Saturday, April 2, 2022

தமிழக முதல்வர் டில்லி பயணம்

 ஒரு பாரம்பரியம் மிக்க மாநிலத்தின் முதலமைச்சர் டில்லி செல்கிறார், அரசுமுறை பயணமாக.

ஒரு சந்தர்ப்பத்தில் பெரிய கட்சியின் தேசியத் தலைவரை சந்திக்கிறார். அவரும் வாஞ்சையாக இவருடன் பேச்சுக் கொடுக்கிறார். ஆனால் இவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பேச முடியவில்லை. உடன் இருந்த மாமன் மகனும், திருச்சிக்காரரும் இவர் சார்பாக பேசுகின்றனர்.

டெல்லியில் ஒரு உறுதியான இடத்தை பிடித்து அதில் தன் கடைக்குட்டி செல்ல மகளை குடியேற்றி விட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் கருணாநிதி.
தற்போது டெல்லியில் தளம் அமைத்து பிரதமராகும் கனவில் மிதக்கிறார் ஸ்டாலின். கனவு யார் வேண்டுமானாலும் காணலாம் தவறில்லை. அது அவரவர் உரிமை.
ஆனால் அந்த கனவிற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்றால் நிஜ உலகிற்கு தான் வந்தாக வேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்திருக்கிறது திமுக. அந்த வெற்றி நிச்சயம் திமுகவின் மீதான மக்கள் கொண்ட நன்மதிப்பினால் பெற்ற வெற்றி அல்ல.
அந்த வெற்றிக்கு பின்னால் பல காரணங்கள் உண்டு. ஆளும்கட்சி மீதான எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் அடுத்து வரும் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டு நல்லாட்சி செய்யும் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் தற்போதைய தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் கூட ஓட்டு சதவீதம் முன்பை விட குறைவுதான். மக்களை ஒரு போதும் நூறு சதவீதம் திருப்தி
அப்படியான ஆளும்கட்சி மீதான அதிருப்தி ஒரு பக்கம்,போலி விளம்பரம், பொய் வாக்குறுதிகள், அடிதடி, ஓட்டுக்கு பணம், பரிசு என்று பல வகைகளிலும் போராடி வாங்கிய வெற்றி அது.
நிச்சயம் அது வாங்கிய வெற்றி தான், தானே ஈட்டிய வெற்றி அல்ல. ஆனால் அந்த போலி வெற்றி தந்த மமதையில் பிரதமர் கனவு காண்கிறார் தமிழக முதல்வர்.
இது போன்ற டெக்னிக்குகள் அகில இந்திய அளவில் எடுபடுமா என்றால் நிச்சயம் எடுப்படாது.
ஆனால் வெற்றி தந்த போதையில் தன்னை ஒரு பலம் மிக்க எதிர்க்கட்சியாகவும் தேசிய பாஜகவிற்கு மாற்று தாங்கள் தான் என்ற மனக்கோட்டையில் பண்ணும் அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு காலத்தில் மிகப்பெரிய தேசிய கட்சியாக இருந்து ஆட்சி பரிபாலனம் செய்த காங்கிரசை ஆளாக கூட மதிக்கவில்லை.இதனால் சோனியாவிற்கும் ராகுலுக்கும் திமுக மீது வெறுப்பு வர தொடங்கி விட்டது.
இது நேற்றைய திமுக அலுவலக திறப்பு விழாவில் நன்றாகவே பிரதிபலித்தது. சோனியா அம்மையாரின் முக பாவமே சரி இல்லை. ராகுல் நிகழ்ச்சிக்கே வரவில்லை.
மிகப்பெரிய தலைவர் ஆகிவிட்ட மிதப்பில் மம்தாவிற்கும் சோனியா அம்மையாருக்கும் அட்வைஸ் வேறு.
ஆம் ஆத்மியின் சமீபத்திய வெற்றியால் அவர்களுடன் பச்சோந்திதனமாக நெருக்கம் கொண்டாடி கருணாநிதியின் வாரிசு என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரு தரப்பினரின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டிருக்கும் போதே மத்திய அரசையும் விட்டு வைக்கவில்லை. இங்கே ஒன்றிய அரசு பாஜகவை எதிர்த்து கொண்டு டெல்லியில் போய் கூழை கும்பிடு போட்டு ஆடு பகை குட்டி உறவு என்பது போன்ற வேஷம் வேறு.
பிரதமர் முதல் பெரிய தலைவர்கள் வரை ஒருவரையும் விடாமல் ஓடி ஓடி அழைத்தும் தேசிய பாஜகவிலிருந்து மரியாதை நிமித்தம் கூட யாரும் கலந்துகொள்ள வில்லை.
அதுமட்டுமல்ல பாஜக தரப்பில் இருந்து ஒரு வாழ்த்து செய்தி கூட இல்லை. ஒரு விஷயம் கவனியுங்கள் கனிமொழி பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவித்த அமித்ஷா இப்போது படு சைலன்ட்.
சரி,வெளியேதான் இப்படி என்றால் உள்கட்சி பூசல் அதற்கும் மேலே. நேற்றைய திறப்பு விழா நிகழ்வில் பெரிய தலைவர்கள் குறிப்பாக டெல்லி வாரிசாக அறிவிக்கப்படாத தலைவராக இருந்த கனிமொழியை கூட கண்டு கொள்ளாமல் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு தனது வாரிசாரை முடி சூடும் வேலைக்கு ஆயத்தம் செய்கிறார்.
கனிமொழியை வஞ்சித்து தந்தையின் ஆசையை சிதைக்கும் முதல்வரின் செயலை எத்தனை பிளேட் தயிர் வடை வைத்து வேண்டினாலும் கருணாநிதியின் ஆத்மா மன்னிக்காது.
ஒரு மனிதனுக்கு வெற்றி தரும் போதை ஆபத்தானது. போதை தரும் ஆணவம் அதை விட பேராபத்து. ஒரு மனிதன் ஆணவத்தில் உயரே உயரே செல்லும்போது கீழே விழ வேண்டிய உயரமும் அதிகமாகி கொண்டே இருக்கும்.
மேலே செல்லும் எதுவும் ஒரு நாள் கீழே வந்துதானே ஆக வேண்டும். உயரே உயரே பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா என்ன?
அப்படி ஒரு நாள் விழும்போது கிடைக்கும் அடி மீண்டும் எழ முடியாத அளவிற்கு பலமாக இருக்கும்.
வெற்றியின் போது பணிவு வேண்டும், அதைவிட மேலாக உயர்ந்த குறிக்கோளை இலக்காக்கும் போது அதை பெற நேர்மையான வழியில் முயற்சிக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை தமிழகத்தில் உருப்படியாக எதையும் செய்தபாடில்லை. ஒரு மாநிலத்தையே ஒழுகாக கட்டி மேய்க்க முடியாதவர்கள் முழு நாட்டையும் ஆட்சி செய்வேன் என்று கிளம்புவதெல்லாம் எங்கே போய் முடியபோகிறதோ தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் திமுக ஒரே நேரத்தில் அனைவரையும் பகைத்து கொண்டு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை.....



















அடுத்து ஒரு பள்ளிக்கூடம் செல்கிறார். மாணவிகள் இவருக்கு தேசிய உணர்வைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள். இந்த மனிதர் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார், ஏதோ திருவிழாவில் வேடிக்கை பார்க்க வந்தவர் போல. இது என்ன உடல் மொழி!




இறுதிவரை, நான் பார்த்தவரை, மாணவிகளுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. மாணவிகளுக்கு "அறிவுரை" என்று எதுவும் சொன்னதாக தெரியவில்லை. அட குறைந்த பட்சம் "குட் லக்", "ஆல் தி பெஸ்ட்" என்று துண்டு சீட்டு எழுதிக்கொண்டாவது பிட் அடித்திருக்கலாம்.
ஒரு வார்த்தையும் பேசவில்லை, மாணவர்களிடம். பின்னால் கட்டியிருந்த கைகள் அப்படியே இருக்கிறது. கடைசியில் வகுப்பாசிரியருக்கு மட்டும் ஒரு கும்பிடு. மாணவர்களுக்கு என்ன தோன்றியிருக்கும்!
இவர்தான் "ரஷ்யாவை மிரட்டி, துபாயை உருட்டி" என்று ஒரு பிம்பத்தைக் கட்டி அமைக்கிறார்கள். ஒரு இடத்திலும் ஆளுமையை வெளிக்காட்டியதாக தெரியவில்லை. ஆனால் உலகையே தன் ஆளுமையால் கட்டி வைத்திருப்பதாக உருட்டிக் கொண்டு ருக்கிறார்கள் உடன் பிறப்புகள்.
இந்தப் பக்கம் அண்ணாமலையோ உலக பொருளாதாரம் முதல் உள்ளூர் பிரச்சினை வரை அலசி ஆராய்கிறார். IPS தேர்ச்சி பெற்று போலீஸ் துறையில் இருந்ததால் குற்றப் பிரிவு எண் முதல் தெளிவாக சொல்கிறார். ஆனால் அவருக்கு அரசியல் தெரியவில்லை என்றும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்றும் கேலி பேசி கொக்கரிக்கிறது திராவிடம். இது திராவிட அடிமைகளின் ஆணவம் தவிர வேறென்ன?
ஒன்று தெளிவாகத் தெரிகிறது, திராவிடம் ஆளுமைகளை உருவாக்குவதில்லை, அடிமைகளை உருவாக்குகிறது. அடிமைகள் பிறரைப் பார்த்து சவுண்டு விடுவதெல்லாம் குடும்ப அடிமைத்தனத்தின் விசுவாசம் அன்றி வேறில்லை.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...