கோவை பாஸ்டர் ஸ்டீபன்ராஜ் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் -போக்சோவில் கைது
Coimbatore Pastor Arrest: கோவையைச் சேர்ந்த மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியான நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத போதகரை போலீசார் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவர் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜெபம் செய்து வருகிறார். இது தவிர தமிழ்நாடு, கர்நடாகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊர் ஊராகச் சென்று ஜெப கூட்டங்கள் நடத்தி வருகின்றார்.
இவரது மலுமிச்சம்பட்டி வீட்டின் அருகே பாட்டியுடன் இரு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பாட்டி வெளியில் சென்று இருந்த நேரத்தில் வீட்டிற்கு சென்ற மதபோதகர் ஸ்டீபன்ராஜ், சிறுமியின் 12 வயது தங்கையை ஒரு அறையில் வைத்து தாழிட்டு விட்டு , 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த 17 வயது சிறுமி, கூச்சலிட்டதால் ஸ்டீபன்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் 17 வயது சிறுமி இது குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்த நிலையில், இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியுடன் வந்து பாட்டி புகார் அளித்தார்.
இதன் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதயான நிலையில், மதபோதகர் ஸ்டீபன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment