"ஏற்றுமதி - இறக்குமதிக்கு இந்திய ரூபாய்!" - இன்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
வெளிநாடுகள் இந்திய வங்கிகளில் பிரத்தியேக 'ரூபாய்' கணக்குகள் (vostro account) திறந்து, அதன் மூலம் இந்திய ரூபாயில் வர்த்தகம்.
இது பெரிய விஷயம் - செய்தி என்கிறார்கள். டாலர் ஆதிக்கம் குறையும்.
ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவில் vostro account மூலம் ஏற்றுமதி - இறக்குமதியில் ஈடுபடலாம்.
International Trade Settlement in Indian Rupees (INR)
In order to promote growth of global trade with emphasis on exports from India and to support the increasing interest of global trading community in INR, it has been decided to put in place an additional arrangement for invoicing, payment, and settlement of exports / imports in INR. Before putting in place this mechanism, AD banks shall require prior approval from the Foreign Exchange Department of Reserve Bank of India, Central Office at Mumbai.
இந்திய ரூபாயில் ஏற்றுமதி வர்த்தகம்; ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்கு 'சைமா' வரவேற்பு
ஜூலை 13, 2022 கோவை : 'இனி, இந்திய ரூபாயிலேயே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது சரியான கொள்கை முடிவு' என, 'சைமா' கூறியுள்ளது.
இதுகுறித்து, சைமா (தென்னிந்திய மில்கள் சங்கம்) தலைவர் ரவிசாம் கூறியதாவது:இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை வரவேற்கிறோம். அரசின் இம்முயற்சி இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும்.
இதனால், நம் நாட்டுடன் கணிசமான வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறை உள்ள பல்வேறு நாடுகள் நம் நாட்டுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இக்கொள்கை ஊக்குவிக்கும். இம்முடிவு, கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் வணிகப் பற்றாக்குறையை குறைக்க உதவும்.

அரசின் தற்போதைய முடிவின் உண்மையான பலனை அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்பட்டாலும், நீண்ட கால அடிப்படையில் ரூபாய் மூலம் சர்வதேச வர்த்தகம் என்பது பல்வேறு நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய ஊக்குவிக்கும் என்பதோடு, இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாற வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கியின் முடிவு ஏற்றுமதி, இறக்குமதி பண பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்க்கவும், சுமுகமான வர்த்தக உறவை ஊக்குவிக்கவும் உதவும். இந்திய ரூபாயை சர்வதேச மயமாக்குவது சரியான திசையில், இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment