Friday, July 1, 2022

வடலூர் ராமலிங்கம் (வள்ளலார்) பிள்ளை நினைவு கூடத்தில் லிங்கம், உருவ பூஜை தடை செல்லும்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞானசபையில் சிலை வழிபாடு நடத்தக்கூடாது என்ற நீதிபதி சந்துருவின் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
By: செல்வகுமார் | Updated at : 30 Jun 2022 
வழக்கு:கடலூர் மாவட்டம் வடலூரில் வழிபாட்டிற்காக உருவம் எதுவும் நிறுவப்படாத சத்தியஞான சபையில் சிவலிங்கம் மற்றும் சில விக்கிரகங்களை சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் கடந்த 2006-ல் நிறுவினார். சிலை வைக்கப்பட்டது வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று, இந்து அறநிலையத் துறையிடம் பக்தர்கள் முறையீடு செய்தனர்.  இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்தறை நடத்திய விசாரணையில், 1872 ஆம் ஆண்டு சத்திய ஞான சபை நிறுவப்பட்ட பின்னர் வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டு, ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின் பற்றப்படவில்லை என்பதால் லிங்க வழிபாடு, வள்ளலார் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவித்து, சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
மறு ஆய்வு மனு:இணை ஆணையரின் இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை இந்து அறநிலையத் துறையின் ஆணையரிடம் சிவாச்சாரியார் அளித்தார். அந்த மனுவை, தள்ளுபடி செய்தும் இணை ஆணையரின் தீர்ப்பை உறுதி செய்தும், இந்து அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார்.
தனி நீதிபதி:இந்து அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கியதையடுத்து,  சபாநாத ஒளிசிவாச்சாரியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சந்துரு, கடந்த 2010 ஆண்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். உருவ வழிபாட்டை ஏற்காமல், ஜோதி என்ற பெயரில் நெருப்பை வழிபடுவது தான் வள்ளலாரின் கோட்பாடு என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். 
மேல் முறையீடு:தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சிவாச்சாரியார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2010 ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் டி.ராஜா மற்றும் தமிழ்செல்வி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினயது. அதில், வள்ளலார் சத்திய ஞான சபையில் சிலை வழிபாடு நடத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு சரிதான் என்று தீர்ப்பளித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் சத்தியஞான சபை. வள்ளலாரின் கொள்கைக்கு மாறாக அங்கு சிவலிங்கம் போன்ற தெய்வங்களை வைத்து சிலர் உருவ வழிபாடு நடத்தியதை எதிர்த்து தொண்டர்குல பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. அதையடுத்து “வள்ளலார் கடந்த 1872-ம்ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின்படி சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது. அங்கு ஜோதி தீபம் மட்டுமே காட்டப்பட வேண்டும்.
அப்போது ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை' என்ற தாரக மந்திரத்தை மட்டுமே மக்கள் அமைதியாக ஓத வேண்டும். வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகளில் லட்சியம் வைக்க வேண்டாம் என வள்ளலார் கூறியுள்ளார். சத்தியஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது என்பதால், அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படியே அந்த சபை நடத்தப்பட வேண்டும். மேலும் சத்தியஞான சபை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சபை நிர்வாகத்தையும், பூஜை முறைகளையும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அறங்காவலர்கள், செயல் அலுவலரையே சாரும்” என்று உத்தரவிட்டிருந்தது இந்து சமய அறநிலையத்துறை.
இந்து அறநிலையத்துறையின் அந்த உத்தரவை எதிர்த்தும், சத்தியஞான சபையில் முறைகேடுகள் நடப்பதாகக் குறிஞ்சிப்பாடி ஜி.சுப்பிரமணியன் என்பவர் அறநிலையத் துறையில் அளித்த மனுவை எதிர்த்தும் சபாநாத ஒளி சிவாச்சார்யர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, "வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்தியஞான சபையில் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிராக உருவ வழிபாடு கூடாது. இதுதொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்” என்று கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து சபாநாத ஒளி சிவாச்சார்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...