Saturday, April 9, 2022

தமிழ் அன்னை -தெய்வ தன்மை நிலையில் பேய்மகளிர் போல ஒரு படத்தை வரைந்து பரப்புவது கொச்சை படுத்தும் செயல்


பாரதத்தின் ஆணிவேரான இந்துமதம்
1. 1941 ல் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாய் படம்.
2.பாரதிதாசன் எழுதிய தமிழியக்கம் நூலின் அட்டையில் உள்ள தமிழ்தாய் படம்.
3.'சமநீதி'இதழின் சிறப்பாசிரியராக இருந்து எம்ஜிஆரே அதை நடத்தினார்.அதன் 1968 பொங்கல் மலரில் உள்ள தமிழ்தாய் படம்.
4.1981 ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்ட தமிழ்தாய் படம்.
5.1993 ல் காரைக்குடியில் கட்டப்பட்ட தமிழ்தாய் கோவில்..
இவையே வரிசை கிரமமாக கீழே உள்ள படங்களாகும்.
தமிழகத்தில் திராவிட இயக்க தாக்கம் தீவிரமாக செயல்பட்ட போது கூட,அதன் மூலவர்களே 'தமிழ்த்தாய்' என்கிற படிமத்தை,அதன் தெய்வ தன்மையை விட்டு கீழே இறக்கவில்லை..ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது பகிரங்கமான பண்பாட்டு படையெடுப்பு.
இதை திமுக - அதிமுகவே கண்டிக்க வேண்டும்.1993 ல் தமிழ்தாய் கோவிலை திறந்து வைத்ததே திரு.கருணாநிதி தான்,எம்ஜிஆர்தான் உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ்த்தாய் படத்தை தெய்வீகத் தன்மையுடன் வெளியிட்டார்..
அப்படிப்பட்ட நிலையில் ஏதோ பேய்மகளிர் போல ஒரு படத்தை வரைந்து அதை 'தமிழணங்கு' என்று பரப்புவதெல்லாம் கொச்சை படுத்தும் செயல்..இதை எளிமையாக கடந்து போகவெல்லாம் முடியாது.மக்கள் எல்லாவற்றையுமே கவனிக்கிறார்கள்,எதை 'எதிர்க்கிறீர்கள் - ஆதரிக்கிறீர்கள்' என்பதைத் தாண்டி,நீங்கள் கள்ளமௌனம் சாதிக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கவனிக்கிறார்கள்.

 
இந்தி விஷயத்தில் மத்திய அரசு அரசியல் சட்டத்திற்கு எதிராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒன்றில் எதிராக நடந்தால் மற்றவற்றிலும் அவ்வாறே நடப்பதற்கு எந்தத் தடையும் இருக்க முடியாது.
அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற வேண்டுகோளில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சட்டம் திருத்தப்படும் வரை மத்திய அரசு அதன் கடமையைச் செய்துகொண்டுதான் இருக்கும்.
இங்கு "இந்தி திணிப்பு" எனும் வார்த்தை பிரயோகமே தந்திரமானது, இங்கு இந்தி திணிக்கபடவில்லை மாறாக கூடுதலாக ஒரு மொழியினை பயிலவும் பெருவாரி இந்திய மக்களிடம் சரளமாக உரையாடவும் ஒரு வாய்ப்பு வழங்கபட்டது
அதைத்தான் இந்தி திணிப்பு என கொக்கரித்தார்கள் திமுகவினர், உண்மையில் இங்கு நடந்தது இல்லா திராவிடத்தை தமிழர்மேல் திணித்த "திராவிட திணிப்பு"
இந்த இந்தி எதிர்ப்பினை அக்கோஷ்டி எப்படியெல்லாம் நேரத்துக்கு தக்கபடி பயன்படுத்தியது என்பதற்கு அவர்கள் வரலாறே சாட்சி
சுதந்திரதுக்கு முன்பே வெள்ளையன் ஆட்சியில் "இந்தி திணிப்பு" என கிளம்பினார்கள், அப்பொழுதும் வெள்ளை அரசை கண்டித்து ஒரு வார்த்தை இல்லை மாறாக இந்தி கற்கமாட்டோம் இந்தியனாக இருக்கமாட்டோம் என ஊர்வலம் சென்றார்கள்
தனக்கு எதிராக போராடவேண்டிய மக்கள் தங்களுக்குள்ளே இந்தி படிக்கமாட்டோம் இந்தியரோடு சேரமாட்டோம் என கிளம்பியதை கண்டு வெள்ளையன் ஆனந்தம் அடைந்தான்
அக்காலத்தில் சென்னை மெரீனா இந்திய சுதந்திர போராட்ட களமாக விளங்கிற்று, திலகர் வந்து பேசினார் இன்னும் யார் யாரெல்லாமோ வந்து பேசினார்கள்
அந்த இடத்தில் திலகர் திடல் கட்டபட்டதெல்லாம் அப்படித்தான்
பாரதி தன் புகழ்மிக்க பாடலையெல்லாம் அந்த மெரினாவில்தான் பாடினான்
அப்படி சுதந்திர கணல் மிகுந்த மெரினாவில் இந்திய போராட்டத்தை குலைக்கும் விதமாக இந்தி எதிர்ப்பு நடந்தது வெள்ளையனுக்கு ஆனந்தத்தை கொடுத்தது
அப்பொழுது அண்ணா கோஷ்டி ஈரோட்டு ராம்சாமியிடம் இருந்தது சேர்ந்தே கொந்தளித்தார்கள்
சுதந்திரம் வந்தபொழுது ஈரோட்டு ராம்சாமிக்கும் அண்ணா கோஷ்டிக்கும் மணியம்மை திருமணத்தால் மோதலாகி கட்சி உடைந்திருந்தது, அக்கட்சியினை திமுக என ராம்சாமி சொன்னதே இல்லை மாறாக "கண்ணீர் துளிகள்" என்றுதான் சொல்வார்
அப்பொழுது திமுகவுக்கு வாய்ப்பு நேரு வடிவில் வந்தது, வெள்ளையன் இந்திய போராட்டத்தை பலகீனபடுத்த திராவிட இம்சையின் இந்தி எதிர்ப்பினை அனுமதித்தான் அதில் தந்திரம் இருந்தது
ஆனால் நேருவும் அதையே செய்ததுதான் திமுகவின் வளர்ச்சிக்கு காரணம்
பெரும் கனவில் இருந்த நேருவுக்கு பொடரியில் அடித்து அறிவை கொடுத்தது சீனா, 1962 வரை திமுகவினயோ அதன் திராவிடநாடு பிரிவினைவாதத்தையோ "ஜனநாயகம்" என அனுமதித்த நேரு அதன் பின் அரண்டார், பிரிவினைவாத தடை சட்டத்தை கொண்டுவந்தார்
அதுவரை திராவிட நாடு கேட்ட திமுக அப்பொழுது அக்கோரிக்கையினை கைவிட்டு பதுங்கியது
அது திமுகவுக்கு பெரும் அவமானம், அந்த அவமானத்தை துடைக்கத்தான் 1965ல் பாகிஸ்தானுடன் பெரும் போர் நடந்த நேரம் கொஞ்சமும் நாட்டுபற்று இன்றி பெரும் கலவரத்தை தொடக்கியது திமுக‌
அப்பொழுது ஈரோட்டு ராம்சாமி சொன்ன வார்த்தைகள்தான் அவர் எப்படிபட்ட சந்தர்பவாதி அல்லது திமுகவினை அவர் எந்த அளவு விமர்சித்தார் என்பதை காட்டிற்று
"அடக்குமுறை இல்லா ஆட்சி அநாகரிக ஆட்சி, இந்த கண்ணீர்துளி கட்சி, சேர்ந்த சுதந்திரா கட்சி (ராஜாஜி கட்சி) என இரண்டையுமே சட்டவிரோதம் என அறிவித்து தடை செய்யுங்கள்
பத்திரிகைகளுக்கு வாய்பூட்டு சட்டம் போட்டு நிலமையினை கட்டுபடுத்துங்கள்
அதே நேரம் இந்த இந்தி விஷயத்தின் அரசாங்கத்தின் நிலைபாட்டை முழுக்க தெளிவுபடுத்துவதும் சர்க்காரின் கடமை"
பதிலுக்கு கண்ணீர் துளிகள் " ஏ தமிழகமே அன்று இந்தி எதிர்த்தவர் இன்று பதுங்குகின்றார்" என சீறின, பதிலுக்கு ராம்சாமி பொறுமையாய் சொன்னார்
"ஏ கண்ணீர்துளிகளே நான் அன்றும் இன்றும் இந்தியினை எதிர்க்கின்றேன் ஆனால் உங்களை போல தமிழ் அழியும் என சொல்லி எதிர்க்கவில்லை, தமிழில் இன்னும் அழிய என்ன உண்டு?
ஆங்கிலம் அவசியம் என்பதை சொல்லித்தான் இந்தியினை எதிர்க்கின்றேன், இப்பொழுது இந்தி என்பது மொழிபிரச்சினை அல்ல அதனை நீங்கள் அரசியலாக்குகின்றீர்கள் அதைத்தான் எதிர்க்கின்றேன்
இந்தி எதிப்பு முக்கியமா? காமராஜர் அரசு முக்கியமா என்றால் எனக்கு காமராஜர் அரசுதான் முக்கியம். அதை கவிழ்க்க செய்யும் இந்த அரசியல் போராட்டத்தை நான் ஏற்கமாட்டேன், காமராஜரை விட்டுவிட்டால் டெல்லியுடன் பேசி இந்தி பிரச்சினையினை முடிக்க வேறு யார் உண்டு?"
இவ்வளவு ராம்சாமி சொன்னாலும் அதை வழக்கம் போல் புறந்தள்ளிவிட்டு பெரும் போராட்டம் நடத்தி 100 பேரை கொன்று 1000 பேரை காயபடுத்தி பலகுடும்பத்து வாழ்க்கையினை கெடுத்து பெரும் போராட்டம் நடத்தி கலவரம் செய்து முடித்தது திமுக‌
இன்று ராம்சாமி கொள்கை என கொடிபிடிக்கும் அதே திமுக‌
ராம்சாமிக்கும் திமுகவுக்குமான சண்டை 1948 முதல் 1967 வரை படுஜோராக இருந்து இருக்கின்றது, ஆனால் 1967ல் மறுபடி ராம்சாமி கனத்த மவுனத்துக்கு சென்றுருக்கின்றார், காரணம் ஆட்சியில் இருப்போரை எதிர்க்கவே கூடாது என்பது அவர் கண்ட பகுத்தறிவில் ஒரு அறிவு









No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...