Monday, July 4, 2022

இலங்கையில் தமிழ் சைவக் கோவில், அடையாளங்களை அழிக்கும் கிறிஸ்துவம்

 மன்னாரில் இடித்தழிக்கப்பட்டு வரலாறு திரிவுபடுத்தப்பட்ட இன்னொரு சிவாலயம் - சிற்பியாற்றில் புதையுண்ட நிலையிலிருந்த சிவாலயத்தை பாம்பு காட்டிய வரலாறு.

திருக்கேதீஸ்வரநாதர் மன்னார் சிவ பூமியில் மீண்டும் அருளாட்சி புரியத் தயாராகும் வேலையில், மன்னாரில் இடித்தழிக்கப்பட்டு வரலாறு திரிவுபடுத்தப்பட்ட இன்னொரு சிவாலயம் பற்றிய வரலாற்று குறிப்பினை முகநூலூடாக எம்பெருமான் அருள்கொண்டு பதிவை மேற்கொள்கின்றேன்.
யாழ் மன்னார் வீதியில் - வெள்ளாங்குளத்தை தாண்டியவுடன் [மன்னார் பக்கமாக] 2km தொலைவில் சிற்பியாறு என்னும் ஆறு உள்ளது. அந்த ஆற்றங்கரையோரம் "சிற்பியாறு பாம்புவழிகாட்டி புனித அந்தோனியார் யாத்திரைத்தலம்" என்ற பெயர்தாங்கிய கிறீஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது.
அதனை அதிகளவான மக்கள் வழிபடுவதை கண்கூடே பார்த்திருக்கின்றேன் . நான் பணி நிமிர்த்தம் மன்னார் யாழ் வீதியை அடிக்கடி பாவிப்பதால் " சிற்பியாறு பாம்பு வழிகாட்டி " என்ற பெயர் எனக்குள்ளே எதோ ஒரு சிவாலயம் இருந்ததிற்கான உணர்வை தந்தது.
அதுதவிர பாம்பு சிவனையே வழிபடும் மிருகமாகும். கேதுபகவான் வழிபட்டு முத்தியடைந்ததினாலேயே திருக்கேதீஸ்வரம் என பெயர்வரகாரணமாயிற்று. அதன் பொருட்டு அண்மைய ஊர்களில் பெரியவர்களை சந்தித்து இது தொடர்பாக செவி வழி கதைகளை விசாரித்தறிந்தேன்.
அவர்கள் கூறியவற்றிலிருந்து, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மண் மழை போன்ற இயற்கைஇடரால் அவ்விடத்திலிருந்த சிவாலயம் நிலத்தினுள் புதையுண்டு போனதாகவும், புதையுண்ட சிவலிங்கம் இருக்கும் இடத்தை அதனை காவல் காத்த நாகபாம்பு வழிப்போக்கர்களுக்கு அந்த இடத்தை அடையாளம் காட்டியதாகவும், சில சகாப்தங்களுக்கு இதனையறிந்த கிறிஸ்தவர்கள் எஞ்சியிருந்த அடையாளங்களை அழித்துவிட்டு சிவலிங்கம் இருந்த இடத்தின்மேலே கிறீஸ்தவ தேவாலயத்தை கட்டியதாகவும் கூறினர்.

அவ்விடத்தில் சிவலிங்கம் புதையுண்ட நிலையில் இருப்பதாலேயே அந்த தேவாலயமானது சக்திமிக்கதாக இருக்கின்றது என்பதையும் எடுத்துக்கூறினார்கள். இதனை கிறிஸ்தவர்கள் வழிப்போக்கன் ஒருவன் வழி தெரியாமல் நின்றபோது , பாம்பு வழிகாட்டியதாகவும், அது பின்னர் குறித்த புற்றில் சென்று மறைந்து விட்டதாகவும், அந்த புற்றில் அந்தோனியார் சிலை இருந்ததாகவும் வரலாற்றை திரிவு படுத்தியுள்ளனர்.

இன்றும் தேவாலயம் உள்ள ஆற்றங்கரையோரமாக 2km நடந்து சென்றால் , பாரிய பாம்பு புற்று உள்ளது. அதன் அருகில் சுருவத்தை நட்டு வழிபாடு நடத்துகிறார்கள்.எனவே அழிந்த இவ் சிவாலயத்தின் வரலாற்றினை ஆய்வு செய்யுமாறு இலங்கையின் புகழ் வரலாற்று ஆசிரியர் திருச்செல்வம் ஐயா Nks Thiruchelvam அவர்களை வேண்டி நிக்கின்றேன்.

அத்துடன் புதையுண்ட சிவாலயத்தை மீட்டு புனரமைக்குமாறு சிவதர்ம மகாபோதி ஆதீன குரு வணக்கத்துக்குரிய சிவாச்சாரியார் அகிலன் ஐயா அவர்களையும், தென்னாடு தென்னாடு சிவமட நிறுவுனர் திரு பார்த்தீபன் SG Parthy ஐயா அவர்களையும் , உருத்திர சேனை அமைப்பு தலைவர் சுஜீவன் இராஜேஸ்வரன் சுஜீவன் அவர்களையும் , சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் Aaruthirumurugan Aaruthirumurugan அவர்களையும் மற்றும் சுவீடன் நாட்டிலிருந்து சிவப்பணியாற்றும் சதானந்த போஸ் Kokuvil Bose அவர்களையும் பணிவன்புடன் வேண்டி நிற்கின்றேன்
இது தொடர்பாக மேலதிக தேடலை தொடர்ந்தவண்ணமுள்ளேன்.

No comments:

Post a Comment