Tuesday, July 12, 2022

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் மேல் தேசிய சின்னம் அசோகரின் 4 சிங்கங்கள்

டெல்லியில்..நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் ..சிங்க முகங்கள் கொண்ட...வெண்கலத்தில் ஆன ..நம் தேசிய சின்னத்தை இன்று திறந்து வைத்தார்..நம் பாரத பிரதமர் திரு. மோடி என்னும் சிங்கத்திற்கெல்லாம் சிங்கம்..... மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் ..டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 
 
1921 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தற்போது இயங்கி வரும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் சூழலில், இடப் பற்றாக்குறை காரணமாகவும்..கட்டிடத்தின் பழமை கருதியும் . புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் 10ம் தேதி நம் பிரதமர் திரு. மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.முக்கோண வடிவில் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.புதிய நாடாளு மன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக் கூட்டத்திற்கு 1,272 இடங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சுமார் ..ரூ.971 கோடி மதிப்பில் 62000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனை தாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் இந்த கட்டிடம் அமைய உள்ளது.. குளிர்கால கூட்டத் தொடருக்குள் ( இந்த ஆண்டு இறுதிக்குள் )புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலத்தினாலான தேசியச் சின்னத்தை நம் பிரதமர் திரு. மோடி அவர்கள் இன்று திறந்து வைத்தார். (இந்தியாவின் தேசியச் சின்னம், சாரநாத்தில் உள்ள அசோகத் தூணிலிருந்து எடுக்கப்பட்டது.
இதில் நான்முகச் சிங்கமும் வலப்பக்கம் காளையும் இடப்பக்கம் குதிரையும் இருக்கும்.
காளை..நாட்டின் கடின உழைப்பு மற்றும் உறுதியையும் ..
குதிரை..ஆற்றல் மற்றும் வேகத்தையும் குறிக்கின்றன.

இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன

இச்சின்னம்..இந்திய தேசியச் சின்னமாக 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-இல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.) 

இன்று நம் பிரதமர் அவர்கள் திறந்து வைத்த வெண்கலத்தினால் செய்யப்பட்ட இந்த தேசிய சின்னத்தின் ஒட்டுமொத்த எடை 9,500 கிலோ ஆகும். இது 6.5 மீட்டர் உயரம் கொண்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேல் பகுதியில் இந்த தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது

இந்த மைய மண்டபத்தின் மேல் அமைந்திருக்கும் இந்த தேசிய சின்னத்தின் உருவாக்கம், மண்ணால் மாதிரி உருவாக்கம், கணினியில் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கம் என 8 படி நிலைகளுக்குப் பின் வெண்கலத்தில் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் நம் பிரதமர் அவர்கள் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் திரு.ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் திரீ.ஹர்தீப் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...