இரட்சிப்பு என்னும் கப்சா
கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகர் என நம்பி சர்ச் அடிமையாவதே.
பூமியில் மனிதன் இறப்பதற்கு காரணம் உலகம் 6000 வருடங்களுக்கு முன்பாக தான் படைக்கப்பட்டது எனும் பைபிள் கதையின் முதல் மனிதன் ஆதாம் செய்த பாவத்தினால் மரணம் வந்ததாம்.
சுவிசேஷ கதையின் நாயகன் இயேசு ரோமன் மரண தண்டனையில் கொல்லப்பட்டதால் அந்த பூமியில் மரணத்திற்கு காரணமான ஆதாம் பாவம் போய்விட்டது என்பதாக பவுல் என்பவர் கடிதத்தில் உள்ளதை காட்டுகின்றனர்
கிறிஸ்தவ மதக் கதைகளின் அடிப்படை இஸ்ரேலில் முதல் நூற்றாண்டில் ரோமன் மரணதண்டனையில் இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகர் என ஆதாரம் ஏதும் இல்லாமல் நம்பி அவரை ஏற்றுக சர்ச் அடிமையானால் பரலோகம் கிடைக்கும் என ஒரு அறிவுக்கு பொருந்தாத உண்மையற்ற ஒரு மூடத்தனமான நம்பிக்கையே இந்த ரட்சிப்பு
சுவிசேஷக் கதைகள் என்பவை கிரேக்கத்தில் பொஆ. 75-120 புனையப்பட்ட கதைகள் ஆகும். கதாசிரியர்கள் இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகராக்கி காசு சம்பாதிக்கும் சர்ச்சுக்கு தேவைபடியாக புனைந்த கதைகளே சுவிசேஷ கதைகள்
புதிய ஏற்பாடு தொன்மத்தில் 27 சிறு புத்தகங்களில் ஒரு நூலை கூட இயேசுவை நேரில் பார்த்தவர்கள் எழுதவில்லை. இயேசு வாழ்ந்திருந்தால் பேசிய மொழியானஅராமிக் அல்லது ஹீப்ருவில் இல்லாமல் இவை எல்லாமே கிரேக்கத்தில் புனையப்பட்ட கற்பனை கதைகள் என்று பைபிள் பன்னாட்டு பல்கலைக்கழக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.
புதிய ஏற்பாட்டை படிப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வது 14 கடிதங்கள் பவுல் எழுதியதாக. அப்போஸ்தலர் நடபடிகள் என்னும் நூலும் பெருமளவில் பவுல் பற்றியே ஆகும். புதிய ஏற்பாடு தொன்மக் கதை நூலில் 27ல் 15 அவரைச் சுற்றியே உள்ளவை ஆகும்.
பவுல் கடிதம்படியே இயேசுவை நேரில் பார்த்த வரும் இல்லை.
வெள்ளிக்கிழமை மாலை ஒருவர் இறந்து ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் உயிரோடு வருகிறார் என்ற கதையில், என்ன தியாகம்? அதனால் என்ன பயன்? எதுவுமே இல்லையே? இந்த பூமியில் மனிதன் சாவதற்கு காரணம் ஆதாம் பாவம் என்றால் மன்னாவை சாப்பிட்டவர்கள் பூமியில் செத்தது போல சர்ச் சுவிசேஷக் கதைகளை நம்பி இயேசுவை ஏற்றவர்களும் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சுவிசேஷக் கதை இயேசு மிகத்தெளிவாக தான் மனிதன் மட்டுமே என பலமுறை சொன்னதும் உள்ளது. சுவிசேஷங்கள் வரைவதற்கு முன்பே எழுதப்பட்ட பவுல் கடிதத்தில் இயேசு எந்த அதிசயமும் செல்ல செய்யவில்லை என்கிறது.
1கொரிந் 1:22 யூதர்கள் அதிசய அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். 23 ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட செத்த கிறிஸ்துவைப் பற்றிப் பறை சாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. |
எனவே இயேசு அதிசயங்கள் செய்ததாக சுவிசேஷங்களில் உள்ளவை கட்டுக்கதை
இயேசு மோசே சட்டம் மற்றும் தீர்க்கதரிசிகள் சொன்னவை எல்லாமே யோவான் ஞானஸ்நானம் பிறப்போடு முடிந்து விட்டது. அதற்கு பின்பு எதுவும் நடக்க வேண்டிய எதுவும் அதில் சொல்லப் படவில்லை என தெளிவாக கூறுகிறார்.
மத்தேயு 11:13 மோசேவின் சட்டமும் எல்லா தீர்க்கர் நூல்களும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. |
தேவதூதன் மிகத்தெளிவாக தாவீது அமர்ந்த யூதேயா இஸ்ரேல் நாட்டு ஆசனத்தில் அரசராக அமர்ந்து யாக்கோபின் மகன்களான இஸ்ரேலின் 12 ஜாதிகள் (கோத்திரங்களை) ஆட்சி செய்வார் என்று சொன்னதாக உள்ளது.
லூக்கா1:30 வானதூதர் - "மரியா, அஞ்சவேண்டாம்; ... 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32 ... அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். |
இயேசு யூதராஜா ஆகவில்லை, தாவீது நாற்காலியில் அமரவும் இல்லை. தேவதூதன் சொன்னதாக சுவிசேஷ கப்சா
ஜோசியர்கள் யூதர்களின் ராஜா நட்சத்திரம் கண்டனராம்
மத்தேயு2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2 யூதர்களின் அரசரான குழந்தை பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள். |
மாற்கு சுவிசேஷக் கதையிலோ அல்லது மற்ற 3 சுவி கதைகளில் இயேசு கைது -விசாரணை தண்டனை எதுவுமே முதல் நூற்றாண்டின் யூதர்/ ரோமன் சட்டங்களோடு பொருந்தவில்லை
தீர்க்கம் நிறைவேறல் கப்சா
இயேசு தன் கைது &மரணம் பற்றி முன்பே கூறியதான கதைகளில் மாற்கு - மத்தேயு சுவி கதைகளிள் மட்டும் உயிரோடு மீண்டும் பழைய உடம்பு காட்சி கலிலேயா மலையில் என்றாராம்.
மாற்கு 14:28 .. நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார். |
மீண்டும் பழைய உடம்பு காட்சி கலிலேயா மலையில்
மத்தேயு 26:32 .. நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார். |
மத்தேயு கதை- சீடருக்கு காட்சி கலிலேயா மலையில் மட்டுமே
மத்தேயு 28:16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17. மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள் |
லுக்கா கதையில் சீடருக்கு மீண்டும் காட்சி ஜெருசலேமில் மட்டுமே எனவே இயேசு கலிலேயா செல்வேன் - இல்லை
லுக்கா கதையில் உயிரோடு மீண்டும் பழைய உடம்பு காட்சி ஜெருசலேம் மலையில் அன்றே பரலோகம் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
லூக்கா 24:50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். |
சுவிசேஷக் கதாசிரியர்கள் தாங்கள் தெய்வீகர் என நம்பிய செத்த மனித இயேசு யார் எனத் தெரியாத நிலையில் செவிவழி கதைகளையும் கிரேக்க பழைய ஏற்பாடு கதையின் வசனங்களையும் வைத்து இயேசு யார் பிறப்பு கதைகளை புனைந்தனர்.
மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர்.
மத்தேயு சுவி கதை | லூக்காசுவி கதை |
தந்தை- பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்ஆபிரகாமிலிருந்து தாவீது - சாலமன் வரிசையில் 41 வது தலைமுறை.பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும் | தந்தை -நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்ஆபிரகாமிலிருந்து தாவீது - நாத்தன் வரிசையில் 57 வது தலைமுறைசிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 6 - 7ல் பிறந்திருக்க வேண்டும் |
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் 400 வருடம் முன்பின் வாழ்ந்த இரு ஏசுகள்.
ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது சுவிசேஷம் எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை.
சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என சென்னை தெரிவித்தார் பிரிந்த யூத இன வெறி ஏற கடவுளின் பிள்ளைகளை நாய் பன்றி என கீழ்த்தரமாக பேசி திரிந்தார்.
ஏசு சீடரோடு எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்?
மாற்குபடி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 6- 7 மாதங்கள் மட்டுமே, முழுமையாய் கலிலியோவில்(யூத ஏரோது ஆட்சி பகுதியில்) யோவான்ஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிடவும், பின்னர் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலியை இஸ்ரேலின் கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயமுள்ள யூதேயாவிற்கு சென்றதாய்.
யோவான் சுவிபடி 2 வருடம் + ஓரிரு மாதங்கள், கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
பவுல் மிகத் தெளிவாய் இன்னுமொன்றையும் சொல்லுவார் - அவர் மதம் மாற்றி பொருள் சம்பாதிக்க மாற்றப் பட்டவர்கள் - பணபலமோ, செல்வாக்கோ, கல்வி அறிவு இல்லாத பாமரர்கள் மட்டுமே.
1 கொரி 1: 26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்து உள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். |
No comments:
Post a Comment