Friday, July 1, 2022

தமிழக மின்சாரத் துறையில் 97 ஊழியர்கள் 3 மாதங்களில் மரணம்

சென்னை : மின் விபத்து காரணமாக நடப்பாண்டில் ஜன. முதல் மார்ச் வரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3066237
தமிழக மின் வாரியம் டிரான்ஸ்பார்மர் கேபிள் மின் கம்பம் 'பில்லர் பாக்ஸ்' போன்ற சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. அந்த சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால் மின் ஊழியர்களை தவிர வேறு எவரும் தொட அனுமதி கிடையாது.சிலர் பேனர் கட்டவும் போஸ்டர் ஒட்டவும் முறைகேடாக மின் சாதனங்களை தொடும்போது மின் விபத்தில் சிக்குகின்றனர். மின் வாரியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தால் ஊழியர்களும் மின் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
நடப்பாண்டில் ஜன. முதல் மார்ச் 31 வரை மட்டும் மின் விபத்தில் சிக்கி ஊழியர்கள் மக்கள் என 97 பேர் உயிரிழந்துள்ளனர்; 61 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுதவிர மாடுகள் உட்பட 28 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. எனவே மின் விபத்து ஏற்படுவதை தடுக்க ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் மாதத்தில் ஒரு நாள் மின் சாதனங்களை பாதுகாப்பாக சரிசெய்வது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
மேலும் ஹெல்மேட் ஷூ ரப்பர் கையுறை பெல்ட் போன்ற பாதுகாப்பு சாதனங்களை தரமாக வழங்குமாறும் அறுந்து கிடங்கும் மின் கம்பியை தொடக் கூடாது என்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...