Friday, July 8, 2022

அலகு குத்தி முருகனை வழிபடும் பிராமணர்கள்

 பிராமணர்கள் பால்குடம் எடுப்பார்களா? காவடி எடுப்பார்களா?அலகு குத்தி கொள்வார்களா? பூக்குளி இறங்குவார்களா?





ஆம் திருச்செந்தூர் முக்காணி பிராமணர்கள் ஒவ்வொரு வருடமும் ஆனி மாத வளர்பிறை சஷ்டி அன்று காவடி எடுத்து அலகு குத்தி தன் தலைவனான முருகனை வழிபடுவார்கள். இதில் பெண்களும் பெண் குழந்தைகளும் அடங்கும்.
பதினோரு நாட்கள், ஏழு நாட்கள், ஜந்து நாட்கள், மூன்று நாட்கள் என்று பச்சரிசி சோறு மோருடன் ஒருவேலை மட்டும் உண்டு மூன்று நாட்கள் விரதம் இருப்பதும் பின் மற்ற நாட்களில் சுத்த விரதம் என்று சொல்லும் தண்ணீர் எலுமிச்சை சாறு மட்டுமே பருகி சஷ்டிக்கு முதல் நாள் இரவு வேல்கள் அனைத்தையும் மலர்களால் அலங்கரித்து இடும்பனை முதலில் வணங்கி பின் சங்கிலி பூதத்தாரையும் வணங்கி வெளி பிரகாரத்தில் உள்ள முருகனின் அண்ணன் விநாயகப் பெருமானையும் வணங்கி உள் பிரகாரம் வழியாக கோயிலை சுற்றி வலம் வந்து பின் சுப்பிரமணிய சாமிக்கு பூஜை செய்து வேலை அவரவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று சஷ்டி அன்று காலையில் சிவன் கோயிலில் வைத்து முதலில் பால் குடம், காவடி பின் அலகு குத்தும் வைபவம் வரிசையாக துவங்கும். சிவன் கோயிலை ஒரு முறை சுற்றி பின் எட்டு ரத வீதிகளையும் சுற்றி வந்து பாலசுப்பிரமணிய சாமி சன்னதியில் வந்து வேலை எடுத்துவிட்டு சாமி தரிசனம் செய்து வழிபடுவார்கள்.
என் தந்தைக்கு ( இளைஞராக இருக்கும் போது ) பிறகு என் குடும்பத்தில் இந்த பாரம்பரிய வழிபாட்டை யாரும் செய்யவில்லை. இந்த வருடம் முதல் நான் துவக்கியுள்ளேன்.
ஒரு அடி வேல் முதல் இரண்டு மூன்று நான்கு,.... பனிரெண்டு,பதினெட்டு அடி,இருபத்தி இரண்டு அடி என்று அவரவர் விருப்பப்படி வேலின் நீள அளவு மாறுபடும்.
பாலசுப்பிரமணிய சாமிக்கு அரோகரா!
சுப்பிரமணிய சாமிக்கு அரோகரா!
சண்முக நாத சாமிக்கு அரோகரா!
ஜெயந்தி நாத சாமிக்கு அரோகரா!
திருச்செந்திலாதிபதிக்கு அரோகரா!
தனிமனித மாற்றமே சமுதாய மாற்றம்!



No comments:

Post a Comment

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு https://ta.wikipedia.org/s/9ihx மொழிகளைச் சேர் பாத்தூர் நடராசர் சிலை பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு...