Tuesday, July 12, 2022

ராமநாதபுரம் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கூறும் சூதப்பள்ளி

பள்ளி என்பது மற்ற மதத்தினரின் வழிபாட்டு இடம் அல்ல.
சமணப்பள்ளி என்றால் சமண வழிபாட்டு இடம் அல்ல.
சமணப்பள்ளி என்றால் சமணர்களின் உறைவிடம் என்று தான் பொருள்.
பள்ளிக்கூடம் என்றால் உணவும் அளிக்கப்படும் இடம் என பொருள்.
சமண வழிபாட்டு இடங்கள் தேரசர் என்றோ தீர்த்தா என்றோ அழைக்கப்படும்.
பவுத்த வழிபாட்டு இடங்கள் விகாரை என்றே அழைக்கப்படும்.
எனவே பள்ளி என்பது வழிபாட்டு இடம் என குறிப்பிடுவது தவறு.
இதனால் பள்ளி என்பட்டும் அங்கே இருந்த தங்குமிடங்கள் என சொல்லலாம்.
ஐந்நூற்றுவர் எனும் வணிக குழுவினரை இஷ்டத்துக்கு எல்லா மதத்திலேயும் சேர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முஸ்லிம் என்கிறார், ஒருவர் கிறிஸ்துவர் என்கிறார் இதிலே யூதர் என எழுதிவிட்டார்கள்.
சூதபள்ளி, தரிசப்பள்ளி, பிழார்பள்ளி
பிழா, பிழார் என்றால் வட்டவடிவமான பிரம்புக்கூடை.
சூத, சூதம் என்றால் மாகனி தரும் மாமரம் என்றும் பொருள்.
தரிசம் என்பது தரிசனம் என்பதன் திரிபாக இருக்கலாம்.
இவை எல்லாம் உறைவிடம் அளிக்கும் இடங்களை அதாவது அந்தக்கால ஹோட்டல்களை குறிப்பிடுபவையாக இருக்கலாமே ஒழிய மதம் சார்பான விஷயங்களை அல்ல.
இதிலே தரிசப்பள்ளி என ஒரு இடம் கேரளாவிலே இருக்கிறது அங்கே ஒரு கிறிஸ்துவ வழிபாட்டிடம் இருந்தது அதனால்.... என இழுத்துக்கொண்டே போவது எந்த வகையிலே சரி என தெரியவில்லை.
அது ஒரு ஊரின் பெயராக இருந்திருக்கலாம்.
கிறிஸ்துவர்களை மலையாளத்திலே நஸ்ராணி என்று தான் சொன்னார்கள். பழைய இடங்களிலே இன்னமும் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். அது அரேபிய சொல்லாடலிலே இருந்து வருவது.
இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியை கேட்டால் நமக்கே தெரிஞ்சதும் மறந்துவிடும்.

https://tamil.oneindia.com/news/ramanathapuram/tamil-nadu-s-oldest-synagogue-s-stone-inscription-was-discovered-in-ramanathapuram-466090.html
 
'பள்ளி' என்பது 'இடம்' இல்லையோ? ஆந்திராவில், வேலூர் - சித்தூர் சாலையில் 'பள்ளி' என்று முடியும் இடங்கள் இருந்த நினைவு. 'நாட்ராம்பள்ளி என்றும் ஒரு இடம் நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் கோவில்கள் இல்லை.
 
சூதபள்ளி என்பது எவ்வாறு யூதபள்ளியாக மாறும்..?
" ய" எவ்வாறு " ச " வாகத் திரியும்..?
இப்போ..
கல்வெட்டில்..
ய வரிசை சொற்கள் ஏராளமாக உள்ளன.
யாண்டு, யக்ஷி, யஜூர், யானை,
யுகம் .....
இவைகள் எல்லாமே ய வரிசைதானே.. எங்கேயுமே
ய வுக்கு பதிலாக ச இல்லையே...
ஒருவேளை யூதர் என்றால் அப்படியேதானே வரும்..
அது ஏன் சூதர் என்று வரப்போகிறது..
யுகம் என்பதை சுகம் என்றா எழுதமுடியும்..?
அறிஞர்கள் விளக்கம் அளித்தால் தெளிவுபெறலாம்..

யாழ்ப்பாணத்தை ஜாப்னானு ஆங்கிலேயன் கூப்பிடதுக்கு பழி வாங்க தான் நாம ஜூலையை யூலைனோம். ஆனால் பதிவர் கேட்டிருப்பது வேற ஒன்னு. அதுக்கு ஜூலை யூலை எடுத்துக்காட்டு பொருந்தாது.
யூதேயா = ஜீதேயா.
யூ என்பது ஜீ ஆகும்.
சூ ஆகாது.
ஜாக்குவார் = யேகுவார்.
Jaquar = Yeguar.
Youdheya = Judheya.
Yuan = Juan.
யால் என்ற சொல் எந்த மொழி? எந்த இலக்கியம்/தொல்லியல் தடயத்தில் உள்ளது?
யாறு என்பது சாறு என்று தமிழில் உள்ளதா?
ய - ஜ தமிழ் வடமொழி இடையே உள்ளது. அது மீண்டும் தமிழுக்கு வருகையில் ஜகரம் சகரமாகிறது!
மொழிமுதல் யகரம் அகரமாகவில்லை, யகரம் கெடுகிறது அவ்வளவே! (யாறு - ஆறு, யானை - ஆனை... )

தேசம் என்பது தேசம் என்று சொல்லப் படுகிறது. நான் மதுரை பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பு பயிற்சி பட்டறை மூன்று நாட்கள் பங்கு பெற்றேன். பல ஆண்டுகள் முன்பு நடந்தது இது. அதில் சொல்லப்பட்ட முக்கிய கருத்து பிற மொழிச் சொற்களை தமிழில் அப்படியே எடுத்து ஆளலாம். தமிழுக்கு ஏற்றவாறு மற்றத் தேவை இல்லை. ஏனெனில் சில சமயம் பொருள் மாறி விடக் கூடும். உதாரணமாக ஆங்கில பெயர் Shakespeare என்பதை தமிழில் செகப்பிரியர் என்பர். ஆனால் உண்மையில் இது அதன் பொருள் இல்லை.
யூத பள்ளி ஊதப்பள்ளி என்றுதான் மாறும். நோவா கால நீரூழியில் சிக்கி செத்து ஊதி பெரிதானவர்கள் வம்சமே ஊத வம்சம்!
ஐயா முனைவர் பாண்டியன் அவர்களின் விளக்கம் தமிழ் சிந்தனையாளர் பேரவை.

சூதர் என்பது பாணர்களின் பட்டம். சூதப்பள்ளி என்பது பாணருக்கான பள்ளியாவே கொள்ளனும்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா