Friday, April 22, 2022

சாயல்குடி சர்ச்' கட்டும் பிரச்னையில் தகராறு... இரட்டைக் கொலை ; 5 பேருக்கு ஆயுள் தண்டனை..

சாயல்குடி சர்ச்' கட்டும் தகராறு...  இரட்டைக் கொலை ; 5 பேருக்கு ஆயுள் தண்டனை.. 

https://www.dinamalar.com/news_detail.asp?id=3013310
கிறுஸ்துவம் எனும் பணம் கொழிக்கும் தொழிலில் உடன்பிறந்தவரைக் கொலை செய்ய வைக்கிறது
ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில்
'சர்ச்' கட்டும் பிரச்னையில் வேதமணி 65, சகோதரர் ஆசிர்வாதத்தை 58, கொலை செய்த வழக்கில் வேதமணி மனைவி பூவம்மாள், மைத்துனர் வேதமாணிக்கம் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கன்னிராஜபுரம் வேதமணி 65. மனைவி பூவம்மாள் 61, சகோதரர் ஆசிர்வாதம் 58. இவரது குடும்பத்தினரும், பூவம்மாளின் சகோதரர் வேதமாணிக்கம் வகையறாவும் மாறி மாறி ஊர் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் இரு தரப்பினரிடம் இடையே தகராறு நடந்தது.

இந்நிலையில் 2015ல் அப்பகுதியில் சர்ச் கட்டும் பணி தொடர்பாக இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டது. பூவம்மாள் கணவரை பிரிந்து சகோதரர் வேதமாணிக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டார். சர்ச் கட்டுவது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் வேதமாணிக்கத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து வேதமணி தரப்பில் மேல்முறையீடு செய்தனர்.இரட்டை கொலை

இருப்பினும் வேதமாணிக்கம் தரப்பினர் சர்ச் கட்ட கல் ஊன்றினர். வேதமணி, சகோதரர் ஆசிர்வாதம் தடுத்தனர். ஆத்திரமுற்ற வேதமாணிக்கம், மகன் ஜோசப்ராஜா 48, சகோதரர்கள் பால்மனோகரன் 60, குணசேகரன் 52, உறவினர் ராஜாமுத்து 37, பூவம்மாள் ஆகியோர் வேதமணி, ஆசிர்வாதத்தை கடப்பாறை கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.

சாயல்குடி போலீசார் வழக்குபதிவு செய்தனர். அப்போது டி.எஸ்.பி.,யாக இருந்த மகேஸ்வரி விசாரித்தார். இறந்த குணசேகரனை தவிர்த்து வேதமாணிக்கம், பால்மனோகரன், ஜோசப்ராஜா, ராஜாமுத்துக்கு தலா ரூ.10ஆயிரம் அபராதம், ஆயுள் தண்டணை, பூவம்மாளுக்கு ஆயுள், ரூ.15 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டணையும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.-

 கிறுஸ்துவ சர்ச் நிர்வகிப்பதில் தகராறு... சாயல்குடி இரட்டைக் கொலை சம்பவத்தில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை.. 
தேவாலயத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வேதமாணிக்கம், பால்மனோகரன், ஜோசப்ராஜா, ராஜமுத்து ஆகியோருக்கு தலா ரூ. 10,000 அபராதமும், பூவம்மாளுக்கு ரூ. 15,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது.
NEWS18 TAMIL  APRIL 22, 2022

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே  கிறுஸ்துவ சர்ச் நிர்வகிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இரட்டைக் கொலை செய்த முதியவர், அவரது சகோதரி உள்ளிட்ட 5 பேருக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் வேதமாணிக்கம்(75). இவரது தங்கையின் கணவர் வேதமணி(65). இவர்கள் இருதரப்பினருக்கும் இடையே கிராம நிர்வாகிகள் தேர்வு செய்வது,  கிறுஸ்துவ சர்ச் நிர்வகிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனையடுத்து  கிறுஸ்துவ சர்ச் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வேதமணி தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.

தீர்ப்பு வந்ததை தொடர்ந்து கடந்த 26.5.2015 அன்று வேதமாணிக்கம் தரப்பினர்  கிறுஸ்துவ சர்ச் ஆக்கிரமிப்பு செய்யச் சென்றுள்ளனர். அப்போது அதை தடுக்க வேதமணி, அவரது தம்பி ஆசிர்வாதம்(58), வேதமணியின் தங்கையும், தூத்துக்குடி தருவைக்குளத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜின் மனைவியுமான கன்னிமரியாள்(42) ஆகியோர் சென்றனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வேதமாணிக்கம் தரப்பினர் அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி வேதமணி மற்றும் ஆசிர்வாதத்தை கொலை செய்தனர். இதில் கன்னிமரியாளும் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக கன்னிமரியாள் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸார்,  வேதமாணிக்கம், இவரது மகன் ஜோசப்ராஜா(51), வேதமாணிக்கத்தின் சகோதரர்கள்  பால்மனோகரன்(69), குணசேகரன்(58), பொன்னையா நாடார் மகன் ராஜமுத்து(43), வேதமாணிக்கத்தின் சகோதரியும், கொலை செய்யப்பட்ட வேதமணியின் மனைவியுமான பூவம்மாள்(67) ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது 2 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகரன் இறந்துவிட்டார். நேற்று  நடந்த இறுதி விசாரணையில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, தங்கையின் கணவரை வெட்டிக்கொலை செய்த வேதமாணிக்கம், பால்மனோகரன் மற்றும் ஜோசப்ராஜா, ராஜமுத்து, பூவம்மாள் ஆகிய 5 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் வேதமாணிக்கம், பால்மனோகரன், ஜோசப்ராஜா, ராஜமுத்து ஆகியோருக்கு தலா ரூ. 10,000 அபராதமும், பூவம்மாளுக்கு ரூ. 15,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : பொ. வீரக்குமரன்

https://tamil.news18.com/news/tamil-nadu/order-to-keep-hospitals-all-over-tamil-nadu-ready-vjr-734940.html



No comments:

Post a Comment

Pakistan' Major Exports -Terrorism, Donkeys & Beggars

  After terrorism and donkeys, beggars are Pakistan's latest export Ninety per cent of beggars detained in West Asian countries are from...