப்பூர் சுல்தானிய வாரிசுகள் திருவரங்கம் வந்துவிட கூடாது எனும் எச்சரிக்கையும் இருந்தது, வைணவ பாசமும் பக்தியும் இருந்தது
இந்த வம்சத்தில் 16ம் நூற்றாண்டில் வந்தவர் திருமலை நாயக்கர், அன்னார் எல்லாரையும் போல் திருச்சியில்தான் இருந்து ராஜபரிபாலனம் செய்து கொண்டிருந்தார்
இதில் அவருக்கு பல சிக்கல்கள் இருந்தன, முதலில் மதுரை தஞ்சை நாயக்கள் உள்மோதல் இரண்டாவது ராமநாதபுர பாண்டிய மன்னர்கள், வள்ளியூர் தென்காசி பாண்டியரின் மிரட்டல் இப்படி நிறைய இருந்தது
மூன்றாவது அவரும் ஒருவித சளிநோயால் அவதிபட்டார்
இதெல்லாம் எண்ணி அவர் கவலையுற்று தூங்கியபொழுதுதான் கனவில் சிவனே வந்து அவரை மதுரைக்கு சென்று அரசு செலுத்த சொன்னார்
அந்த கனவு வந்ததில் இருந்து அவன் பூரண சுகம் பெற்றதும் அவன் நம்பிக்கையினை உறுதிபடுத்திற்று
அந்த கனவுக்கு பின்பே மதுரைக்கு வந்தார் திருமலையார், அதன் பின்பே அந்த நாயக்கர் அரண்மனையெல்லாம் கட்டபட்டன‌
மதுரையில் அப்பொழுது இந்த மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகிகளும் அவர்களை இயக்கிய மடமும் மன்னரை சந்தேகமாக பார்த்தன காரணம் மன்னர் ஒரு வைணவர்
இவ்வளவுக்கும் மன்னர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பெரும் தேரும் இன்னும் என்னவெல்லாமோ அளித்தார், ஆனால் அங்கிருந்த நிர்வாகம் மன்னனின் தலையீட்டை விரும்பவில்லை
அங்கு ஏதோ மறைக்கபடுவதை உணர்ந்த மன்னன் நிர்வாக குளறுபடிகளை கண்டறிந்தான், இதனால் ஒருவித மோதல் முற்றிற்று
பின் மன்னர் எடுக்கும் முயற்சி எல்லாம் குழப்பட்டன மாசி திருவிழாவுக்கு அரசன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை பின் சித்திரை திருவிழாவுக்கு மக்கள் முகம் திருப்பினர்
திருமலை நாயக்கன் மிக சிறந்த நிர்வாகி , பெரும் ஆற்றலும் அறிவும் படைத்தவன் தென்காசி வள்ளியூர் பாண்டியர்களை அவர்கள் பக்கம் சில நீராதார திட்டங்களை செய்து அவர்கள் மக்கள் மூலமாகவே அடக்கி வைத்த நுட்பமான ஆட்சியாளன்
அவன் மிக அழகான திட்டமிட்டான்
ஏன் மாசி திருவிழா பங்குனி உத்திரம் மற்றும் அழகர் கோவில் சித்திரை விழா என தனி தனியாக கொண்டாட வேண்டும், எல்லா நிகழ்வையும் சித்திரை புத்தாண்டு தொடங்கி அந்த பவுர்ணமி வரும்பொழுதே வைக்கலாமே எனும் திட்டமாயிற்று
விளைவு மாசி திருவிழா பங்குனி உத்திரமெல்லாம் சித்திரைக்கு மாற்றபட்டு ஒரே விழாவாயிற்று
தேனூர் பக்கம் ஆற்றில் இறங்கிய அழகர் மதுரை வண்டியூருக்கு மாற்றபட்டார்
அம்மன் சன்னதி எதிரே புதிதாக வசந்த மண்டபமும் சகல வசதிகளுடன் உருவாக்கபட்டது
இன்னும் சைவரும் வைணவரும் ஒற்றுமையாய் கொண்டாட பல வழிகளை செய்தான் மன்னன், அப்படியே திருபரங்குன்றம் முருகனும் கொண்டாட்டத்தில் சேர்க்கபட்டார்
பின் அன்றைய மிக சிறு சமூகமாக இருந்த இஸ்லாமியரும் கொண்டாட்டத்தில் சேர்க்கபட்டனர், அதற்கு திருவரங்கன் சிலை மேல் தீரா பாசம் கொண்டு மிக இளம் வயதிலே செத்தவளும், திருவரங்க ஆலயத்தில் இன்றும் அந்த கதையினை சொல்லி நிற்பவளுமான சுராதானி எனும் துலுக்க நாச்சியார் கதையும் சேர்க்கபட்டது
சித்திரை திருவிழாவில் துலுக்க நாச்சியாரின் பக்திக்கும் மரியாதை செலுத்தபட்டது, திருவரங்கநாதன் மேல் அவள் கொண்ட தீராகாதல் விழாவில் அங்கீகரிக்கபட்டது
இதெல்லாம் செய்து வைத்தான் அந்த மன்னன் திருமலை நாயக்கன்
அந்த திருவிழாவின் எட்டாம் நாள் அவனுடையது , அன்று காலை மேள தாளங்களும் அவன் சேனையும் அணிவகுக்க யானைமேல் கோவிலுக்கு வருவான் மன்னன்
வந்து அன்னையிடம் இருந்து செங்கோலை பெறுவான், ஆம் மீனாட்சி பிரதிநிதியாக மதுரையினை ஆள்கின்றேன் என எல்லோருக்கும் அறிவித்தான் அந்த பக்தி மிக்க மன்னன்
மன்னன் கலந்து கொள்வதால் எல்லா சிற்றரசர்களும் குறிப்பாக ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி மன்னர்களும் கலந்து கொள்ளுதல் வழக்கமாயிற்று
தென்பாண்டி மன்னர்களும் கலந்து கொண்டனர்
இப்படி மிக பிரசித்தியாக தொடங்கபட்ட அவ்விழா அதே உற்சாகத்துடன் இன்றளவும் கொண்டாடபடுகின்றது
அதில் திருமலை நாயக்கனின் முயற்சி நிச்சயம் மாபெரும் வெற்றி,
இன்று சைவர் வைணவர் முருகபக்தர் இஸ்லாமியர் என எல்லோரும் கொண்டாடும் மிகபெரிய பண்டிகை அது
ஒரு நல்ல இந்து அரசன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும், அவனின் திட்டங்கள் எவ்வளவு தீர்க்க தரிசனமாக இருக்க வேண்டும் என்பதற்கும் திருமலை நாயக்கன் பெரும் எடுத்துகாட்டு
இந்தியாவின் மிகபெரிய திருவிழாவில் ஒன்றும், இந்துக்களின் தொன்மைமிக்க ஆலயமும், காசிக்கு நிகரான பழமையும் புனிதமும் கொண்ட மதுரையில் இந்த வருடம் சித்திரை விழா உற்சாகமாக கொண்டாடபடுகின்றது என்பது மகிழ்ச்சியான விஷயம்
தமிழகம் எவ்வளவு உறுதியான இந்து பூமி என்பதும், தமிழக முன்னோர்கள் எப்படியான இந்து வாழ்வு வாழ்வு வாழ்ந்தவர்கள் என்பதற்கு சான்று பிரமாண்ட ஆலயங்களும் தேர்களும் திருவிழாக்களும்
அதுதான் இன்றுவரை தமிழகத்தின் இந்துபெருமையினை பறைசாற்றிகொண்டிருக்கின்றன, தமிழன் ஒரு இந்து என்பதை தீர்க்கமாக சொல்லிகொண்டிருக்கின்றன‌
அந்த விழா கண்ணுக்குள் வரும் பொழுதெல்லாம் தொன்மை மிக்க மதுரையும் சிவனும் அவரின் திருவிளையாடலும் தமிழ் சங்கமும் இன்னும் பல பெருமைகளும் நினைவுக்கு வரும்
எல்லா தமிழ் புலவர்களும் அவர்தம் அழியா பாடல்களும் நினைவுக்கு வரும்
சம்பந்தர் முதல் மூர்த்தி நாயனார் வரை சைவம் தளைக்க அரும்பாடுபட்ட நாயன்மார்கள் நினைவு வரும்
இன்னும் ஏகபட்ட நினைவுகளும் பெருமையும் மதுரை ஆலயம் என்றதும் அலைமோதும், அப்படியே இந்த விழாக்களை ஒரே விழாவாக்கிய திருமலைநாயக்கன் நினைவும் வரும்
மதுரை பாண்டிய மண்டல மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மிக மிக புரானதமான பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய திருவிழாவினை கொண்டாடும் பாக்கியம் உலகில் எந்த இனத்துக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் தமிழ் பேசும் இந்துக்களான அவர்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றது
பாரத நாட்டின் பெரும் இந்து பண்டிகைகளில் ஒன்றான இந்த பெரும் விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவிப்பார் என தமிழக இந்துக்கள் நம்புகின்றார்கள்.
அவரும் நிச்சயம் வாழ்த்துவார், வாழ்த்த வேண்டும்
அவருக்குஆலவாய் நாதனின் அருளும் மீனாட்சி அம்மனின் அன்பும் கள்ளழகரின் கருணையும், பதினெட்டுபடி கருப்பனின் காவலும் நிரம்ப கிடைக்க வேண்டும்

  

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.  அந்த சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில் தீர்ப்பு வரலாம்.


கோயில்கள் இறை நம்பிக்கை வாழ்கிற இடம்.  அங்கு மதம் கிடையாது. எனவே, கோயில் கமிட்டிகளில் மட்டுமல்ல, கோயில் நிகழ்வுகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பண்பாடு, கலாச்சார பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொள்ளும். கோவில்களில் அபிஷேகம் செய்ய மாட்டோம், மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்வோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாடு

பாஜகவை விரட்டும் போரில் மு.க.ஸ்டாலினுடன் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரத்தில் முதலமைச்சர் உடனே கவனம் செலுத்தியது பாராட்டுக்கு உரியது. ஆனால், அவரை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்ட குற்றம். அந்த சட்டத்தின் படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு நிலைமை என்ன? சாதிய ஆணவ வெறிக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக என்ன விலையையும் கொடுக்க தயாராக உள்ளோம்.

கோவில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மிரட்டல் வர தொடங்கியுள்ளது. இதனை நியாயப்படுத்தி முதல்வர் பேசக்கூடாது. நீட் தேர்வு விதிவிலக்கிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அது போல நீர்நிலைகளில் வசிப்பவர்களையும், கோவில் இடங்களில் வசிப்பவர்களையும் பாதுகாக்க புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Published by:Suresh V

First published: 
மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரே ஒரு கல்வெட்டுதான் சம்ஸ்கிருதத்தில் உள்ளது,மற்றவை எல்லாம் தமிழ்தான் ஆகவே இந்த மண்ணின் ஆன்மீக மரபில் சம்ஸ்கிருதத்திற்கு இடமில்லை என்று பேசுவதெல்லாம் அபத்தம் மட்டுமல்ல அதன் பெயர் நிர்மூடத்தனம் அல்லது அறிவொழுக்கமில்லாமை என அழைக்கலாம்..
இந்திய அரசாங்கம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் தன்னுடைய ஆணைகளை தருகிறது.பெரும்பாலும் அரசாணைகள் ஹிந்தியிலேயே இருக்கிறது.இதை நாளை ஒருவர் வந்து பார்த்து,இந்தியாவில் ஹிந்தி/ஆங்கிலம் என்கிற மொழியே இருந்தது.அதில் ஹிந்தி விஞ்சி நின்றது எனச் சொன்னால் எப்படி இருக்குமோ? அதுபோலதான் இவர்கள் பேசுவது உள்ளது..
முதலில் 'மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்' என்ற பெயரே தமிழ் கிடையாது.பலர் சொல்வது போல 'மீனாட்சி' என்று எழுதி,அதை 'மீன்+ஆட்சி' என பொருள்படுவது தவறு..மீன் போன்ற கண்களை குறிப்பதே 'மீனாக்ஷி'..அக்ஷி என்றால் கண் எனப்பொருள்...இதனுடைய தமிழ் பதம் அங்கயற்கண்ணி ஆகும்.அதே போல சுந்தரேஸ்வரர் என்பதன் தமிழ் பதம் 'சொக்கர்' ஆகும்..'அங்கயற்கண்ணி - ஆலவாய் சொக்கர்' என்பதே தேவார குறிப்பு.
இன்னும் 'மதுரை' என்கிற பெயரே தமிழ்தானா? என்பது இன்று வரை விவாதம்தான்.காரணம் உத்தரகாசி - தென்காசி இருப்பதைப் போலவே உத்தர மதுரை என்கிற கிருஷ்ணன் பிறந்த வடமதுரைக்கும், நமது தென்மதுரைக்குமான தொடர்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.. பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு அந்த வாதத்தை வலிமையுற வைக்கிறது.
மதுரையின் பழமையான பெயர் 'கூடல்' என்றே சங்கப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.அகுதை என்ற வேளிர்குடியினனிடம் இருந்த கூடல்நகரை,நெடுந்தேர் செழியன் என்ற பாண்டியன் கொற்கையிலிருந்து கைப்பற்றியதே கூடல் கைமாறியதை குறிக்கிறது..
கூடல் நகருக்கு பிற்பாடு மதுரை என்ற பெயர் பாண்டியர்களால் சூட்டப்பட்டது என்பதே புரிந்துகொள்ள வேண்டியது.அந்தப் பெயர் பாண்டியர்களின் சந்திரவம்ச தொடர்பில் இருந்து வந்ததா? என்பதை வெறுப்பற்ற ஆய்வுட்குட்படுத்த வேண்டும்.
அதே போல 'கூடல்' 'மதுரை' என்ற பெயர்களை விட பழையது 'ஆலவாய்' என ஒரு கருத்து உண்டு.இந்த இடத்தில் சங்கப்புலவர் பேராலவாயரை குறிப்பிட வேண்டும்.பழம்பெரும் பாண்டியனான பூதபாண்டியன் இறப்பையும்,அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறியதையும் அவரே குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமல்ல,நெடுந்தேர் செழியன் அகுதையிடமிருந்து கூடல் நகரை கைப்பற்றியதையும் குறிப்பிடுகிறார்.இவருடைய பெயரிலேயே 'ஆலவாய்' இருப்பது கவனிக்கத்தக்கது..
சைவர்களுக்கு தெளிவாகப் புரியும்,தேவாரம் வாசித்தவர்களுக்கும் தெரியும்.மதுரை நகரை 'தென்கூடல் ஆலவாய்' என்றே அப்பர்,சம்பந்தபெருமான் அழைத்தார்கள்.அதற்கு மிக முக்கியமான காரணம் அது சைவபுராணங்களோடு தொடர்பு கொண்டது என்பதே..
எல்லோரும் சொல்வது போல ஆலமரம் வாசலில் இருந்ததால் அது 'ஆலவாய்' என்ற பெயரை பெறவில்லை.'ஹாலாஸ்ய' என்ற வடமொழி பெயரின் தமிழ் பதமே ஆலவாய்..'ஹாலாஸ்ய மாகாத்மியம்' என்ற வடமொழி இலக்கியத்தில் இருந்தே 'திருவிளையாடல் புராணம்' மொழிபெயர்க்கப்பட்டது.
எப்படி 'ஹாலாஹலா' என்ற வடமொழி வார்த்தை 'ஆலகாலம்' என்று மாறுகிறதோ அதையொத்தே 'ஹாலாஸ்ய' என்பது 'ஆலவாய்' என்று மருவியிருக்க வேண்டும்.ஹலாயுதன் என்றால் பலராமனைக் குறிக்கும்,அதை தமிழில் 'அலாயுதன்' என ஆழ்வார் பாசுரங்கள் குறிப்பிடுவது போலவேதான் இதுவும்.
'ஹாலா' என்பது இறைவனின் கங்கணமாக திகழும் விஷம்பாம்பை குறிக்கும்.. 'ஆஸ்ய' என்றால் வாய் எனப்பொருள்.
திருவிளையாடல் புராணத்தின் படி,மதுரை நகரின் எல்லையை மன்னனுக்கு உணர்த்த இறைவன் தன் கங்கணமாயிருந்த பாம்பினை எடுத்து விட அது வட்ட வடிவமாகத் தன் வாலை வாயால் கௌவியது. அவ்வட்ட வடிவமே எல்லையாகக் கொள்ளப்பட்டது.இவ்வாறு நாகம் தன் வாயால் கவ்வி எல்லையைக் காட்டியதால் இத்தலம் 'ஆலவாய்' என்றழைக்கப்படுகிறது..
இப்படித்தான் 'மதுரை - ஆலவாய்' இரண்டுமே 'மதுரா - ஹாலாஸ்ய' என்ற மூலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்ற வலுவான வாதம் உள்ளது.இவற்றை கூடல் நகரை கைப்பற்றிய சந்திர வம்சத்து பாண்டியர்களே சூட்டுகிறார்கள் என்பதும் தெளிவானது.
இப்படியிருக்க 'தமிழ்' 'வடமொழி' என்று ஒற்றைப்படையாக ஒருபக்கம் உத்தி பிரியும் இருதுருவ நோக்குடன் அரசியல் பேசுவதெல்லாம் நகைப்புகக்குரியதாகும்.."ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறிகிலா" என்று இதே மதுரையில்தான் ஞானசம்பந்த பெருமான் பாடினார்.
-----------------------------------------------------------
நமது கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகள் பெரும்பாலும் மெய்கீர்த்தி,அரசாணைகளே.இன்று தமிழக அரசு எப்படி தன் ஆணைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தருகிறதோ அப்படி அன்றுள்ள அரசு தன் ஆணைகளை வடமொழியிலும் தமிழிலும் தந்தது.எல்லா கோவில்களிலும் பெரும்பங்கு தமிழ்கல்வெட்டுகளே இருக்கும்.அது அத்தனையும் அரசாணை..
அந்த அரசாணைகளும்,அரசர்களின் செப்பேடுகளும் என்ன செய்தி சொல்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்..அது இந்த தர்மத்துக்கு மாறாக எங்கே பேசியுள்ளது? கீழே உள்ள வேள்விக்குடி சாசனத்தை கவனியுங்கள்..👇
|| எண்ணிறந்த கோஸஹஸ்ரமும்,ஹிரண்ய கர்பமும்,துலாபாரமும் மண்ணின் இசைப்பல செய்து மறைநாவினர் குறைதீர்த்துங் கூடல் வஞ்சி கோழி மாடமதில் புதுக்கிஉ ||
"ஆயிரக் கணக்கில் பசுக்களை கொடுத்தும்,ஹிரண்யகர்ப்பம்,துலாபாரம் இவைகள் செய்தும்,வேதத்தினை ஓதும் அந்தணர்கள் குறைகளை தீர்த்தும்,கூடல் - வஞ்சி - கோழி மூன்று ஊர்களின் மாடம் திருத்தியும்.." என்று ஜடில பராந்தக நெடுஞ்சடையன் புகழ் பேசப்படுகிறது..
இந்த தர்மம் போதிப்பது எதை? வைதீக பண்பாட்டையா? அல்லது வேறேதேனும் ஒன்றையா?
மதுரைக் சுந்தரேஸ்வரர் கோவிலில் கீழ்க்கோபுரத்து இரண்டாம் நிலை தூணில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்கீர்த்தி கல்வெட்டு சொல்லும் செய்தி..👇
|| கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
ஒருகுடை நீழல் இருநிலம் குளிர
மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க
நால்வகை வேதமு நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியுஞ் செய்வினையியற்ற அறுவகை சமயமும் அழகுடன் திகழ ||
- அதாவது,கலியுகம் தன் கொடுமையை செய்ய விடாமல் அதை அடக்கி செங்கோல் செலுத்தினான் பாண்டியன்..
'இயல் - இசை - நாடகம்' என்ற முத்தமிழும் முறைபட,'ரிக் - யஜூர் - சாம - அதர்வண' என்கிற நால் வேதம் பெருக,'ரிஷி - தேவ - பித்ரு - பூத- மனுஸ்ய' எனும் பஞ்ச மகா யக்ஞங்கள் சரியாகச் செயல்பட,'சாங்கியம் - யோகம் - மீமாம்ஸம் - வேதாந்தம் - நியாயம் - வைசேஷிகம்' போன்ற அறுசமயங்கள் சிறப்பாக விளங்க சுந்தர பாண்டியனின் ஆட்சி இருந்தது என்கிறது இந்த சாசனம்..
அதுமட்டுமல்ல,"மனுநெறி தழைப்ப மணிமுடிசூடி" என மனுதர்மம் சிறப்புற்று விளங்க சுந்தர பாண்டியன் முடிசூடி ஆண்டான் என்கிறது..
|| மறைநெறி வளர மனுநெறி திகழ
அறநெறிச் சமயங்கள் ஆறும்
தழைப்ப ||
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218)
|| கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன் சிறப்ப
அருந்தமிழும் ஆரியமு அறுசமயத்தறநெறியும் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்க ||
- சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271)
'நால்வேதம் - ஆறங்கம் - ஐவேள்வி - அறுசமயம் - தமிழ்/வடமொழி - மனுநெறி' இவை தழைத்தோங்க ஆட்சி செய்கிறேன் என்றுதான் பாண்டியர்கள் வரிசையாக சொல்லிக் கொண்டார்கள்.
இதில் எங்கே தனித்தமிழ் மரபுள்ளது?
-----------------------------------------------------------
அதுமட்டுமில்லை,பாண்டியன் ஜடில பராந்தக நெடுஞ்சடையனின்(பொயு 765 - 815)'வேள்விக்குடி சாசனம் - ஸ்ரீவரமாங்கல சாசனம் - சின்னமனூர் சிறிய சாசனம்',பராந்தக வீர நாராயணனின் (பொயு 880 - 905) 'தளவாய்புர சாசனம்' - இராஜசிம்ம பாண்டியனின் 'சின்னமனூர் பெரிய சாசனம்',வீரபாண்டியனின் 'சிவகாசி சாசனம்' என இவைதான் அடிப்படை சான்றுகளே..
எல்லா சாசனங்களும் முதலில் சம்ஸ்கிருதத்திலும் அடுத்தது தமிழிலும் உள்ளது.தங்களை சந்திர வம்சம் என்றும்,பாரதப் போரில் பாண்டவர்களோடு நின்று திருதராஷ்டிர புத்திரர்களை அழித்தவரென்றே சொல்கிறார்கள்.
சந்திரன் - புதன் - புரூரவஸ் - யயாதி வழிவந்த பாண்டியன் குலம் என்றே பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.அகஸ்தியனை புரோகிதனாக பெற்றவர்கள் என்றும்,அசுரர்களை தங்கள் தோள்வலியால் வென்றவரென்றே சொல்கிறார்கள்.
இது திடிரென சொல்லவில்லை நாம் முன்பு சொன்னபடியே,சங்ககாலத்திலேய புறநானூற்றில் 'கருங்கை ஒள்வாள் பெரும்பயர் வழுதியை' இரும்பிடர்தலையார் புகழ்ந்து பாடும் போது "நெஞ்சின்,
தவிரா ஈகை, கவுரியர் மருக!" என்று குறிப்பிடுகிறார்.
கௌரவர்களின் வழித்தோன்றலே! என்றுதான் பாண்டியனை போற்றுகிறார்.அகநானூறில் ஸ்ரீராமர் தனுஷ்கோடியில் வியூகம் வகுத்ததை குறிப்பிடும் பாடலில்,"வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'பஞ்சவர் - கவுரியர்' இரண்டுமே பாண்டியர்களின் மகாபாரத தொடர்பையே குறிக்கிறது.பாண்டிய என்பது 'பாண்டு' என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்து வலுவாகவே உள்ளது..
அதை ஒட்டியே சங்ககாலத்தில் இருந்து பிற்கால பாண்டியர் தங்கள் மகாபாரத தொடர்பை நீட்டி சொல்லிக் கொண்டே வந்தார்கள்.👇
|| மணிமாட கூடல்புக்கு மலர்மகளோடு வீற்றிருந்து மனுதர்சித மார்க்கத்தினால் குருசரிதம் கொண்டாடி ||
அதாவது,மணிமாடங்கள் உள்ள மதுரை சேர்ந்து செல்வத்தோடு,மனுநெறி காட்டிய வழியில் நின்று குருசரிதை கொண்டாடினான் என பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீவரமங்கல சாசனம் சொல்கிறது.
|| திருதராஷ்டிரர் படை முழுதும் களத்தவியப் பாரதத்து பகடோட்டியும் ||
- தளவாய்புரம் சாசனம்.
|| பஞ்சவனென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில் வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண் தமிழும் வடமொழியும்
பழுதறத்தான் ஆராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும்
மாரதர் மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும்
விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும் ||
|| மகாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் ||
மேற்கண்டது சின்னமனூர் பெரிய சாசனம் ஆகும்.
"பாண்டவர்க்குரிய பஞ்சவனெனும் பெயரை பெற்றவனும்,மதுரை மாநகர் கண்டு,அதற்கு மதிலமைத்த பெருமை பெற்றவனும் ஆவான்.தமிழையும், வடமொழியையும் ஒருங்கே கற்று ஆராய்ந்து அதில் பண்டிதர்களை விட மேலே நின்றான்..,பாரதப் போரில் தன் யானைப்படையை செலுத்தி மகாசேனாதிபதிகளை அழித்ததோடு,அர்ஜூனனின் வசுசாபத்தை நீக்கினான் பாண்டியன் என்கிறது".(வசுசாபம் நீக்கியதை பற்றிய பழைய பதிவு: https://m.facebook.com/story.php?story_fbid=2957162467695156&id=100002042948330 )
மகாபாரதத்தை தமிழ்படுத்தவே மதுராபுரியில் சங்கம் அமைக்கப்பட்டதாக பாண்டியர் செப்பேடு சொல்வதை ஆழமாக கவனிக்க வேண்டும்..
-----------------------------------------------------------
பிற்கால பாண்டியர்கள் மட்டுமல்ல,சங்ககால பாண்டியர்கள் மிகப்பழமையானவன் முதுகுடுமி பெருவழுதிதான்,பொயு.முன் 1 ம் நூற்றாண்டாகக் கூட இருக்கலாம்..அவனே 'பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி' என்றுதான் அழைக்கப்படுகிறான்..பல யாகங்களை செய்வித்து ஸ்ருதி மார்க்கம் பிழையாத பெருவீரனாக இருந்தான்..
அவன் வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு கொடுத்த நிலத்தை களப்பிரர் கைப்பற்றியதாக சொல்லி,முதுகுடுமி பெருவழுதி தன் முன்னோனுக்கு கொடுத்த ஆவணங்களை பராந்தக நெடுஞ்சடையனிடம் காட்டியே மீண்டும் பாகனூர் கூற்றத்தை சேர்ந்த வேள்விக்குடியை பெறுகிறான் நற்சிங்கன் என்ற அந்தணன்.
உறையூரும்,வஞ்சியும் கோழி கூவி விழிக்கிறது ஆனால் மதுரை வேதஒலி கேட்டு விழிக்கிறது என்கிறது 'பரிபாடல்'..👇
|| பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை - வாழிய வஞ்சியும் கோழியும் போல கோழியின் எழாதுளம் பேரூர் துயிலே ||..
இப்படி சங்ககாலம் துவங்கி பாண்டி மாநகரம் வேதஒலி தழைப்ப,ஸ்ருதிமார்க்கம் பிழையாமலே இருந்தது..அது தன்னுடைய பேரிருளை சந்தித்தது மாலிகாபூர் படையெடுப்பிலும்,அதை தொடர்ந்து அங்கே நடந்த மதுரை சுல்தானக ஆட்சியிலும்தான்..
-----------------------------------------------------------
சரியாக இதே நாள்,அதாவது 3 - ஏப்ரல் - 2022 க்கு 711 வருடம் முன்பு 3 - ஏப்ரல் - 1311 அன்றுதான் படையெடுப்பாளன் மாலிகாபூர் மதுரையை நோக்கி வர தமிழகத்துக்குள் நுழைந்தான்..அந்த நாட்கள் தமிழகத்தின் கொடுங்கனவாக மாறியது..மதுரை - சிதம்பரம் - ஸ்ரீரங்கம் - கங்கை கொண்ட சோழபுரம் - விருத்தாச்சலம் - ராமேஸ்வரம் என எல்லா புண்ணிய தலங்களும் தாக்கப்பட்டது..
அப்போது மதுரை கோவில் முற்று முழுதாக இடிக்கப்பட்டு அதன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் 'அமீர் குஸ்ரு' போன்றவர்களே சொல்கிறார்கள்..இதன் காரணத்தால்தான் பழம்பெருமைமிக்க மதுரைக் கோவிலில் பொயு 13 ம் நூற்றாண்டுக்கு முன்பான கல்வெட்டுகள் எதுவுமே கிடைக்கவில்லை..
பொயு 1311 - 1378 வரை மதுரை மற்றும் தமிழகமே இஸ்லாமிய ஆட்சியின் கீழே சென்றது..1365 - 1378 இந்த இடைப்பட்ட ஆண்டுகளில்தான் விஜயநகர அரசர் குமார கம்பண்ணர் தமிழகத்தை கவ்விய இருளில் இருந்து மீட்டார்..மதுரை - ஸ்ரீரங்கம் - சிதம்பரம் என புகழ்பெற்ற கோவில்கள் மறுநிர்மாணம் அடைந்தது..நிற்க.
மதுரை கோவிலில் தமிழ் கல்வெட்டு,சம்ஸ்கிருத கல்வெட்டு என்றெல்லாம் பேசுபவர்கள் மாலிகாபூர் மற்றும் மதுரை சுல்தான்கள் ஆட்சியால் மீனாட்சி கோவில் முழுவதும் தரைமட்டமாக்கியதையும் அதை குமாரகம்பணர் மீட்டதையும் ஏன் பேச மறுக்கிறார்கள்?
இங்கிருக்கும் கோவில்களை போலவேதான் நமது காஷ்மீர் - இன்றைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் இருந்தது.இன்று அவையெல்லாம் எங்கே?,தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த கல்வெட்டுகளும்,கோவிலும், பண்பாடும் இந்த அளவுக்கு பிழைத்த ஒரே காரணம் விஜயநகர பேரரசுதான்..
ராஜமெளலி போன்ற ஒரு இயக்குனர், ஸ்ரீ குமாரகம்பண உடையாரின் வரலாற்றை சினிமாவாக எடுத்தால் இந்திய அளவில் மிகப்பெரிய வரலாற்று திறப்பாகவும்,தென்னிந்திய மக்களுக்கே அது பாடமாகவும் அமையலாம்...இது தனி..
தமிழ் ஆன்மீகம்,தெலுங்கு ஆன்மீகம் என்றெல்லாம் சமயத்தை உடைக்க முடியாது.அப்படி பேசுவது,இந்த பண்பாட்டை சீர்குலைக்கும் நீண்ட காலயுத்தத்தின் நவீன வடிவமாக மாறியுள்ளது என்றே பார்க்க வேண்டும்..


No comments:

Post a Comment

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...