Friday, July 8, 2022

இளையராஜாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி

 இளையராஜாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதற்குத் தமிழகத்தில் செயற்கையாக எழுப்பப்படும் எதிர்ப்பு என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது.

இந்த தேசத்தில் பிறந்த மகத்தானதொரு மனிதருக்கு, பலகோடிப்பேர்களைத் தினமும் மகிழ்விக்கின்றதொரு மாமனிதருக்குச் செய்யப்பட்ட பெருமை இது. இதனைக் கண்டு பெருமைப்படாதவன், பெருமிதம் கொள்ளாதவன் மனிதனே அல்ல.
இன்றுவரையில் திராவிடப்புண்ணாக்கர்கள் அவருக்குச் செய்த மரியாதைகள்தான் என்ன? அதிகபட்சம் ஒரு கலைமாமணி பட்டம் கொடுத்திருப்பார்கள். அதனைத் தாண்டி அவரைக் கொளரவிக்க இதுவரையில் அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால் இளையராஜா என்னும் மனிதர் தன்னுடைய திறமையினால், உழைப்பினால் ஒளிரும் ஒரு விளக்கு. யாரிடமும் அவர் சென்று இதுவரையில் எதற்காகவும் கையேந்தி நிற்பதனை அவர் செய்ததில்லை. போலித்தனமுள்ள மூடர் கூட்டம் அவரை இன்றுவரையில் மதித்ததில்லை. அவரை உயர்த்திப் பிடித்ததில்லை.
அவரது பெருமைகளை உணர்ந்த யாரோ ஒரு வடக்கத்தியான் அவரைக் கொளரவிக்க முனைந்திருக்கிறான். எனவே இங்கிருக்கும் திராவிடப்புண்ண்ணாக்கு மடையர்களுக்கும், கிறிஸ்தவ மதமாற்ற கும்பலுக்குப் உடலெல்லாம் எரிகிறது. தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்கிற அச்சம் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.
அடேய் பதர்களே, அண்டை மாநிலமான கேரளா கூட இளையராஜாக்கு விழா எடுத்துக் கொளரவித்ததே? நீங்கள் இதுவரை அவருக்கு என்னடா செய்திருக்கிறீர்கள்?
இதே இளையராஜா இந்தியாவின் வேறொரு மாநிலத்தில் பிறந்திருந்தால் அவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் விதி அவர்களை மூடர்கள் கோலோச்சும் தமிழ் நாட்டில் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அதனால் அவருக்குச் சிறுமையில்லை. அவரது முக்கியத்துவத்தை உணராத ஒவ்வொரு தமிழனுக்கும்தான் சிறுமை.
மத்திய அரசு (தாமதமாகவேனும்) அவருக்கு மரியாதை செய்கிற மகிழ்ச்சியான இந்தவேளையில் எனது நான்கு கோரிக்கைகளை இங்கு மீண்டும் வலியுறுத்த விழைகிறேன்.
ஒன்று, அவர் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவருக்கு "பாரத் ரத்னா" பட்டம் வழங்கிட வேண்டும்.
இரண்டு, அவரது பெயரில் ஒரு இசைக் கல்லூரியைத் துவங்கிட வேண்டும்.
மூன்று, அவரது பெயரால் ஒரு விருதினை உருவாக்கி ஒவ்வொரு வருடமும் தகுதியானவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
நான்கு, அவரது இசைக்கோர்வைகள் அனைத்தையும் தொகுத்து அவர் பெயரில் ஒரு அருங்காட்சியமும் துவங்கிட வேண்டும்.
இதற்கான முயற்சியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் செய்திடல் வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன். ஏனென்றால் இளையராஜா நமது கலாச்சாரத்தின், பாரம்பரிய இசையின் உயிர்நாடி.
இளையராஜா போன்ற அபூர்வ மலர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூப்பவை.

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...