Saturday, April 2, 2022

கனடா பூர்வகுடி குழந்தைகள் இனப் படுகொலை செய்த சர்ச் - போப் முதலைக் கண்ணீர் மன்னிப்பு நாடகம்

கிறிஸ்துவ மிஷநரிகள் சென்ற இடமெல்லாம் - படுகொலை, குழந்தைகள், பெண்கள் கற்பழிப்புகள் நிகழ்த்தினர். மன்னிப்பு என்பது வெறும் முதலைக் கண்ணீர்.
சர்ச் வரும் குழந்தைகள்& பெண்கள் மீது பாலியல் கொடுமை இன்றும் தொடர்கின்றன
கனடா உறைவிடப் பள்ளிகள் (Canadian Indian residential school) நோக்கம் கனடா நாட்டின் பூர்வ குடிகளான கனடியப் பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து மேற்கத்தியப் பாணியில் வளர்ப்பதே ஆகும். இது ஒரு வகை பண்பாட்டுப் படுகொலை ஆகும். 
 
கனடாவில் ஆங்கிலிக்கன் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளின் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் கனடாவின் பூர்வ குடிகளின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற மேற்கத்திய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி வழங்குகிறது. 
 
பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கம் ஆகும். 
கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான இந்த உறைவிடப் பள்ளிகள் கனடா அரசின் நிதி உதவியுடன் கத்தோலிக்கம் போன்ற கிறித்துவத் திருச் சபைகளால் 1876-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது.
 
இப்பள்ளியின் நோக்கங்களை மீறிய பழங்குடியின குழந்தைகளை, தங்கள் வழிக்கு கொண்டு வர கடுமை தண்டனைகள் வழங்குவதால், பல குழந்தைகள் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறந்த குழந்தைகளை பள்ளிக்கு அருகே சவக்குழிகளில் புதைத்து விடுகின்றனர். 
மேலும் உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை காண அவர்தம் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளின் நிலையைப் பெற்றோர்களால் அறிய முடியவில்லை. 
எனவே பள்ளிக் குழந்தைகளின் பெறோர் இந்த கட்டாய உறைவிடப் பள்ளி முறையை எதிர்த்தனர்.  உறைவிடப் பள்ளிகளுக்கு பதிலாக, குழந்தைகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் வகையில் சாதாரண பகல் நேரப் பள்ளிகளை துவக்குமாறு கோரிக்கை வைத்தனர்.ஆனால் கனடா அரசும், கத்தோலிக்கத் திருச்சபைகளும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர். 
 
 ஒரு நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்ட இந்த உறைவிடப்பள்ளிகளில், 1,50,000 கனடாவின் பூர்வ குடிகளின் குழந்தைகள் தங்கிப் படித்தனர். 1930களில் இந்த உறைவிடப்பள்ளிகளில் பூர்வ குடிமக்களின் 30% குழந்தைகள் படித்தனர். போதிய ஆவணம் இல்லாத நிலையில் இப்பள்ளி வளாகங்களில் இறந்த கனடா பூர்வ குடிகளின் குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள்து. 
பின்னர் பழகுடியின மகக்ளின் தொடர் போராட்டத்தால், கனடா அரசு இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுத்தது.
  எனவே இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டை 1960 முதல் 1988-ஆம் ஆண்டு வரை படிப்படியாக நிறுத்தப்பட்டது. 

No comments:

Post a Comment

திருக்குறள் உரைகளில் திட்டமிட்ட நச்சு பொய்கள் -குறள் 134ல் ஓத்து

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - ஒழுக்கமுடைமை குறள் 134ல் ஓத்து என்பதை வேதங்கள் என வள்ளுவர் கூற்றை ...