Saturday, April 2, 2022

நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் மீது குவியும் பாலியல் புகார்கள்

இசை பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: கலை, பண்பாட்டு துறை இயக்குனருக்கு பரபரப்பு கடிதம்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2997514
கரூர்:பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன், பாலியல் தொல்லை அளித்ததால், தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக, கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு, இசைப்பள்ளி ஆசிரியை எழுதிஉள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 






தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர், தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின், 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார்


இந்நிலையில், கரூர் மாவட்ட இசை பள்ளிக்கு, ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றபோது, பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. 


அநாகரிகம்


இது குறித்து, அந்த ஆசிரியை, தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பிஉள்ள புகார் கடிதம்:நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப்., 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், எங்கள் பள்ளிக்கு ஆய்வு வந்தார்.அனைவருக்கும் மத்தியில், என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசினார். பின், தலைமை ஆசிரியை அறைக்கு, என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார்.

 
அங்கு, என் தோள்பட்டை மேல் கை வைத்து, இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து, 'இப்படி நடனமாட வேண்டும்' என, சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இந்த நிகழ்வு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. 'ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு, உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்' என, ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். அதன்பின், கதவை திறந்து வெளியேறி விட்டேன்.
இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. இதற்கு பின் நாம் உயிர் வாழ வேண்டுமா? என்று எண்ணி, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ, அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பிஉள்ளேன். இப்பிரச்னை மீதான நடவடிக்கையால், வரும் காலங்களில் பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல, சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது, பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஆசிரியர்கள் - ஊழியர்கள் பேரவை மாநில பொதுச்செயலர் அய்யனார் கூறியதாவது:

கலையியல் அறிவுரை ஞராக ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்ற போது, கரூர் மட்டுமல்லாது, பல மாவட்டங்களில் பெண் ஆசிரியைகளிடம் பாலியல் ரீதியாக பேசி இருக்கிறார்

மறுபரிசீலனைஇந்நிலையில், பெண்கள் மட்டும் பங்கேற்கும் நடன பயிலரங்கம் ஏப்ரலில் நடக்கிறது.இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி கூறுகையில், ''கரூர் மாவட்ட இசை பள்ளி ஆசிரியை அளித்த புகார் கடிதம் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

  


No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...