மத்திய இணை அமைச்சர், முனைவர். எல்.முருகன், பட்டியல் சமூகத்தில் இருந்து கல்வியால் உயர்ந்து வந்தவரை, தனக்கு இணையாக சிறப்பு விருந்தினர் மதிப்பு தருதலை, ஈவெரா வழியினர் ஏற்பது சிரமமே
கவர்னருக்கு எதிராக மதுரை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: அமைச்சர் பொன்முடி திடீர் அறிவிப்பு
இணைவேந்தர் என்ற முறையில் எங்களிடம் யாரை சிறப்பு விருந்தினராக போட வேண்டும் என ஆலோசித்திருக்க வேண்டும். பட்டமளிப்பு விழாவில் முதலில் வேந்தர், இணைவேந்தர், சிறப்பு விருந்தினர் என போடுவார்கள். கவுரவ விருந்தினர் என யாரையும் போடமாட்டார்கள்.
ஆனால், கவுரவ விருந்தினர் என ஒருவரை போட்டு, மத்திய இணை அமைச்சர் முருகனை அழைத்துள்ளனர். அவர் மத்திய கல்வி அமைச்சரும் இல்லை. துணை அமைச்சர். பட்டமளிப்பு விழாவில், கவர்னருக்கு அடுத்து கவுரவ விருந்தினரை போட வேண்டிய அவசியம் இல்லை. கவர்னரின் நோக்கம் என்ன? அரசியலை, பல்கலைகழகங்களில் புகுத்த பட்டமளிப்பு விழாவை பயன்படுத்துவதால், நான் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். பட்டமளிப்பு விழாவில் அரசியல் குறித்து பேசக்கூடாது. மாணவர்களின் வளர்ச்சி குறித்து பேசுவதற்காக இருக்க வேண்டும். இவ்வாறு பொன்முடி கூறினார்.
Rajam B Rajambalasubramanian #பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பாராம்!
போனதடவை இவர் பேசிய "பானி பூரி " பேச்சு இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அவரும் மறக்கவில்லை போல.
பல்கலைக் கழகங்களின் " வேந்தர் " அவர்.
அவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வார். உங்களை ஆலோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை!
#சம்பந்தமே இல்லாத #உதயநிதியை மேடையில் அமர்த்தி கவுரவிக்கும் போது, அவர் மத்திய அமைச்சர் L. முருகனை கூப்பிட்டால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது?
நீங்கள் புறக்கணித்தால் என்ன! அங்கு அபத்த பேச்சுக்கள் இல்லாமல் விழா நன்கு நடை பெறும்!
No comments:
Post a Comment