Thursday, May 5, 2022

பள்ளிக் கூடங்களில் மதமாற்ற அராஜகம் நிறுத்த தமிழக அரசு எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் மதமாற்ற புகார் வந்தால் கடும் நடவடிக்கை தமிழக அரசு திட்டவட்டம்  

https://patrikai.com/religious-conversion-in-educational-institutions-complaint-tn-govt-reply-to-the-court/

  சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது. 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, மதமாற்றப் புகார்களும் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே தஞ்சாவூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மற்றும், கன்னியாகுமரி, கோவை பள்ளிகளில் எழுந்த மதமாற்றம் தொடர்பான புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

இந்தநிலையில், கட்டாய மதமாற்றம் குறித்து,  வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அவரது மனுவில், தஞ்சையில் மாணவி மதமாற்றம் நடவடிக்கையால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருந்தது. இதைத்தவிர திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளில் மதமாற்றம் தொடர்பான புகார்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே, மதமாற்றத்தை பள்ளிகளில் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு த்ரவிட வேண்டும் என்றும் அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் து தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தை தடுக்க விதிகளை வகுப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதில் கூறிய தமிழகஅரசு வழக்கறிஞர், கன்னியாகுமரி, திருப்பூர் சம்பவங்களை தவிர வேறு எந்த இடத்திலும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்றும்கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம்: 

அரசு எச்சரிக்கை சென்னை, மே 5–

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், தமிழகத்தில் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டும் அரசின் ஆதரவுடன் கிறிஸ்துவ மிஷனரிகள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 12ம் தேதி அரசு கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி பள்ளியில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை முட்டியிட செய்த விவகாரத்தில், ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் அறிவுறுத்தி இருந்தாலும், மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும்போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வரும்போது, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதி சென்று வரவேற்றதன் மூலம், மிஷனரிகளுக்கு ஆதரவாகவும், கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசு செயல்படுவது நிரூபணமாவதாக குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசு மத நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், கன்னியாகுமரி, திருப்பூர் போன்ற இடங்களில் நடந்த மதமாற்ற நடவடிக்கைளில் சம்பந்தப்பட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

எந்த புகாரும் இல்லை

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி மனுதாரர் குறிப்பிட்ட திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களை தொடர்ந்து எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மத மாற்ற சம்பவங்கள் நடந்ததாக எந்த புகாரும் இல்லை. கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தப் பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் என்ற விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மனுதாரர் கோரியபடி வழிகாட்டு விதிமுறைகளை அரசு ஏன் வகுக்கக்கூடாது எனவும், அதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர். குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தாலும், மதமாற்றம் செய்வது உரிமை அல்ல எனவும் கூறி, வழக்கை விரிவான வாதத்திற்காக நாளை தள்ளி வைத்துள்ளனர்.

.

மதம் மாற கிராம மக்கள் மறுப்பு; வழியை மறித்தது சர்ச் நிர்வாகம்



தமிழகத்தில் ஹிந்துக்கள் வரிப்பணத்தில் மதச்சார்பற்ற அரசு, அனைத்து பள்ளிகளிலும் நிர்வாகத்தை அன்னிய சர்ச் கும்பல் நீக்கி முழுமையாக அரசுடைமை செய்ய வேண்டும் 


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மருத்துவாம்பாடி கிராம மக்கள், மதம் மாற மறுத்ததால், வழியை மறித்து கிறிஸ்தவ சர்ச் நிர்வாகம் சுவர் எழுப்பியதை கண்டித்து, கிராம மக்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவாம்பாடி கிராமத்தில், ஹிந்து ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது.அந்த நிர்வாகத்தின் சார்பில், புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி நடத்தப்படுகிறது. அதன் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள, யேசுபாதம், 45, என்ற பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் அங்குள்ள ஒரு பிரிவு மக்களை, மதம் மாற வலியுறுத்தி வந்துள்ளார்; அவர்கள் மறுத்துள்ளனர்.


இதனால் அப்பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பொதுவழியாக பயன்படுத்தி வந்த இடத்தில் திடீரென சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.இது குறித்து கிராம மக்கள், பஞ்., தலைவர் சிவக்குமார் ஆகியோர் சர்ச் நிர்வாகத்திடம் கேட்டபோது, 'அது எங்களுக்கு சொந்தமான இடம். அதனால் சுவர் எழுப்பியுள்ளோம்' என, கூறியுள்ளனர்.


அந்த சர்ச் நிர்வாகம் மற்றும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள், கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


மதம் மாற வற்புறுத்தும் பாதிரியார் வீதிக்கு வந்த ஹிந்துக்கள்!

Kathiravan Mediyaan News

13 mins ago

No Comments

Share it if you like it


ஹிந்துக்களை மதம் மாற வற்புறுத்திய பாதிரியாருக்கு எதிராக ஹிந்துக்கள் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு கிறிஸ்தவ மிஷநரிகளின் கை ஓங்கியுள்ளது. இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தீவிரமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஸ்டாலின் ஆட்சியில் ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தி.மு.க ஆதரவு ஊடகமான யூ2 புரூட்டஸ் சமீபத்தில் தில்லை நடராஜரை இழிவுப்படுத்தியதே சிறந்து சான்று. இதுதவிர, ஹிந்துக்களின் முகத்தில் குத்துங்கள் என்று பேசிய எஸ்றா.சற்குணம் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, ஹிந்து கடவுள்கள் சாத்தான் என்று பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கையையும் இந்த ஆளும் தி.மு.க அரசு எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்


இப்படியாக, ஹிந்துக்கள் தி.மு.க அரசால் தொடர்ந்து பல இன்னல்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், அப்பகுதியை சேர்ந்த பாதிரியார் ஏசுபாதம் என்பவர் ஆதி திராவிட மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதற்கு, அவ்வூர் மக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கிராம மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த பொதுவழியை அடைத்து பாதிரியார் அட்டூழியம் செய்த சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தினமலர் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














 அரசு நிதி உதவிபெறும் கிறிஸ்துவ பள்ளிகள் இவ்வாறு செயல்படுவது மன்னிக்க முடியாதது..அரசு உடனடூ நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தேவையில்லாத கலவரத்தை உண்டு பண்ண நினைக்கின்றனர் கடந்த ஏழு ஆண்டுகளாக இதே நிலைமை மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் அனைத்து கலவரமும் ஒழிந்து விடும்

மதம் மாறியவர்கள் தான் இதற்கு காரணம். பணம் வருவது நின்று விட்டது. பாவடைகள் கடும் விரக்தியில். உங்க ஆளுங்க தங்கம் கடத்த முடியல. அது உங்க பிரச்சினை.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3021351

அடுத்தது பொய் பிரச்சாரம் கிறிஸ்தவர்களுக்கு சொல்கிறார்கள் போலவே தெரிகிறது இஸ்லாமியர்களை தீண்ட ஆரம்பித்தார்கள் முடியவில்லை இப்போது புதியதாக ஆரம்பிக்கிறார்கள்

உண்மை ஏதோ Plan பண்ணி கிருத்தவர்களுக்கு எதிராக தூண்டிவிட பார்கிறார்கள்.. அது பொது பாதை இல்லை ..சர்ச்க்கு சொந்தமான பாதை ..அதை அடைக்கவும் வேறுமாதிரி மதமாற்றம் அப்படி இப்படி என்று கிளப்பிவிடுரான்க

இந்து முஸ்லிம் கிறிஸ்டின் யாரை அழிக்க முடியாது அதை மட்டும் நம்ம தெளிவா இருக்கணும் சூழ்ச்சி செய்பவர்களிடம் சிந்தனையோடு சில விஷயங்களை சிந்திக்கவும் நன்றாக ஒன்று புரிந்து கொள்ளவும் 400 வருடம் 500 வருடம் முன்னதாக எந்த ஒரு விஷயம் நடந்தது நமக்குத் தெரியாது ஹிஸ்டரி சொல்வது மட்டும் தான் நாம் நம்புகிறோம் அந்த ஹிஸ்டரி தவறாகப் படித்து நம்மளை குழப்பவாதிகள் இடமிருந்து சற்று தெளிவாக இருக்க வேண்டும்

ஒவ்வோரு கிருஷ்துவரும் அமேரிக்க லண்டனுக்கு (மாரல்சப்போர்ட்) அதரவாக இருப்பதற்காக இந்தியர்களை மாற்றுவது நோக்கமாக உள்ளது. முதல் உலக போரிலும் இரண்டாம் உலக போரிலும் இந்தியர்களே பெரும்பாலும் பயன்படுத்த பட்டனர். இது போல மூன்றாம் உலக போருக்கும் இந்தியர்கள் உதவியே அவர்களுக்கு தேவையாக உள்ளது. இந்தியர்கள் மட்டுமே மிக பெரிய ஆர்மியாக உள்ளனர். இப்போது கூட ரஷியா உக்ரேன் சண்டைக்கும் இந்தியாவை தேவையில்லாமல் உட்புகுத்த சதி நடக்கிறது. ஐரோப்பியர்கள் சண்டையிட்டு உலகை ஆட்சி செய்யவில்லை. வியாபாரம் என்ற போர்வையில் வந்து சூழ்ச்சி மூலம் பிடித்து நம் மக்களையே வேலைக்கு அமர்த்தி ஆட்சி செய்தார்கள். முடியாத பச்சத்தில் அவர்களே ஒரு கட்சியை ஆரம்பித்து அவர்களின் உதவியுடன் ஆண்டு பின் அதுவும் முடியாத போது அவர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட பணித்தார்கள். இதெல்லாம் அவர்கள் தந்திரம். அதற்காகவே இதுபோல செயல்கள் நடக்கிறது. மதம் மாறுபவர்கள் ரஷியாவுக்கு, ரஷியர்களும் கிருஷ்துவர்களே, ஐரோப்பியர்களே அவர்களுக்கு அதரவாக பேச ஆரம்பித்தால் மத மாற்றம் தேவையில்லாமல் போகும். ரஷியா இது போல ஒரு போதும் ஆதரவு தேடதா நாடு, தூணிவுள்ளநாடு, வல்லமை பொருந்திய நாடு என்பதை உலகறியும்.


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா