Wednesday, April 13, 2022

தலித் கிருஸ்துவ இளைஞன் துடிக்க ஆணவக் கொலை கிறிஸ்துவ மார்க்சிஸ்டு தலைவர் கும்பலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிறிஸ்துவ ஆணவக் கொலை - தலித் கிருஸ்துவ இளைஞன் துடிக்க துடிக்க படுகொலை!  

கேரளாவில் கொலை வழக்கு ஒன்றில் கண் தோண்டி , மர்ம உறுப்பை தாக்கிக் கொன்ற  10 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது  கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம். 

sathish k Kerala, First Published Aug 27, 2019, 4:39 PM IST
கேரளாவில் கொலை வழக்கு ஒன்றில்  10 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது  கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம்.


கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் பதிவு  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருமண பதிவுக்கு கூட்டு விண்ணப்பத்தை கோட்டயத்தில் உள்ள ஒரு துணை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதற்கு நினுவின்  குடும்பத்தினர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தனர்.  

இதனையடுத்து மூன்று வாகனங்களில் வந்த மர்ம கும்பல், கோட்டயத்தில்  கெவின் வீட்டை சூறையாடியது, கெவினையும் அவரது நண்பர்  அனிஷையும் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர் பின்னர் அனீஷை கடுமையாகத் தாக்கி, கொடூரமாக கொலை செய்துவிட்டு வழியில் விட்டு விட்டனர்.

இந்த நிலையில் கெவின் உடல் மே 28 அன்று கொல்லம் மாவட்டத்தில் ஒரு ஆற்றில் கண்டெடுக்கப் பட்டது. அவர் கொலை செய்வதற்கு முன்பாக, கம்பியாலும், மரத்தாலாக தடியாலு பலமாக தாக்கியிருக்கிறார்கள். அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கண் தோண்டி எடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, அந்தரங்க உறுப்பிலும் பலமாக தாக்கியுள்ளனர். வலிதாங்க முடியாமல் துடிதுடித்து இறந்த  கொடூரமாக கொலை செய்யப்பட்டு கெவின் உடலை சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு ஏரியில் வீசியுள்ளனர். 

கெவின் ஜோசப்  ஆணவ கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 22 ம் தேதி  இந்த 14 பேரில் 10 பேர் குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. கெவின் காதலியான நீனுவின் சகோதரர் சானு சாக்கோ,  நியாஸ் மோன், இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராஹிம்குட்டி, மனு முரளிதரன், ஷிபின் சஜாத், நிஷாத், பாசில் ஷெரிப் மற்றும் சானு ஷாஜகான் ஆகியோர் குற்றவாளிகளாக  அறிவிக்கப்பட்டனர்.  நீனுவின் தந்தை சாக்கோ ஜான் மற்றும் ரமிஸ் ஷெரீப், ஷினு ஷாஜகான், விஷ்ணு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

இந்த நிலையில் இன்று  10 குற்றவாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இரட்டை ஆயுள் தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு குற்றவாளிக்கும் ரூ .40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. . இதில் தலா ரூ .1.5 லட்சம் நீனு மற்றும் கெவின் தந்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் .  அதேபோல,கெவின் நண்பர் அனீஷும் கடத்தப்பட்டு அவருடன் தாக்கப்பட்டார், அபராதத்திலிருந்து  அவருக்கு ரூ .1 லட்சம் வழங்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. 

பிப்ரவரி 13, 2019 அன்று தொடங்கிய இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த வழக்கு ஒரு ஆணவக்கொலை என்று கருதப்பட்டதால், 6 மாதத்திற்குள்  இந்த வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ ஆணவக் கொலை - தலித் கிருஸ்துவ இளைஞன் துடிக்க துடிக்க படுகொலை!  கிறிஸ்துவ ஆணவக் கொலை - தலித் கிருஸ்துவ இளைஞன் துடிக்க துடிக்க படுகொலை!  By : Kathir Webdesk  |  29 May 2018 12:55 PM கெவின் ஜோசப் கோட்டயம் பகுதியில் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். நடுத்தரமான குடும்ப பிண்ணனியை கொண்டவர். கெவின் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு வேலைக்காக துபாய் சென்று, கடந்த ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். நீனு கொல்லம் பகுதியில் வசதிப்படைத்த செல்வாக்குள்ள கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். நீனு தாயார் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். 

இவர்களின் காதல் விவகாரம் நீனு குடும்பத்தினருக்கும், சகோதரர் ஷானு சாக்கோவிற்கும் பிடிக்கவில்லை. Also Read - ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் கோவிலையும் இணைக்கும் ரோப் கார் சோதனை ஓட்டம்! பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கெவின் ஜோசப்பும் - நீனுவும், கோட்டயத்தை அடுத்த எட்டுமனூர் பகுதியில் உள்ள துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த விவகாரம் நீனு குடும்பத்திற்கு தெரிய வர, நீனு குடும்பத்தினர் மணமக்கள் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நீனு கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார். தனது உறவினரான அனிஷ் வீட்டில் தங்கியிருந்தார் கெவின். ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கும்பல் அனிஷின் வீட்டிற்கு வந்து கெவின் மற்றும் அனிஷை கடத்தி சென்றனர். அவர்களின் வீட்டையும் நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் முதலமைச்சர் பினராய் விஜயன் அரசு நிகழ்ச்சிக்காக அம்மாவட்டத்திற்கு வருவதாகவும் அதற்கான பணிகளில் தான் இருப்பதாகவும் துணை காவல் ஆய்வாளர் கூறி, விசாரணையை உரிய நேரத்தில் மேற்கொள்ள தவறி விட்டார். இதற்கிடையில், மதிய வேளையில் அனிஷை மட்டும் அந்தக் கும்பல் வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர். கெவின் குறித்து அனிஷ் கேட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில், சடலமாகத் தான் கெவின் மீட்கப்பட்டார். Also Read - அத்திவரதர் வைபவத்தில் முறைகேடு: அதிரவைக்கும் RTI ஆவணங்கள்! கிறிஸ்துவ மதத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் சமூக அநீதிகள் தொடர்ந்து வருகிறது. சமூக நீதி பேசும் அரசியல்வாதிகள், இந்து மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை மட்டும் வைத்து அரசியல் செய்கின்றனர். ஆனால், மற்ற மதத்தில் உள்ள பிரிவினைகளை பற்றி பேசாமல் இருப்பது, சிறுபான்மையினரின் வாக்கு வங்கி கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சமா என்ற கேள்வி தற்போது மக்களால் எழுப்பப்படுகிறது.

https://kathir.news/news/cid1565650.htm?infinitescroll=1

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...