Friday, July 1, 2022

திருப்பூர் சட்ட விரோத மசூதி

ஜனவரியில் சீல் வைக்க நீதிமன்ற ஆணை!
ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை........................................................
இப்பொழுது, மறுபடியும் ஆர்பாட்டம்......................................
பிறகு சட்டம், நீதி, ........................................................இதெல்லாம்..................................................
வழிபாட்டு தலத்துக்கு, 'சீல்' வைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் பல இடங்களில் முஸ்லிம்கள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முடங்கியது.
திருப்பூர், வேலம்பாளையம், மகாலட்சுமி நகரில் பள்ளிவாசல் உள்ளது. 'இந்த இடம் வணிக பயன்பாட்டுக்கான இடம்; விதிகளை மீறி வழிபாட்டு தலமாக செயல்படுகிறது' என, 2014ல், குடியிருப்பு நலச்சங்கத்தினர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழிபாட்டு தலத்துக்கு சீல் வைக்க, ஆறு மாதங்களுக்கு முன் ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், எதிர்ப்பு காரணமாக மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்க முடியவில்லை. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், வழிபாட்டு தலத்துக்கு சீல் வைக்க இருந்தனர். இதையறிந்து, அனுப்பர்பாளையம், புதுாரில் முஸ்லிம்கள் சிலர் காலை, 9:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மறியலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, திருப்பூர், சி.டி.சி., கார்னரில் திரண்டு மறியல் செய்தனர். அங்கிருந்து, உஷா தியேட்டர் சந்திப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மாநகராட்சி சந்திப்பை அடைந்தனர். எஸ்.பி., செஷாங் சாய், துணை கமிஷனர் வனிதா என, பலர் பேச்சு நடத்தியும் மறியல் கைவிடப்படவில்லை.
தாராபுரம், பல்லடம், உடுமலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். காலை, 10:00 மணி முதல் நீடித்த மறியல், மாலை, 5:30 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு, வரும் 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என, ஐகோர்ட் தெரிவித்துள்ளது' என்றனர்.


 https://m.facebook.com/story.php?story_fbid=4824969540940920&id=100002837648582



No comments:

Post a Comment