Wednesday, April 6, 2022

பொங்கல் பரிசு தரமற்ற தொகுப்பு - திராவிடன் ஸ்டாக் - திராவிடியார் மாடல் அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு; அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏப் 06, 2022  https://www.dinamalar.com/news_detail.asp?id=3001322

தமிழக தயாரிப்பு இல்லாமல் பிற மாநிலப் பொருட்கள்

சென்னை: தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் வெல்லம், பச்சரிசி, புளி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ‛பொங்கல் பரிசு தொகுப்பு' வழங்கியது. இதில், சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. 
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

தரமற்ற பொருட்கள் -புளியில் பல்லி 



இதனிடையே தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கியது தொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

மரத் தூள், கெட்டுப்போன வெல்லம்

 

 இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

  

No comments:

Post a Comment

பாகிஸ்தானின் $60 பில்லியன் பொருளாதார வழித்தடத் திட்டத்திலிருந்து சீனா வெளியேறியது

China exits Pakistan’s $60 billion economic corridor project; Islamabad turns to ADB for funding பாகிஸ்தானின் $60 பில்லியன் பொருளாதார வழித்த...