Friday, July 1, 2022

பூங்கா தனியாருக்கு தரும் கோவை திமுக மாநகராட்சி

தனியாருக்கு மாநகராட்சி இடமாம் வாரி வழங்க இன்று வருது தீர்மானம்

  ஜூன் 30, 2022   கோவை-ஐகோர்ட் உத்தரவு மற்றும் நகராட்சிகளின் நிர்வாக   ஆணையர் அறிவுறுத்தலை மீறி, கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை தனியாருக்கு வழங்கி, தனியார் இடத்தை மாற்றம் செய்து கொள்ள, இன்றைய மாமன்ற கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3065241

அ.தி.மு.க., கவுன்சிலர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.கே.டி., நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா பயன்பாட்டுக்கான பொது ஒதுக்கீட்டு இடம் (ரிசர்வ் சைட்) இருக்கிறது.இதற்கு அருகாமையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் கிழ புற எல்லை சீராக இல்லாமல் வளைந்து இருப்பதாகவும், பொது ஒதுக்கீட்டு இடத்தில், 2,360.50 சதுரடி நிலத்தை பரிமாற்றம் செய்தால், இரு மனைகளின் கிழ/ மேல்புற எல்லை நேர்ேகாடாக அமையும் எனவும், நில உரிமையாளர், மாநகராட்சிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

மாமன்றத்துக்கு இன்று வருகிறது: அதையேற்று, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை தனியாருக்கு வழங்கி, நில மாற்றம் செய்து கொள்ள, நகரமைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இதுதொடர்பாக, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.பொது ஒதுக்கீட்டு இடத்தை, எந்தவொரு காரணத்துக்காகவும் வேறு பணிகளுக்கு உபயோகிக்கக் கூடாது என, ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.இதேபோல், வடவள்ளி வி.என்.ஆர்., நகரில், 11 சென்ட் இடத்தை தனியாருக்கு வழங்கி விட்டு, வேறொரு பகுதியில் மாற்று இடம் பெற்றுக் கொள்ளலாம் என, மாநகராட்சி தரப்பில் முன்மொழிவு அனுப்பியபோது, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் நிராகரித்து, உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவாவது...ஒன்னாவது! : கோர்ட் உத்தரவு மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையரகத்தின் சுற்றறிக்கையை மீறி, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, தனியாருக்கு நில மாற்றம் முறையில் கொடுக்க, முன்மொழிவு அனுப்ப, தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.இதனால், மாநகராட்சிக்கு எவ்வித இழப்பும் இல்லை. தனியாரிடம் இருந்து பெறப்படும் அளவுக்கேற்ற நிலத்தையே, மாற்றிக் கொடுப்பதாக, தீர்மானத்தில் காரணம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மனுதாரர் யார், எதற்காக கேட்கிறார் என்கிற விபரத்தை வெளிப்படையாக, மன்றத்துக்கு தெரிவிக்காமலும், மனுதாரரின் கோரிக்கை மனு நகலை இணைக்காமலும், மாநகராட்சி அதிகாரிகள் மறைத்திருக்கின்றனர்.அவ்வாறு தனியாருக்கு நிலத்தை மாற்றிக் கொடுப்பதால், சம்மந்தப்பட்ட நில உரிமையாளருக்கு பயன் கிடைக்குமே தவிர, மாநகராட்சிக்கு எந்த வகையிலும் பயனில்லை. தனியாருக்கு நிலத்தை மாற்றிக் கொடுக்க ஏன் முனைப்பு காட்ட வேண்டுமென, மாமன்ற எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வெளிநாடு சென்றிருப்பதால், துணை கமிஷனர் ஷர்மிளா தலைமையில் இன்று மாமன்ற கூட்டம் நடக்கிறது.அதில் தீர்மானம் நிறைவேற்ற அவசர பொருளாக, கவுன்சிலர்களுக்கு நகல் அனுப்பியிருப்பதால், சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இத்தீர்மானத்துக்கு அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் ஆட்சேபனை தெரிவித்து, கமிஷனருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.கடந்த மே மாதமும், அப்போதைய கமிஷனர் ராஜகோபால் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில், மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு, ஏகப்பட்ட தீர்மானங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment