இன்ஸ்டா மூலமாக பெண்களுடன் நெருங்கிப் பழகி இணையதளத்தில் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தமிழகம் முழுவதும் பல கோடி மோசடி செய்த கீழக்கரையை சேர்ந்த முகமது முகைதீன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 அதில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் எஸ்பி வருண் குமாரின் சிறப்பு அலைபேசியில் தொடர்பு கொண்டு பல பெண்களிடம் ஒரு கும்பல் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி அவர்களது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் அந்த கும்பல் தன்னிடமும் 8 லட்சம் ரூபாய் வரை மிரட்டி பணம் பறித்ததாகவும் தெரிவித்துள்ளார்.சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் ஜெர்மனியில் பொறியியல் படிக்கும் கீழக்கரையை சேர்ந்த முகமது மைதீன் தலைமையில் இந்த கும்பல் இயங்கி வந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். பெண்களுடன் பழகி அவர்களது புகைப் படங்களை மார்பிங் செய்து ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பல கோடி மோசடி செய்ததும் இந்த மூலமாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மோசடி கும்பலை சேர்ந்த புதுச்சேரி முஹம்மது இப்ராஹீம் சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல், நாகப்பட்டினம் ஜாசம் கனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாசம் கனி, பார்டு பைசுல் ஆகியோரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment